Published:Updated:

வெற்றியும் வளர்ச்சியும் பெண்களுக்கே! - 2022 புத்தாண்டு பொதுப்பலன்

புத்தாண்டு பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தாண்டு பலன்கள்

இந்த வருடம் கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பதால், மக்களின் செயல்பாடுகளில் ஒருவித மந்த நிலை காணப்படும்.

சனிக்கிழமை - தேய்பிறையில் சம நோக்கு கொண்ட கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சதுர்த்தசி திதி, கண்டம் நாமயோகம் - பத்திரை நாமகரணம், நேத்திரம் குறுகிய, ஜீவனம் நிறைந்த மந்தயோக நாளில்-நள்ளிரவு 12 மணிக்கு 2022 புத்தாண்டு பிறக்கிறது.

வெற்றியும் வளர்ச்சியும்  பெண்களுக்கே! - 2022 புத்தாண்டு பொதுப்பலன்

ண் ஜோதிடப்படி கற்பனை, காவிய கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்தில் (2+0+2+2=6) பிறப்பதால், இந்த ஆண்டு முழுவதும் பெண்களின் ஆதிக்கம் அதிகமாகும். குடும்பம் முதல் அரசியல் வரை பெண்களின் கை ஓங்கும். அவர்களுக்கு இந்தப் புத்தாண்டு பெரிய வளர்ச்சியையும் வெற்றியையும் அள்ளித் தரும். அடக்குமுறையிலிருந்து வெளிவந்து, தங்களுக்கென்று தனி வழியை அமைத்து, சாதிப்பார்கள்.

இந்த ஆண்டின் கூட்டு எண் (1+1+2+0+2+2) 8 என வருவதால் மக்களிடையே போராட்ட குணம் அதிகமாகும். வீண் வதந்தி, போலி விமர்சனங் களுக்காகப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாகும்.

2022-ம் ஆண்டு மாயா வருடம். அதாவது போலியான வருடம் என்பார்கள். அரசியல்வாதிகள் போலியான வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பார்கள். சினிமாக் கலைஞர்களுக்குச் சில பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக 26.2.2022 முதல் மார்ச் 8-ம் தேதி வரை பாதிப்பு அதிகம் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் ஒரே வீட்டில் சுக்கிரன், செவ்வாய், சனி, புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் ஒன்றுசேர்வதால், நோய்க் கிருமிகள் அதிகம் பரவக் கூடும்.

மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வருடம் கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பதால், மக்களின் செயல்பாடுகளில் ஒருவித மந்த நிலை காணப்படும். கால புருஷத் தத்துவப்படி 8-வது ராசியில் இந்த வருடம் பிறப்பதால் பொது மக்களிடையே சின்ன சின்ன மனக் கஷ்டங்கள் அதிகரிக்கும். விபத்து, வெறுப்பு, விரக்தி மனப்பான்மை, நெருப்பால் பாதிப்பு போன்றவை இருக்கும்.

2022 புத்தாண்டு பிறக்கும்போது சந்திரன், செவ்வாய், கேது ஆகிய மூன்று கிரகங்கள் சேர்ந்து நிற்பதால், ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கும். தீவிரவாதிகள் நவீனமுறையில் தாக்குதல் நடத்துவார்கள். இந்த ஆண்டு பிறக்கும் ராசிக்கு 3-ம் வீட்டில் சனியும், புதனும் சேர்ந் திருப்பதால் ஐ.டி நிறுவனம் பெரிதாக வளரும். நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புறங்களிலும் நெட்வோர்க் வசதி அதிகமா கக் கிடைக்கும்.

4-ம் இடத்தில் குரு நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் விளைச்சல் குறைவு, வெள்ள பாதிப்பு போன்ற பாதிப்புகள் விலகும்; இந்த வருடம் விவசாயம் செழிக்கும். கரும்பு போன்ற பயிர்கள் அதிகமாக விளையும். கால்நடைகளும் நன்றாக வளரும். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது குறையும்.பொருளாதாரத் தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். அரசாங்கக் கடன் இந்த வருடம் பெருமளவு பைசல் ஆகும். சுக்கிரன் 2-ம் வீட்டில் நிற்பதால், நம் நாடு உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கக் கூடிய அமைப்பு உண்டாகும்.

செவ்வாய், சூரியன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் வரிசையாக அடுத்தடுத்து நிற்பதால் அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக விமான நிலையங் கள், ரயில்வே மையம் போன்றவை.

மாணவர்களுக்கு இந்த வருடம் அருமையாக இருக்கும். பள்ளிக்கூடங்கள் இயல்பாக இயங் கும். சித்திரை மாதப்பிறப்புக்குப் பிறகு உலகளவில் பொருளாதார வளர்ச்சி, மக்கள் நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் மேம்படுதல் போன்றவை நடக்கும்.

பொதுவாகவே மக்கள் பிறர் சொல்லைக் கேட்டு செயல்படாமல், புதியவர்களை எதிர்பார்க்காமல், சுயமாக முடிவெடுத்துச் செயல்பட்டால் அதிக வெற்றியை ஈட்டலாம். எடுத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவு அடைந்து, புத்தாண்டு முழுக்கவும் ஆனந்த மாக அமையும்.

மொத்தத்தில் இந்த 2022 புத்தாண்டு மினுமினுப்பான ஒரு மாயாஜால வருடமாக இருக்கும். அதேநேரம், பெரும்பாலான துறைகளில் வளர்ச்சியைத் தருவதாக அமையும்.