வெளி நாடுகளுக்குச் சென்று தொழிலில்-பணியில் சாதிக்க வேண்டும் என்பது, இன்றைய இளைஞர்கள் பலருடைய கனவாக - லட்சியமாக இருக்கும். அவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டா என்பதை அறிய கைரேகை சாஸ்திரம் வழிகாட்டும்.

அதேபோல், `கடல் மாதாவின் ஆசி இருந்தால், வெளிநாடு செல்லும் யோகம் அமையும்’ என்கின்ற ஞானநூல்கள். ஒருவரது கைரேகை அமைப்பைக் கொண்டு அவருக்குக் கடல்மாதாவின் ஆசி உண்டா, படிப்புக்காகவோ வேலை நிமித்தமாகவோ வெளிநாடு செல்லும் யோகம் உண்டா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

கைரேகையைப் பார்க்குமுன், இங்கே தரப்பட்டிருக்கும் படத்தைக் கூர்ந்து கவனிப்பது அவசியம். படத்தில் உள்ளது போன்று...

1. செவ்வாய் மேட்டுக்குக் கீழே கங்கண ரேகைக்கு மேலே நிழலிடப் பட்ட பகுதியே சந்திரமேடு ஆகும். இந்த மேடு உருண்டு திரண்டு இருக்க வேண்டும்.

2. நன்கு அமைந்த புத்திரேகை சந்திரமேட்டின் மேல் பகுதியை வந்தடைய வேண்டும்.

3. சந்திரமேட்டின் மையப்பகுதியில் பயணரேகை தெளிவாக, நேராக, இளம் சிவப்பு நிறத்தில் நன்கு அமைந்திருக்க வேண்டும்.

4. விதி ரேகை நன்கு அமைந்து, சந்திர மேட்டிலிருந்து தொடங்கி, எவ்வித இடையூறும் இல்லாமல் நேர்த்தியாக புத்தி மற்றும் இருதய ரேகையைக் கடந்து செல்ல வேண்டும்.

5. கட்டை விரல் நல்ல நீளத்தில் அமைந்திருக்க வேண்டும்.

கையில் இவ்வாறான ரேகை அமைப்புகளைப் பெற்றவர் எனில், வெளிநாடு செல்லும் யோகம் உண்டு என்று அறியலாம்.
அத்துடன், இப்படியான ரேகைகளைப் பெற்ற அன்பர்களுக்கு நல்ல கற்பனை ஆற்றல், கவி புனையும் ஆர்வம், பயணம் செய்வதில் விருப்பம் இருக்கும். அத்துடன், வெளிநாடு சென்று பொருளீட்டி உயரவேண்டும் எனும் எண்ணமும், உலகைச் சுற்றி வந்து ரசிக்கும் ஆர்வமும் அதிகம் இருக்கும். மேற்சொன்ன அமைப்புகளுடன் சுக்கிரன், புதன் மேடுகள் துணைபுரிவதாக நன்கு அமைந்தால் கூடுதல் விசேஷம்!

24 வயது அளவில், உங்களின் ஆயுள் ரேகையில் மேல் நோக்கிய கிளை ரேகை காணப்படின், அந்த வயதில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். இந்த வயதில் பெயர், புகழ், அந்தஸ்து தரும். சூரிய ரேகையும் காணப்பட்டால், வெளிநாட்டில் வேலை பார்த்து, தமது திறமையை நிர்வாகம் மெச்சும்படி வெளிப்படுத்தி, பதவி உயர்வு பெற்று, பொருளாதார ரீதியாகவும் உன்னதமான உயர்வை அடைவார்கள்.

(25.6.13 இதழிலிருந்து...)

உங்கள் வாக்கு பலிக்குமா?
வாக்குக்குக் காரகன் புதன் ஆவார். புதன் ஆட்சி உச்சமாக வலுத்திருந்தால், வாக்கு ஸித்தி உண்டாகும். வாக்தேவி சரஸ்வதி ஆவாள். புதனையும் சரஸ்வதியையும் வணங்குவதன் மூலம் நல்ல பேச்சு அமையும். வாக்கு ஸித்தியும் உண்டாகும். அதேபோன்று, ஜாதகர் ஒருவருக்கு குரு மற்றும் சுக்ர பலத்தால், எவ்வித எதிர்ப்பாக இருந்தாலும் சமாதான முறையில் பேசிச் சமாளிக்கும் திறன் வாய்க்கும்!

- ராமு, நெல்லை.