Published:Updated:

மரத்தடியில் மண்ணெடுத்து... சொந்தவீடு அமைய சிறப்பு வழிபாடு!

மண்ணச்சநல்லூர் ஶ்ரீபூமிநாதர்
பிரீமியம் ஸ்டோரி
மண்ணச்சநல்லூர் ஶ்ரீபூமிநாதர்

சொந்த வீடு - மனை வாங்கும் யோகம் அருளும் மண்ணச்சநல்லூர் பூமிநாதர்

மரத்தடியில் மண்ணெடுத்து... சொந்தவீடு அமைய சிறப்பு வழிபாடு!

சொந்த வீடு - மனை வாங்கும் யோகம் அருளும் மண்ணச்சநல்லூர் பூமிநாதர்

Published:Updated:
மண்ணச்சநல்லூர் ஶ்ரீபூமிநாதர்
பிரீமியம் ஸ்டோரி
மண்ணச்சநல்லூர் ஶ்ரீபூமிநாதர்

நம்மில் பெரும்பாலானோருக்குச் சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் அமையும். ஆனால் சிலருக்கோ வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வாழும் நிலையே ஏற்படும். இதற்குக் காரணம் அவரவர் முன்வினையே ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீடு அமையும் யோகத்தைக் குறிப்பிடும் இடம் சுக ஸ்தானம் என்று சொல்லப்படும் ஜோதிடக் கட்டத்தில் உள்ள நான்காவது இடம்.

மரத்தடியில் மண்ணெடுத்து...
சொந்தவீடு அமைய சிறப்பு வழிபாடு!
DIXITH

இந்த நான்காம் இடத்துக்கு உரிய செவ்வாய், சுக்கிரன் ஆகியோரின் அமைப்பைப் பொறுத்தே ஒருவருக்குச் சொந்த வீடு அமையுமா, இல்லையா என்பதை நிர்ணயித்துச் சொல்ல முடியும். பூர்வ புண்ணிய அமைப்புகளின் படியே சொந்த வீடு யோகம் கிட்டும் என்றாலும் தெளிவான திட்டமிடல், சரியான காலம், திடீர் யோகம், கடுமையான உழைப்பு, தெய்வ கடாட்சம் போன்றவை சேர்ந்தாலும் சொந்த வீடு யோகம் நிச்சயம் கிட்டும் எனலாம்.

மட்டுமன்றி உரிய பரிகாரங்கள்-வழிபாடுகள் மூலம் வினைகள் நீங்கப் பெற்று இறையருளைப் பெறுவதன் மூலம், சொந்த வீடு யோகத்தைப் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.

திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது மண்ணச்ச நல்லூர்; சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு. இந்த மண்ணுக்கான, பூமியில் கட்ட நினைக்கிற, கட்டுகிற அனைத்துக் கட்டடங்களுக்கான தேவதை வீற்றிருக்கும் தலம் என்பதால், இந்தத் தலத்துக்கு மண்ணச்சநல்லூர் என்றே திருப்பெயர்! இங்குள்ள இறைவன் வீடு- மனை வாங்குகிற யோகத்தை அருள்பவர் ஆதலால், இவருக்கு ஶ்ரீபூமிநாதர் என்று திருப்பெயர். அம்பாள்  அறம் வளர்த்த நாயகி.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இங்கே மேடு பூஜை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு சிவனாரைப் பிரார்த்தித்தால், வியாபாரத்தில் குழப்பம், நஷ்டம், பிரச்னைகள் என யாவும் விலகும்; சொந்த வீடு-மனை வாங்கும் யோகம் கிடைக்கும்; தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

இங்கே, வாஸ்து பரிகார பூஜையும் விசேஷம். நிலம் வாங்கும் முன்போ அல்லது கட்டட பணியில் தடை என்றாலோ, நிலத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து பிடிமண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி பூஜையறையில் வைத்து வணங்கி வரவேண்டும். பின்னர் வாஸ்து நாளில் அந்த மஞ்சள்துணி முடிப்பை இந்தக் கோயிலுக்கு எடுத்து வந்து, பூமிநாதருக்கு பூஜை செய்து விட்டு, மஞ்சள் துணிமுடிப்பு பிடிமண்ணுடன் பிராகார வலம் வந்து, குலதெய்வத்தையும் பூமிநாதரையும் மனதார வணங்கி, கோயிலின் வில்வ மரத்தடியில் பிடிமண்ணை இடவேண்டும். இதனால் தடைகள் பிரச்னைகள் விலகி, கட்டடப் பணிகள் குறைவின்றி நடைபெறும் என்பது ஐதீகம்.

அதேபோல், பிராகாரத்தில் உள்ள வன்னிமரத்தடியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு, ஶ்ரீபூமிநாதரை வணங்கிவிட்டு, மனையின் வடகிழக்கு மூலையில் போட்டுவிட்டு வேலையைத் துவக்கினால், வீடு மற்றும் கட்டடப் பணிகள் தடையின்றி நடைபெறுமாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism