Published:Updated:

மிதுன ராசிக்காரர்களே நீங்கள் இப்படித்தான்!

மிதுன ராசி!
பிரீமியம் ஸ்டோரி
மிதுன ராசி!

மிதுன ராசி குணாதிசயங்கள் மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

மிதுன ராசிக்காரர்களே நீங்கள் இப்படித்தான்!

மிதுன ராசி குணாதிசயங்கள் மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
மிதுன ராசி!
பிரீமியம் ஸ்டோரி
மிதுன ராசி!

மிதுனம் - உபய ராசி. ராசிச் சக்கரத்தில் 60 முதல் 90 பாகை வரையிலும் இருக்கும் பகுதி. மிதுன ராசியில் அடக்கம். ஆண்-பெண் இருவரது இணைப்புக்கு மிதுனம் என்ற பெயர் உண்டு. ஆம், பெண்மையும் ஆண்மையும் சம அளவில் மிளிரும் ராசி.
இந்த ராசியைச் சேர்ந்த அன்பர்களுக்கு, சேர்ந்து வாழும் இயல்பும் சுகாதாரத்தில் எச்சரிக்கை யோடு செயல்படும் எண்ணமும் இருக்கும்.

மிதுன ராசிக்காரர்களே 
நீங்கள் இப்படித்தான்!

உபய ராசியின் இயல்பானது, ஒரு செயலில் இரண்டு பலன்களை எதிர்பார்க்கும். அவ்வகையில் இந்த ராசியினருக்கு இருபொருளில் பேசும் திறன் இருக்கும். ஒரு கல் இரண்டு மாங்காய் என்ற இலக்கு இருக்கும். இவர்களின் செயல்பாடு விருப்பத்துக்கு இணங்க மாறிக் கொண்டிருக்கும். ஒரே தருணத் தில் பல வேளைகளில் கண்ணோட்டம் இருக் கும். தீராத பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதில் ஆர்வம் இருக்கும்.

லக்னத்துக்கு அதாவது மிதுன ராசிக்கு அதிபதி புதன். மிருகசீர்ஷத்தின் பிற்பகுதியும், திருவாதிரையும், புனர்பூசத்தின் முக்கால் பங்கும் இந்த ராசியில் அடங்கும். ஆக, செவ்வாயும் (மிருகசீரிஷம்) ராகுவும் (திருவாதிரை) குருவும் (புனர்பூசம்) நட்சத்திரம் வாயிலாக மிதுன ராசிக்கு அனுகூலம் செய்வர்.

அதேபோல், ராசிச் சக்கரத்தின் கோண ராசிகளில் முதலாவது மிதுனம். இங்கு எந்த கிரகமும் உச்சமாகவோ, நீசமாகவோ இருக்காது. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் முக்கோண ராசிகள். இவற்றில் அடங்கிய நட்சத்திர பாதங்களுக்கு, தசா காலம் ஒன்றாக இருக்கும்.

சுக்கிரனும் (5-ல்), சனியும் (9-ல்) பல வழிகளில் நன்மையை செய்யக் காத்திருப்பர். எனவே, இந்த ராசிக் காரர்கள் உழைப்பில் செல்வம் பெருகிட செல்வச் சீமானாக விளங்குவர்; இன்பத்தை அனுபவிக்கும் திறனும் நிரம்பியிருக்கும்.

5-க்கு உடைய சுக்கிரன் விரயத்துக்கும் (12) அதிபதி. ஆகவே, பொருளாதாரம் மேல்-கீழாக தடுமாற்றத்தைச் சந்திக்கவும் வாய்ப்பு உண்டு. அதேநேரம் கும்பத்துக்கு உடைய சனி பாக்கியாதிபதி (9). ஆதலால், பொருளாதார வீழ்ச்சியை உழைப்பின் மூலம் சரிசெய்து விடுவார்கள்.

எனினும் சுலபமான வழியில் அடைய வேண்டியதை அதிகமான உழைப்பை அளித்துப் பெறுவர். சேமிப்பில் இருக்கும் ஆர்வம், செலவு செய்வதில் சுணக்கமுறும்.

சுக்கிரனும் சனியும் பலம்பொருந்தி இருந்தால், தொழிலில் முன்னேறி சமுதாய அங்கீகாரம் பெறுவர். தரத்திலும் அந்தஸ் திலும் உயர்வு இருந்தாலும் உழைப்பாளியாகக் காட்டிக் கொள்வதில் ஆர்வம் இருக்கும்.

மிதுன ராசிக்காரர்களே 
நீங்கள் இப்படித்தான்!

புதக்ஷேத்ரமாக (மிதுனம்) இருப்பதால் விஷயத்தை அலசி ஆராய்வதிலும், வாத-ப்ரதிவாதங்களிலும் திறமை இருக்கும். புதிய பொருள்களிலும் புதுப்புது தொழில்களிலும் ஈர்ப்பு இருக்கும். அதேபோல் எச்சரிக்கையுடன் பழகும் பாங்கும் பொருளீட்ட பல வழிகளைத் தேர்ந்தெடுக்கும் துணிவும் இருக்கும். எனினும் புதுத் தொழில்முறையைத் தோற்று விக்கும் திறன் இருக்காது. பலரது கண்டுபிடிப்பில் இணைந்து, தனது லாபத்தைப் பெருக்க முற்படுவது உண்டு.

தன்னைச் சார்ந்தவர்களிடம் வலுவான நட்பு இருக்காது. ஆனாலும் கசப்பை வரவழைக்காமல் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் உண்டு. எதையும் வியாபார நோக்குடன் பார்த்து சுயநலத்தைப் பூர்த்தி செய்ய விரும்புவர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர் எண்ணிக்கை குறைவே.

ராசிநாதன் புதன் தனது வீடான கன்னியில் உச்சம் பெறுவது தனிச் சிறப்பு. வீடு-வாகனம் போன்றவற்றை முழுமையாக அனுபவிக்கும் யோகம் இருக்கும். புதன், கர்மத்தில் (10-ல் மீனத்தில்) நீசம் பெற்று இருந்தாலும், பூர்வபுண்ய ஸ்தானாதிபதியின் (5-ல் சுக்கிரனின்) உச்ச ராசியாக இருப்பதால், பொருளாதாரத்திலும், தொழிலிலும், கல்வியிலும் அகண்ட இடைவெளி ஏற்படாமல் இருக்கும்.

5-ஆம் பாவாதிபதி சுக்கிரனின் (துலா) ராசியில், பாக்யாதிபதி சனி உச்சம் பெற்று இருக்கும் ராசியான படியால், ‘தொழில் துறையிலும் வேலையிலும் சங்கடத்தை ஏற்படுத்தாது. எதிரிடையான மற்ற கிரகங்களின் தாக்கத்தில் தரம் தாழ்ந்தாலும், அடிமட்டத்துக்குப் போகாமல் திரும்பவும் துளிர் விட்டு செழிக்கும் வாய்ப்பு உண்டு.

2-க்கு (கடகம்) உடைய சந்திரன் 12-ல் (வ்ருஷபம்) உச்சம் பெறும் ராசியாக இருப்பதால், சேமிப்பின் இழப்பில் துயரத்தைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கும்.

மிதுன ராசிக்கு உச்சம், ஸ்வக்ஷேத்ரம்- இவற்றில் சனியின் பங்கு பெருமை அளிக்கும். ஆன்மகாரகன் (சூரியன்) மூன்றுக்கு அதிபதியாக இருந்தாலும் ‘8-ன்’ 8-ல் இருப்பதால் (அதாவது மிதுனத்துக்கு மகரம் எட்டு. மகரத்துக்கு சிம்மம் 8), அது ஆயுஸ்தானம். ஆதலால் எதிரிடையான பலனை அளிக்கமாட்டார். அதேநேரம், சூரியன் துலாத்தில் நீசம் பெற்று இருந்தால், தொழிலிலும் பொருளாதாரத்திலும் செல்வாக்கு குறைந்து மன அமைதியை இழக்க நேரிடும்.

மிதுன நவாம்சக தசைகள் ஆரம்பத்தில் செவ்வாய், ராகு, குருவாக இருக்கும். இது துலா, கும்ப நவாம்சகங்களுக்கும் பொருந்தும். ஆயுளில் மூன்றில் ஒரு பங்கில்... முதல் பங்கில், இந்த மூவரும் தங்களது தசைகள் வாயிலாக, பூர்வபுண்யத்தில் செயல்படத் தயாராக இருக்கும் புண்ணியம் அல்லது பாபத்தை நடைமுறைப்படுத்துவர்.

6-க்கும் 11-க்கும் உடைய செவ்வாயின் தசை, அனுபவிக்க வேண்டிய துயரத்தை அறிமுகம் செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால், உபசய ஸ்தானத்தில் இருந்து பலம் பெற்றால், அவர் துயரத்துக்கு பதிலாக நன்மையை வெளிப்படுத்த முற்படுவார். இதில் ஷோடச பலன் களை ஆராய்ந்து பலனை இறுதியாக்க வேண்டும்.

ராகுவும் நிஸர்கபாபி. ஆனால் அவருக்கு வீடு இல்லை. சொந்த வீடு இல்லாதவருக்கு புகுந்த வீடெல்லாம் அவரது வீடாகி விடும். ஆகையால், நல்லதும் கெட்டதும் ஜாதகத்தில் அவர் அமர்ந்த ராசிநாதனைப் பொறுத்தது. ராகுவின் தசை 18 வருஷங்கள் முழுமையாக இருக்கும். நீண்ட காலம் கெட்ட ராகுவின் தசை, ஜாதகரின் பால்யத்தை அலைக்கழிக்கும். அதேநேரம், தாம் அமர்ந்திருக்கும் ராசிக்குரிய ராசி நாதனின் தன்மையில் பெருமை அளிக்கவும் செய்வார்.

இருபத்து ஒன்றரை வயதுக்குப் பிறகு (அதாவது மிருக சீரிஷம் 3-ஆம் பாதம் சார்ந்தவருக்கு), குரு தசை ஆரம்பமாகும். பால்யத்தில் எட்டரை வருடங்கள் குருவின் பங்கு இருக்கும். 7-க்கும், 10-க்கும் உடைய குரு பலவா னாக இருந்தால், இளமையின் ஆரம்பம் இன்பமயமாகத் திகழும்.

மிதுன ராசிக்காரர்களே 
நீங்கள் இப்படித்தான்!

பொதுவாக இந்த ராசிக்காரர்களுக்கு ஆரம்ப கால பால்யம் செவ்வாய், ராகு, குரு இவர்கள் மூன்று பேரின் செயல்பாட்டில் நிர்ணயிக்கப்படும். இளமையும், முதுமையும் செழிப்பாக இருக்க இடமுண்டு. உண்மையில், பால்ய காலம் விளையாட்டில் கடந்து போவதால் துயரம் அல்லது மகிழ்ச்சியின் தாக்கம் பெரிய மாறுதலை ஏற்படுத்தாது. சனி, புதன், கேது, சுக்கிரன் தசைகள் படிப்படியாக செயல்படும்.

மிதுன ராசிக்காரர்கள், புதனை வழிபடுவதுடன், சுக்கிரனையும் சனியையும் வழிபடலாம். முக்கோண ராசிகள் பிறந்த லக்னத்துக்கு ஒப்பாகும். ஆகையால் அடிப்படைத் தகுதிகளை இறுதி செய்யும் இந்த மூவரையும் வழிபடுவது சிறப்பு.

பும் புதாயநம: சும் சுக்ராயநம: சம் சனைச்சராயநம: என்ற மந்திரத்தை வழிபாட்டில் பயன்படுத்தலாம். தலை விதியை அழிக்க முடியாது என்ற சிந்தனை இருந்தாலும், துன்பத்தைச் சந்திக்கும் வேளையில், அவர்களது நினைவு எளிதாக துன்பத்தைத் தாண்ட உதவும்.

புதன், சுக்கிரன், சனி ஆகியோரின் மூலமந்திரத்தைப் பயன்படுத்தியும் வழிபடலாம். அன்றாட வாழ்வில் சந்திக்கும் துயரத்தை, எளிதில் தாண்ட இந்த வழிபாடு வரப்பிரசாதம் ஆகும்.

(கடக ராசி குணாதிசயங்கள் அடுத்த இதழில்...)

செவிகளில் மச்சம்!

ம் உடம்பில் உள்ள மச்சங்களைக் குறிப்பிட்டு, அதற்கேற்ப அமையும் குணாதிசயங்களை விளக்கு கின்றன அங்கலட்சண நூல்கள். அவ்வகையில் நம் காதுகளில் மச்சம் அமைந்தால் என்ன பலன் தெரியுமா?

வலது செவியில் மச்சம் அமைந்திருப்பது, ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். பலவிதமான தொழில்களில் நல்ல பயிற்சியும், தேர்ச்சியும் இருக்கும். பெற்றோரிடமும் மனைவியிடமும் அதிக பாசம் இருக்கும். இடது பக்க செவியில் மச்சம் இருப்பது, ஆண்களுக்கு நல்ல பலனை அதிகம் தருவதில்லை. பெண்களுக்குச் சிறந்த பலனைத் தரும். பணி எதுவாயினும் முயற்சியுடன் வெற்றியடைவார்கள். பிற்பகுதி வாழ்க்கை இவர்கள் விரும்பியவாறு அமையும்.

-சு.வசந்தா, சென்னை-4