Published:Updated:

கணப் பொருத்தம்!

கணப் பொருத்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
கணப் பொருத்தம்

டி.எஸ்.என்

நல்ல மண வாழ்க்கை அமைய திருமணப் பொருத்தங்கள் மிக அவசியம். தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மாகேந்திரப் பொருத்தம், ஸ்திரி தீர்க்கம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், வேதை பொருத்தம் ஆகிய பத்துப் பொருத்தங்களைக் குறித்து ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இவற்றில் கணப் பொருத்தம் மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகிறது.

இருபத்தேழு நட்சத்திரங்களையும் தேவ கணம், மனித கணம், ராக்ஷஸ கணம் என மூன்றாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு கணத்திலும் 9 நட்சத்திரங்கள் அடங்கும்.

கணப் பொருத்தம்!

ஆண்-பெண் இருவர் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் சிறப்பாக அமையும். ஆண், பெண் இருவர் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும், கணப்பொருத்தம் அமையும். தேவகணம், மனித கணம் ஆகிய பிரிவில் அடங்கும் நட்சத்திரங்கள் உள்ள ஆண்-பெண் ஜாதகங்களுக்கும் கணப்பொருத்தம் உண்டு எனக் கொள்ளலாம். ஆண்-பெண் இருவர் நட்சத்திரங்களும் அசுர கணத்தில் இருந்தால் கணப்பொருத்தம் இருக்காது. தேவ கண நட்சத்திரங்களுக்கு ராக்ஷஸ கண நட்சத்திரங்கள் பொருந்தாது. மனித கண நட்சத்திரங்களுக்கு ராக்ஷஸ கண நட்சத்திரங்கள் பொருந்தாது.

என்ன காரணம்?

குணங்களில் ஸத்வ, தமோ, ரஜோ என மூன்று வகை குணங்கள் உண்டு என்கிறது வேதம். இவற்றின் பிரதிபலிப்பே தேவ, மனித, ராக்ஷஸ கண நட்சத்திரங்கள்! இவை, தனி மனிதனின் குணாதிசயங்களை ஓரளவு வெளிப்படுத்தும். மிகவும் ஸாத்விகமான ஒரு பெண்ணுக்கு ராக்ஷஸ குணம் உள்ள கணவன் அமைந்தால் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா?

கணப் பொருத்தம்!

குணாதிசயங்கள் முற்றிலும் முரண்பாடாக உள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நிகழ்ந்தால், அவர்களின் வாழ்க்கை மன இறுக்கத்துடன் கரடுமுரடான பாதையில்தான் செல்லும். அதனால், மண முறிவுகூட ஏற்படலாம். இன்றைய சூழலில், மற்ற பொருத்தங்கள் சிறப்பாக அமைந்தால், கணப்பொருத்தத்துக்கு சில விதிவிலக்குகள் தருகிறார்கள். அது ஜோதிடரின் கணக்கீட்டின்படி அமைய வேண்டும்.