Published:Updated:

விரல்களும் குணங்களும்!

விரல்கள் பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
விரல்கள் பலன்கள்

பஞ்சாங்குலி சாஸ்திரம் விரல்கள் பலன்கள் - ஜோதிடர் செய்யனூர் ஆர்.சுப்பிரமணியன்

விரல்களும் குணங்களும்!

பஞ்சாங்குலி சாஸ்திரம் விரல்கள் பலன்கள் - ஜோதிடர் செய்யனூர் ஆர்.சுப்பிரமணியன்

Published:Updated:
விரல்கள் பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
விரல்கள் பலன்கள்

நாம் வாழும் பூமித் தாய்க்கு அனுசரணையாக அமைபவை பஞ்ச பூதங்கள். அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் ஆகிய ஐந்தும் தாரா கிரகங்களான குரு, சுக்கிரன், செவ்வாய், சனி, புதன் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

விரல்களும் குணங்களும்!
Moostocker

பூமியில் பிறவியெடுக்கும் மனிதர்களின் உடலும் பஞ்ச பூதங்களின் கலவையே ஆகும். நம் உடலுக்கு உயிர்ச் சத்தை சூரியனும், மன வளர்ச்சியைச் சந்திரனும் கொடுக்கின்றனர். இப்படியாக உடம்பும் உயிரும் மனதும் பெற்ற மனிதனுக்கு உற்றத் துணையாக விளங்குபவை பஞ்ச இந்திரியங்கள். எனினும், மூளையின் கட்டளைக்கு ஏற்ப அமையும் அவனுடைய செயல்பாடுகளை முன்னெடுக்கும் கருவிகள் விரல்களே என்றால் மிகையாகாது.

உண்பது, உடுப்பது முதல் விமானத்தை இயக்குவது வரை அனைத்துச் செயல்களையும் முன்னெடுப்பவை விரல்களே. மூளையின் நேரடிச் சேவகன் கைவிரல்கள் என்பார்கள். அவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பது எவ்வளவு அவசியமோ, அந்தளவுக்கு கைவிரல், நகம், உள்ளங்கை அமைப்புகளையும் பாதுகாக்கவேண்டும் என்கின்றன சில ஞானநூல்கள்.

கை விரல் நக அமைப்புகள் மனிதனின் குண இயல்புகளை அடையாளம் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. விரல்களில் கட்டை விரலைச் சுக்ர விரல் என்பார்கள். அப்படியே மற்ற விரல்களும் பின்வரும் விவரப்படி ஒவ்வொரு கிரகத்துக்கு உரியதாகத் திகழ்கிறது.

சுட்டுவிரல் - குரு
நடு விரல் - சனி
மோதிர விரல் - சூரியன்
சுண்டு விரல் - புதன்

பொதுவாக சுட்டு விரல் நடு விரலைக் காட்டிலும் அளவில் குறைவாக இருக்கும். இந்த வழக்கத்து மாறாக சிலருக்கு இரண்டும் சம அளவில் இருக்கும். அப்படியான அன்பர்கள், அனைவரது கவனத்தையும் காந்தம் போல் கவர்ந்திழுக்கும் வல்லமை பெற்றிருப்பார். தலைமை தாங்கும் தகுதியுடன் இருப்பார். இதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் மாமன்னர் நெப்போலியன் என்பார்கள்.

மோதிர விரலும் நடு விரலும் சரிசமமாக அமைந்துவிட்டால், அந்த அன்பர், துணிச்சலாக முடிவெடுப்பார். தயக்கம் இருக்காது. சிலநேரங்களில் இவர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போய்விடுவதும் உண்டு.

கங்கணரேகையிலிருந்து நடுவிரலின் நுனிவரையிலுமான நீளமே உள்ளங்கை நீளம் ஆகும். இதில் நடுவிரலில் தனிபட்ட நீளமானது உள்ளங்கையின் மொத்த நீளத்தில் முக்கால் பங்கு அமையவேண்டும் என்பது பொதுவிதி. இதை அடிப்படையாகக் கொண்டே கைவிரல்கள் நீளம் குறைந்தவையா அதிகம் கொண்டவையா என்பதைக் கணக்கிடுவர்.

அவ்வகையில் நீளமான விரல்களைப் பெற்றவர்கள் நிதானமாகச் செயல்படுவார்கள். முடிவெடுப்பதில் தயக்கம் இருக்கும். எனினும் தீவிரமாக சிந்தித்துச் செயல்படுவார்கள். இவர்கள் ஏரி, குளங்களில் உள்ள நீரைப் போன்றவர்கள் என்றே கூறலாம். இவ்வகையான விரல்களைப் பெற்றோர் விஞ்ஞானிகளாக, மேதைகளாக, சிந்தனையாளர்களாக, ஆராய்ச்சியாளர்களாக விளங்குவர்.

மேற்சொன்ன பொதுவிதிப்படி நீளம் குறைவான... அதாவது குட்டையான விரல்களைப் பெற்றவர்கள், எந்த ஒரு விஷயத்திலும் உடனடியாகத் தீர்வு காண்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். காட்டாற்று வெள்ளம் போன்று வேகமாகச் செயல்படுவார்கள். அதிகார அந்தஸ்து பதவிகளில் உள்ளோர், அரசியல்வாதிகள், மருத்துவம், பாதுகாப்பு - ராணுவம், காவல் துறையில் இருப்பவர்கள் இவ்வகை விரல் அமைப்பைப் பெற்றிருப்பார்கள்.

விரல்களும் குணங்களும்!

விரல் அமைப்பு அடிப்படையில் பலன் சொல்வார்கள். சிலரின் விரல்கள், அவற்றின் கணுக்களுக்கு இடையேயான பகுதி உடுக்கை போன்று ஒடுங்கி காணப்படும். இதுபோன்ற அமைப்புள்ளவர்கள் எதிலும் ஓர் ஒழுங்கினை எதிர்பார்ப்பார்கள்; சிறிய விஷயத்திலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள். சதைப் பற்றுடன் விரல் முழுவதும் சமமாக இருந்தால் மேம்போக்காகவே செயல்படுவார்.

நகங்களும் ஒருவரின் குணாதி சயங்களைச் சொல்லும். இளஞ்சிவப்பு வண்ணத்தில் நகங்கள் அமைவது ஆரோக்கியமான அமைப்பு. இவர்களுக்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்கும். பிணிகள் வந்தாலும் விரைவில் குணமாகும் எனலாம். நகங்களின் கீழ்ப் பகுதியில் உள்ள பிறைச் சந்திர வடிவம் உடல்நலத்தை எடுத்துக் காட்டும்.

நகங்கள் நீளமாக அமைந்தால் அமைதி, மென்மை, கலைகளில் ஈடுபாடு, கற்பனை வளம் அமையும். இப்படியான அமைப்புள்ள அன்பர்களுக்கு உயர்ந்த எண்ணமும் குறிக்கோளும் இருக்கும். இவர்களுக்கு மார்பு, நுரையீரல், தலை பாகங்களில் பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் உண்டு.நகங்கள் சிறிதாக அமைந்தால் எதையும் விமர்சனம் செய்யும் கெட்டிக்காரத்தனம், அரசியல், சினிமா விமர்சனங்களில் ஆர்வம் இருக்கும். இதய நோய் வரும் வாய்ப்பு உண்டு. அடிக்கடி நகங்களை கடிக்கும் பழக்கம் கொண்டவர், வீண் பதற்றம் மற்றும் கவலை கொண்ட நபராக இருப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism