Published:Updated:

மிளகு ரசமும் துவையலும்... காய்ச்சல் குணமாக அருளும் விசேஷ பிள்ளையார்!

ஜுரஹர விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
ஜுரஹர விநாயகர்

ஜுரம் தீர்க்கும் பிரார்த்தனை

மிளகு ரசமும் துவையலும்... காய்ச்சல் குணமாக அருளும் விசேஷ பிள்ளையார்!

ஜுரம் தீர்க்கும் பிரார்த்தனை

Published:Updated:
ஜுரஹர விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
ஜுரஹர விநாயகர்

நோய் இல்லாத வாழ்வே பெறுவதற்கரிய வரமாகும். ஒருவர் வீடு, மனை, மக்கள், சொத்து சுகபோகங்கள் என சகலத்தையும் பெற்றிருந்தாலும் அவர் நோய்வாய்ப்பட்டுவிட்டால் எதையும் அனுபவிக்க இயலாத நிலையே ஏற்படும். பிணிகளுக்கும் அதனால் உண்டாகும் துன்பங்களுக்கும் முன்வினையே காரணம்.

மிளகு ரசமும் துவையலும்...
காய்ச்சல் குணமாக அருளும் விசேஷ பிள்ளையார்!

முன்வினைகளைச் செயல்படுத்தும் விதமாய் நம் ஜாதகத்தில் கிரகநிலை அமையும் என்பார்கள். அவ்வகையில் குறிப்பிட்ட நோய்களுக்கு குறிப்பிட்ட கிரகங்கள் கிரகத்துவம் பெறும்.

கண் நோய்கள், காய்ச்சல், இதய நோய், படபடப்பு, தோல் நோய்கள், எலும்பு நோய்கள், எலும்பு முறிதல், பித்தம் தொடர்பானவை நம்மைப் பாதிக்கின்றன என்றால், சூரியதேவன் இவற்றுக்குப் பொறுப்பாகிறார். அதேபோல் இதய நோய், வாந்தியெடுத்தல், ரத்தநோய், உடலில் கட்டிகள் போன்றவற்றைச் சந்திரன் சுட்டிக்காட்டுவார். இங்ஙனம் ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் நிலையை அறிந்து, குறிப்பிட்ட பிணிகளின் தீவிரம் எப்படி என்பதை அறியும் வழக்கமும் முற்காலத்தில் உண்டு.

சிலர் இருக்கிறார்கள்... `எவ்வித மருத்துவத்துக்கும் பலன் இல்லை; எவ்வளவோ பரிகாரம் செய்தும் பாதிப்பு குறையவில்லை...’ என்றெல்லாம் புலம்புவார்கள். திக்கற்றவருக்குத் தெய்வமே துணை. ‘மருந்தே நம் வினைக்கு’ என்று திருவாய்மொழியில் பகவானைக் கொண்டாடுகிறார் நம்மாழ்வார். நம் உடம்புக்கு ஏற்படும் துன்பம் ரோகம்; உள்ளத்துக்கு ஏற்படும் துன்பம் சோகம். இந்த இரண்டு மட்டுமன்றி, ஜீவாத்மாக்களின் துன்பத்துக்குக் காரணமான பிறப்பு இறப்புக்கும் அருமருந்தாகத் திகழ்கிறான் இறைவன் என்பது பெரியோர் வாக்கு. அப்படி, நம் நோய் நீக்கும் அருமருந்தான பரம்பொருளின் மகாவிஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவரே தன்வந்திரி என்கின்றன ஞானநூல்கள்.

தன்வந்திரி பகவானுக்கு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமை கள் விசேஷமானவை. இந்த நாள்களில் முந்திரி, கற்கண்டு, உலர் திராட்சை, தயிர்சாதம் சமர்ப்பித்து தன்வந்திரி பகவானை வழிபட, பிணிகள் நீங்கும்.

அதேபோல், எவ்வித வினைகளையும் சடுதியில் நீக்கி இன்பம் அருளும் தெய்வம் பிள்ளையார். கும்பகோணம் கோயில்களில், மிகப் பிரசித்தி பெற்றதும் பிரமாண்டமானதுமான கோயில்களுள் ஒன்று நாகேஸ்வரன் கோயில். இங்கே அருளும் விநாயகர் ஒருவருக்கு ஜுரகர விநாயகர் என்றே திருப்பெயர்.

உஷ்ண சம்பந்தமான நோய்கள் நீங்குவதற்கு, இங்கே வந்து ஜுரகர விநாயகருக்கு அபிஷேகம் செய்து, மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். வெப்ப நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து பரிகாரம் செய்யும் போது மட்டுமே மிளகு ரசம் சாதம், துவையல் நைவேத்தியம். மற்ற நாள்களில் சாதாரண நைவேத்தியமே படைக்கப்படுகிறது. இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு. அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism