தொடர்கள்
Published:Updated:

நீங்கள் என்னென்ன சாப்பிடலாம்?

உணவும் ஜோதிடமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவும் ஜோதிடமும்!

ஆதிக்க எண் விளக்கங்கள் - கார்த்திக்

நீங்கள் உங்களின் சுவாசத்தைக் கவனித்திருக்கிறீர்களா? திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இடது நாசி வழியே சுவாசம் வருவது நல்லது. ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் வலது நாசி வழியே சுவாசம் பாய்வது சிறப்பு. இந்த நிலை வேறு பட்டு திகழ்ந்தால், உடம்பில் பிரச்னைகள் இருக்க வாய்ப்பு உண்டு எனும் தகவல் பிரச்ன ஜோதிடத்தில் உண்டு. இதேபோல் ஆதிக்க எண் அடிப்படையில் உடற்பிணிகள், உணவுகள் குறித்த விளக்கங்களையும் பண்டைய ஞானநூல்கள் தருகின்றன!

நீங்கள் என்னென்ன சாப்பிடலாம்?
Deepak Sethi

இங்ஙனம் நம் உடற்கூறுகளின் தன்மைகள், பிணிகள் ஏற்படும் நிலை, மருத்துவ சிகிச்சை தொடர்பான ஜோதிடத் தகவல்கள் நம் பண்டைய நூல்களில் உண்டு. மேலை நாட்டு அறிஞர் ஷீரோ என்பவர் ஜோதிடம், எண் ஜோதிடம், கைரேக சாஸ்திரம் ஆகியவை குறித்து ஆய்ந்தறிந்து, பொதுவான பிணிகள் குறித்து அவர் அளித்த தகவல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.

நம்முடைய ஜோதிட ஞானநூல்களும் ஆதிக்க எண், அதில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ள பிணிகள், தீர்வுகள் குறித்து விளக்குகின்றன. உடனே `இந்த எண்ணில் பிறந்தால் இந்த நோயால் நிச்சயம் பாதிக்கப்படுவோம்’ என்று பயமோ பதற்றமோ அடையத் தேவை இல்லை. இவை பொதுவான தகவல்களே. அவரவர் ஜாதகத்தைத் துல்லியமாக ஆய்ந்தறிந்தே அவரவருக்கான பலன்களை அறியவேண்டும்.

நீங்கள் என்னென்ன சாப்பிடலாம்?
svetikd

1, 10, 19, 28: இந்த தேதிக்காரர்களை ஆள்பவர் சூரியன். ஆளுமைத் திறனும் தலைமை தாங்கும் சக்தியும் இவர்களுக்கு உண்டு. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்குப் பொதுவாக இதய நோய்கள், படபடப்பு, ரத்த அழுத்தம் மற்றும் கண்பார்வை பாதிப்பு வரலாம். ஆரஞ்சு, எலுமிச்சை, பேரீச்சை இவர்கள் உண்ண வேண்டிய கனிகள்.

2, 11, 20, 29: ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் அதிதேவதை அம்பாள். இவர்கள் இனிமையானவர்கள்; நட்பு, பாசம் உள்ளவர்கள். அதேநேரம் சட்டென உணர்ச்சிவசப்படுவார்கள். இவர்களுக்கு செரிமானம் தொடர்பான பிணிகள், சிறுநீரகம், ஈரல் தொடர்பான பாதிப்புகள் சுகர் பிரச்னை ஏற்படலாம். இவர்களுக்குக் கோதுமை நன்மை தரும். பாகற்காய், முட்டைகோஸ், வாழை, முலாம்பழம், வெள்ளரிப் பழம், கீரை வகைகள் ஏற்றவை.

3, 12, 21, 30: தேதிகளில் பிறந்தவர்கள் சுகத்தை விரும்புகிறவர்கள். அலங்காரத்தில் ஈடுபாடு உண்டு. நவகிரகங்களில் புதன் இந்த எண்ணுக்கு அதிபதி. இவர்களுக்குத் தோல், நரம்பு, மூச்சு தொடர்பான பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. அன்னாசி, திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, அத்திப்பழம், பாதாம் ஆகியவை ஏற்றவை.

4, 13, 22, 31: ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், ஒழுக்கம் தவறாமல் உழைத்து உயர்பவர்கள். இவர்களுக்குப் பொதுவாக வாயுக் கோளாறு ஏற்படலாம் மேலும் தலை மற்றும் முதுகுப் பாகங்களில் வலி வரலாம். இவர்கள் வாயு பாதிப்புகளை உண்டாக்கும் பதார்த் தங்களையும் காரம், புளியையும் தவிர்ப்பது நல்லது. இஞ்சி, சுக்கு, மிளகு, திப்பிலி, எலுமிச்சை ஆகியவற்றை தேவைக்கேற்ப சேர்க்கலாம்.

5, 14, 23: ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்குப் பல்துறைத் திறமை, சொல்வன்மை இருக்கும். பிடிவாதமும் உண்டு. சொந்த உழைப்பால் பொருளீட்டி உயர்வார்கள். மஹா கணபதியும், முருகப் பெருமானும் இவர்களுக்கு அனுக்ரஹம் செய்யும் தேவர்கள். இவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, பாரிச வாயு, தூக்கக் குறைவு வரலாம். பாதாம், பிஸ்தா, கேரட், பீட்ரூட் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.

நீங்கள் என்னென்ன சாப்பிடலாம்?
Macrovector

6, 15, 24: இவர்களை ஆளும் தெய்வம் முருகன். 6-ன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள், பொறுமைசாலி; தர்ம சிந்தனை உள்ளவர்; இந்தத் தேதிக்காரர்களுக்கு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இதயம் சார்ந்த பிணிகள் வரலாம். மேலும் மூக்கு, தொண்டைப் பிரச்னைகளும் அவ்வப்போது ஏற்படலாம். கீரைகள், பீன்ஸ், ஆப்பிள், மாதுளை, அத்தி, முலாம்பழம், பால், தேன் ஆகியன பலன் தரும்.

7, 16, 25: சந்திரனும் சூரியனும் ஏழாம் எண் காரர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். இவர்கள், தங்கள் மனதால் விரும்பி யதை ஆன்ம பலத்தால் அடையும் ஆற்றல் உள்ளவர்கள். இவர் களுக்குத் தோல் வியாதிகள், மனச் சோர்வு, உஷ்ணக் கட்டிகள் வரலாம். உணவில் முட்டைகோஸ், பூசணி, வெள்ளரி, திராட்சை, அன்னாசி, ஆரஞ்சுப் பழரசங்கள் சேர்க்கலாம்.

8, 17, 26: பிறந்த எண் எட்டாக இருந்தால், சுயதொழில், வாணிகம், அரசியல் போன்ற துறைகளில் வெற்றி பெறுவார்கள். இவர்களுக்கு பித்தம் சார்ந்த நோய்கள் பிரச்னை தரும். இயன்றவரையிலும் அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்.

9, 18, 27: ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆழ்ந்த அறிவும், உயர்ந்த சிந்தனைகளும் கொண்டவர்கள். இவர்களுக்கு உஷ்ண வியாதிகள், அம்மை நோய்கள், ரண காயங்கள் வரலாம். அடிக்கடி மோர் அருந்துவது சிறப்பு. வெயில் காலங்களில் இளநீர் சேர்க்கலாம். உணவில் உப்பு, புளி, காரத்தை இயன்றளவு குறைத்த்துக்கொள்ள வேண்டும்.