நவகிரகங்களில், குருவை ‘பிரகஸ்பதி’ என்பர். அது, வேதம் அளித்த திருநாமம். சூட்சுமமான அறிவுக்கு, ஸ்தூல வடிவம் கொடுத்து, பிரஹஸ்பதி எனப் பெயரும் வைத்திருக்கிறோம். கிரக வரிசையில் செவ்வாய்க்கும் சனிக்கும் நடுவில் இருப்பார், குரு.

ராசிச் சக்கரத்தில் 9 மற்றும் 12-ஆம் வீடுகள் குருவின் ஆதிக்கத்தில் இருக்கும். தனுர் மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதி இவர்தான்! வாழ்க்கையின் திசையையே தடம் புரளச் செய்யும் ரஜோ மற்றும் தமோ குணங்களைக் கட்டுப்படுத்த, ஸத்வ குணம் அவசியம். அதனைத் தந்து அருள்பவர், குரு. எதிர்பாராத இன்னல்களின்போது, அந்தச் சிக்கல்களில் இருந்து நம்மை விடுவிப்பவர், ஸத்வ குணத்தின் குன்றெனத் திகழும் குரு பகவான்.

மற்ற சுப கிரகங்கள் பாப கிரகத்துடன் இணைந்தால், பாப கிரகத்தின் தன்மை சுப கிரகங்களுக்கும் வந்துவிடும். ஆனால், குருவோடு சேர்ந்த பாப கிரகங்கள், தனது இயல்பை மாற்றி, குருவின் இயல்பை ஏற்றுக்கொண்டு விடும். இப்படியரு பெருமை குருவுக்கு மட்டுமே உண்டு.

இவருக்கு உரிய உலோகம் தங்கம். குருவுக்குப் ‘பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. பொன் என்றால் தங்கம்தான்; தங்கம் என்றாலே குருதான்!

ஆக, குரு பலமிக்க ஜாதகருக்குப் பொன்னும் பொருளும் ஏராளமாகச் சேரும். ஒருவரது ஜாதகத்தில் குருவானவர் தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் ஆட்சியாகவோ, தனுசில் மூலத்திரிகோண பலம் பெற்றோ, கடகத்தில் பரமோச்ச நிலை அடைந்தோ இருந்தால் அவருக்கு ஏராளமான தங்கம் சேரும். லக்னத்துக்கோ, சந்திர ராசிக்கோ குருவானவர் 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இருந்தாலும் தங்கச் சேர்க்கை உண்டாகும்.

குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்து, குரு பலமும் கூடியிருக்கப் பெற்றவர்களுக்குத் தங்கம் சேரும்.

குருவை என்றும் வணங்கவேண்டும். ஒட்டு மொத்தமான மகிழ்ச்சிக்கு அது உதவும். வேதம் ஓதுபவர்களும் ‘ஸ்ரீகுருப்யோ நம:’ என்று குரு வணக்கத்தோடு செயல்படுவார்கள். ‘கும் குருப்யோ நம:’ என்று சொன்னால், அது மந்திரமாக மாறிவிடும். அதைச் சொல்லி 16 உபசாரங்களை செயல்படுத்தவேண்டும்.

`குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: குரு: ஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம:’ என்று செய்யுளைச் சொல்லி வணங்குங்கள். நன்மை நம்மைத் தேடி வரும்.

- ராம்திலக், சென்னை-91