Published:Updated:

சிறப்பான வெற்றியைக் கொடுக்கும் 28-வது நட்சத்திரம்! அபிஜித் நட்சத்திர ரகசியங்கள்!

அபிஜித் நட்சத்திரம்

அபிஜித் நட்சத்திர வேளையில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் முடியும். இந்த நேரத்தில் எந்த தோஷமும் இல்லை. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த தடங்கலும் இல்லை.

சிறப்பான வெற்றியைக் கொடுக்கும் 28-வது நட்சத்திரம்! அபிஜித் நட்சத்திர ரகசியங்கள்!

அபிஜித் நட்சத்திர வேளையில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் முடியும். இந்த நேரத்தில் எந்த தோஷமும் இல்லை. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த தடங்கலும் இல்லை.

Published:Updated:
அபிஜித் நட்சத்திரம்

நமக்கு எல்லாம் தெரிந்த 27 நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருபத்தி எட்டாவதாக ஒரு நட்சத்திரம் உள்ளது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுதான் அபிஜித் நட்சத்திரம். உத்திராடத்திற்கும் திருவோணத்திற்கும் நடுவில் இடம் பெற்றிருக்கக்கூடிய சூட்சும நட்சத்திரம்தான் இந்த அபிஜித் நட்சத்திரம்.

திருமால்
திருமால்

இது மகர ராசியில் அமைந்திருக்கிறது. உத்திராடம் நான்காம் பாதம் மற்றும் திருவோணம் முதல் பாதம் மற்றும் 2 -ம் பாதத்தில் வரக்கூடிய நட்சத்திரம் இது. பிரம்ம சுவரூபமான இந்நட்சத்திரத்தின் ஸ்தானம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடைய தலையில் இருக்கக்கூடிய மயிலிறகு என்கிறது மகாபாரதம். இந்த நட்சத்திரத்தின் மகிமையும் மகாபாரதத்தில் உள்ளது.

மகாபாரதத்தில் குருசேத்திரப் போர் தொடங்கும் முன்பு சகுனி சகாதேவனிடம் சென்று 'எந்த நேரத்தில் போரைத் தொடங்கினால் வெற்றி பெற முடியும்' என்று நேரம் குறித்துக்கொண்டு வரும்படி துட்சாதனனை அனுப்பினார். சோதிடத்தில் வல்லுநனரான சகாதேவன், எதிரிகள் என்பதால் உண்மையை மறைக்காமல், அவர்கள் வெற்றி பெறும் வகையில் அபிஜித் நட்சத்திரம் தோன்றும் நேரத்தைக் குறித்துக் கொடுத்து அனுப்பினான். இதனைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணன் அந்த நட்சத்திரத்தில் கௌரவர்கள் போரைத் தொடங்கினால் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதால் வானில் இருந்த அபிஜித் நட்சத்திரத்தை எடுத்து தன் மயிலிறகில் மறைத்து வைத்துக் கொண்டார். மறுநாள் போர் தொடங்கும் வேளையில் இந்த நட்சத்திரத்தின் பலன் இல்லாமல் போகவே கௌரவர்கள் போரில் தோற்றுப் போயினர் என்கிறது பாரதம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்

இதுவே இந்த நட்சத்திரத்தின் பெருமையையும் யோகத்தையும் கூறும் தகவல் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அபிஜித் நட்சத்திரம் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் எந்த வேலையைத் தொடங்கினாலும் அவ்வேலை நிச்சயம் வெற்றி பெறும். இதனாலேயே பாரதப் போர் முடிந்ததும் தேவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அந்த நட்சத்திரத்தை மீண்டும் அதனிடத்தில் வைக்குமாறு வேண்டுதல் செய்தனர். கலியுகத்தில் மனிதர்கள் பெரும் தவறுகள் செய்வர் என்றும், அபிஜித் நட்சத்திரத்தில் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் அதன் பயன் அலாதியாக இருக்கும். ஆகவே அது இன்னும் பெரிய தீங்குகளுக்கு வழி வகுக்கும் என்று கூறி அந்த நட்சத்திரத்தை அவர் மறைத்தே வைத்துவிட்டார்.

தேவர்கள் மிகவும் மன்றாடிக் கேட்கவே தினமும் பகல் 11.45 - லிருந்து 12.15 மணி வரை (12 முதல் 12.30 என்றும் சில ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள்) மட்டும் அபிஜித் நட்சத்திரத்தை வானில் தோன்றுமாறு அருள் செய்தார். இதனால்தான் இந்த நட்சத்திரம் ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுடன் சேராமல் உள்ளது என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். மேலும் உத்திராடம் 4-ம் பாதம் திருவோணம் 1-ம் பாதங்களில் பிறந்தவர்கள் அபிஜித் நட்சத்திரகாரர்கள். அதனால் இவர்கள் வெற்றியாளர்களாக, தோல்வியைக் கண்டு துவளாதவர்களாக இருப்பார்கள்.

அபிஜித்
அபிஜித்

அபிஜித் நட்சத்திர வேளையில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் முடியும். இந்த நேரத்தில் எந்த தோஷமும் இல்லை. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த தடங்கலும் இல்லை. உத்திராடத்துக்கு கணபதி, திருவோணத்துக்கு திருமால், இவர்களை வணங்கி இந்த வேளையில் நல்ல செயல்களைத் தொடங்குங்கள்! புது முயற்சி தொடங்குதல், சொத்துக்கள் வாங்க கையெழுத்து போடுதல், வீடு குடிபோகுதல், பதவி ஏற்பு போன்றவைகளுக்கு அபிஜித் நட்சத்திர காலம் உகந்தது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஜோதிட சாஸ்திரம்
ஜோதிட சாஸ்திரம்

'ஜித்’ என்றால் வெற்றி பெறுதல், ‘அபிஜித்’ என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது பொருள். அபிஜித் நட்சத்திரத்தை ஸ்ரீகிருஷ்ணர் சூடிக் கொண்டு முதன் முதலாக காட்சி அளித்தத திருத்தலம் திருக்கண்ணபுரம். அங்கு சென்று வழிபடுவது நலம் அளிக்கும் என்கிறார்கள். இங்கு அமாவாசை தின அபிஜித் நட்சத்திர காலத்தில், அபிஜித் நட்சத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வாருக்கு பெருமாள் நடையழகுக் காட்டி சேவை சாதிக்கும் வைபவம் நிகழ்ந்து வருகிறது. முடிந்தவர்கள் சென்று தரிசிக்கலாம். இதனால் நிச்சயம் உங்கள் வாழ்வில் வெற்றிகளும் மங்கல நிகழ்வுகளும் கைகூடும் என்பது ஐதீகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism