Published:Updated:

வாழ்வை வளமாக்கும் புதனும் சூரியனும் அற்புதங்கள் நிகழ்த்தும் புதஆதித்ய யோகம்!

புதன் சூரியன்
பிரீமியம் ஸ்டோரி
புதன் சூரியன்

ஜோதிடர் நமசிவாயம் -

வாழ்வை வளமாக்கும் புதனும் சூரியனும் அற்புதங்கள் நிகழ்த்தும் புதஆதித்ய யோகம்!

ஜோதிடர் நமசிவாயம் -

Published:Updated:
புதன் சூரியன்
பிரீமியம் ஸ்டோரி
புதன் சூரியன்

கணிதத்தில் நிபுணத்துவம், ஓவியத் திறமை, எழுத்தாற்றல், பேச்சாற்றல், கற்பிக்கும் திறமை... இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான திறமை இருப்பதை நாம் காணலாம். உங்களிடமும் இப்படியான திறமைகளில் ஒன்று சாத்திப்பட வேண்டுமெனில், உங்கள் ஜாதகத்தில் புதன் நல்ல இடத்தில் அமைவது அவசியம். ஆம்! புகழ், பெருமை, அரசியல் செல்வாக்கு, பாரம்பரியப் பெருமை ஆகிய அனைத்தையும் அருள்பவர் புதன் பகவான்.

வாழ்வை வளமாக்கும் 
புதனும் சூரியனும்
அற்புதங்கள் நிகழ்த்தும் புதஆதித்ய யோகம்!

வரசங்களின் நாயகன் புதன். புதன் மிதுனத்தில் ஆட்சியாகவும், கன்னியில் ஆட்சி மற்றும் உச்சமாகவும் இருப்பார். தன்னுடைய சொந்த ராசியிலேயே உச்சம் பெறும் ஒரே கிரகம் புதன் மட்டுமே. இவ்வாறாக, புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற ஜாதகர், தான் இருக்கும் இடத்தில் முதன்மை பெற்றுத் திகழ்வார்.

உடலில் அணு அளவில் உள்ள மனம், புதனின் ஒத்துழைப்பில், தன்னுடைய எண்ணங்களை விரிவாக்கி, செயல்படுத்தி வெற்றிக்கு வழிவகுக்கிறது. சிந்தனை வளத்துக்கான அடித்தளம், புத்தி; அது, புதனுடன் இணைந்தே இருக்கும்.

நாகரிகமான சிந்தனையைத் தூண்டுபவரும், முதிர்ச்சி அடைந்த செயல்பாட்டுக்கு உரியவரும் புதனே. அவர் வலுவிழந்தால், அந்த ஜாதகர் பாமரனாகச் செயல்படுவார்; வலுவுற்றால், அறிஞனாக விளங்குவார். கல்வியை முழுமையாகப் பெறுவதற்கு, புதனின் துணை அவசியம்.

வாழ்வின் வெற்றிக்கு ஆதாரமான அறிவு வளர்ச்சிக்கு, புதனின் பங்கு வலுப்பெற்றிருக்க வேண்டும்.

உலக சுகத்தை அடைவதற்குப் பணம் வேண்டும்; அதனை ஈட்டுவதற்கு உயரிய கல்வி வேண்டும்; அதனைப் பெறுவதற்கு, புதனின் ஒத்துழைப்பு தேவை. உயர்கல்வியானது பணத்தை மட்டுமே அளிக்கும். குறிப்பாக, இன்றைய சூழலில், உலக வாழ்வின் சுகத்தை அடைவதற்குப் பணத்தை ஈட்டித் தருமே தவிர, அறிவின் முதிர்ச்சியை அளிக்காது. ஆகவே, படிக்காத மேதைகள் தோன்றுவதற்கு புதனே காரணமாகிறார்!

நீங்கள் உங்கள் ஜாதகத்தைப் புரட்டிப் பாருங்கள் அல்லது உங்கள் ஜோதிடரிடம் காட்டி அவரிடம் கேளுங் கள்... உங்கள் ஜாதகத்தில் கீழ்க்காணும் விவரப்படி புதன் அமைந்திருக்குமேயானால் நீங்களும் மேற்சொன்ன துறைகளில் ஜொலிக்கலாம்!

வாழ்வை வளமாக்கும் 
புதனும் சூரியனும்
அற்புதங்கள் நிகழ்த்தும் புதஆதித்ய யோகம்!
adventtr

பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்று பத்ரயோகம் என்பதாகும். லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அதாவது 1, 4, 7, 10-ல் புதன் இருப்பதே பத்ரயோகம். இந்த யோகம் அமையப்பெற்ற ஜாதகர், கம்பீரத் தோற்றமும் பேச்சாற்றலும் கொண்டவராக இருப்பார்.

புதன் ஆத்மகாரகனான சூரியனுடன் சேர்ந்து அமர்ந்திருத்தல் பெரும் யோகம் ஆகும். இதை புதாதித்ய யோகம் என்று சிறப்பிப்பார்கள். அற்புதமான இந்தச் சேர்க்கையானது உங்கள் ஜாதகத்தில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி போன்ற இடங்களில் அமைந்திருப்பின், குறிப்பிடத்தக்க நற்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார்.

புதனும் சூரியனும் லக்னத்தில் சேர்ந்திருப்பின், அந்த ஜாதகர் வசீகரத் தோற்றம் பெற்றிருப்பதுடன், ஜோதிடத் துறையில் புகழ்பெற்று விளங்குவார். அத்துடன் இத்தகைய ஜாதக அமைப்பு கொண்ட அன்பர்கள், கணிதத்தில் ராமானுஜன் போல் சிறந்து விளங்குவர்.

புதன்- சூரியன் இரண்டாம் பாவத்தில் சேர்ந்திருப்பின், கவிதை, காவியங்கள் படைத்துப் புகழ் பெறுவார். மூன்றாம் இடத்தில் புதன்- சூரியன் இணைந்து காணப் பட்டால், ஜாதகர் பத்திரிகைத் துறையில் பல அரிய சாதனைகள் செய்து, புகழுடன் விளங்குவார்.

புதன்- சூரியன் நான்காம் இடத்தில் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பார். ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்தச் சேர்க்கை அமைந்தால், பக்தி மார்க்கத்தில் ஜாதகரை ஈடுபடுத்தி, புகழ்பெறச் செய்யும்.

புதன்- சூரியன் 6-ம் இடத்தில் சேர்ந்து காணப்பட்டால், அந்த ஜாதகர் எவரிடமும் கைகட்டி வேலை செய்ய விரும்பா மல், சொந்தத் தொழில் செய்து, வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்.

வாழ்வை வளமாக்கும் 
புதனும் சூரியனும்
அற்புதங்கள் நிகழ்த்தும் புதஆதித்ய யோகம்!

7-ம் இடத்தில் புதாதித்ய யோகம் பெற்ற ஜாதகருக்கு உறவு முறையில்தான் வாழ்க்கைத்துணை அமையும். ஆயுள் ஸ்தானமான 8-ம் இடத்தில் புதன்- சூரியன் இணைந்து காணப்பட்டால், அந்த ஜாதகர் மற்றவர் மனத்தை எளிதில் புரிந்துகொண்டு செயல்படும் திறமையும், தன் காரியத்தை எப்படியும் முடித்துக்கொள்ளும் ஆற்றலும் கொண்டிருப்பார்.

பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் புதன்- சூரியன் சேர்க்கை இருப்பின், அயல்நாடு சென்று பணம் சம்பாதிப்பார். 10-ம் இடத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து காணப்பட்டால், நடிப்பு, எழுத்துத் துறைகளில் புகழுடன் விளங்குவார்.

லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து காணப்படும் ஜாதகர், அரசியலில் பிரபலமாகத் திகழ்வதுடன், சம்பாதித்த பணத்தைச் சேமிப்பதில் அக்கறையாக இருப்பார். புதன்- சூரியன் 12-ம் இடத்தில் அமைந்திருப்பின், அந்த ஜாதகருக்குப் பெரும்பாலும் இரவு நேரப் பணியே அமையும்.

புதன், ஒருவரின் ஜாதகத்தில் தனித்துக் காணப் பட்டாலோ, அல்லது பாப கிரகங்களின் சேர்க்கை பெற்று காணப்பட்டாலோ, அவரால் ஜாதகருக்குப் பெரிய அளவில் பலன்களை அளிக்கமுடியாது. சுப கிரகங்களுடன் சேர்ந் திருந்தால் மட்டுமே அவரால் நற்பலன்களை வழங்கமுடியும்.

ஒருவரின் ஜாதகத்தில் புதன் பகையோ நீசமோ பெற்றிருப்பின், அதற்காக ஜாதகர் வருத்தப்படத் தேவை யில்லை. உரிய பரிகாரங்களைச் செய்துகொள்வதன் மூலம் நன்மை பெறலாம்.

‘பும் புதாய நம:’ என்று சொல்லி புதன் பகவானது திருவிக்கிரகத்துக்கு 16 உபசாரங்களைச் செய்யுங்கள். அல்லது, அதன் அதிதேவதையான மகாவிஷ்ணுவை, ‘நமோ நாராயணாய’ என்று சொல்லி, வழிபடுங்கள்; இன்னல்கள் விலகி இன்பம் பெருகும்.

பஞ்சபூதங்களில், பூமியின் பங்கு புதனில் உண்டு. நம் உடலிலும் பூமியின் பங்கு உண்டு. ஆகவே, பூமித் தாயின் வழிபாடு, புதன் பகவானின் வழிபாடாக மாறிவிடும்.