Published:Updated:

புதன் ஓரையில் என்னென்ன செய்யலாம்?

புதன் பகவான்
பிரீமியம் ஸ்டோரி
புதன் பகவான்

ஜோதிட விபூஷன் தஞ்சை இராஜ. ஞானசேகர்

புதன் ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஜோதிட விபூஷன் தஞ்சை இராஜ. ஞானசேகர்

Published:Updated:
புதன் பகவான்
பிரீமியம் ஸ்டோரி
புதன் பகவான்

நவகிரகங்களில் நன்மைகளை வாரி வழங்கும் கிரகம் புதன். கல்வி, திறமை ஆகியவற்றைத் தன் தசாகாலத்திலும் தன் பார்வையாலும் வழங்குபவர் புதன் பகவான். அப்படிப்பட்ட புதனுக்குரிய ஓரையில் பின்வரும் விஷயங்களைத் தொடங்கினால், வெற்றிகள் குவியும்!

புதன் ஓரையில் என்னென்ன செய்யலாம்?

புதன் ஓரையில் எழுத்துப் பணிகளைத் தொடங்க லாம். பிள்ளைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், புத்தகம் வாங்க வேண்டும் என்றாலும் புதன் ஓரையில் வாங்கிக் கொடுக்கலாம்.

பத்திரிகைகளுக்குக் கதை - கவிதைகளை அனுப்புவது என்றாலும் நீங்கள் எழுதிய நூலை வெளியிடவும் புதன் ஓரை மிகச்சிறந்தது. மனை, வீடு பத்திரப்பதிவுக்கு உகந்தது புதன் ஓரை.

தர்ம ஸ்தாபனம், நிறுவனம், சங்கம், பேரவைகள் சம்பந்தமான விதிகளைத் திருத்த புதிய விதிகள் சேர்க்க புதன் ஓரை நல்லது.

வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்திட, கூட்டுத் தொழில் தொடங்க புதன் ஓரை உத்தமம்.

கல்வி சேர்க்கை விண்ணப்பம் பூர்த்தி செய்யவோ, அரசு வேலைக்கு விண்ணப்பிக்கவோ புதன் ஓரை மிகவும் ஏற்ற நேரம்.

மாணவர்கள் சிரமப்படும் பாடங்களைப் புதன் ஓரையில் கவனம் வைத்துப் படிக்க எளிதில் தேர்ச்சி பெறலாம்.

பேட்மின்டன், செஸ், ஷட்டில், நீச்சல் முதலான தனித்த வித்தைகளைக் கற்றுக்கொள்ள புதன் ஓரையில் ஆரம்பித்தல் சிறப்பு.

தாய்மாமன் என்ற உறவுமுறையில் செய்யப்படும் எந்த சீர் விவகாரங்களையும் புதன் ஓரையில் செய்யலாம். இதனால் உறவு வலுப்படும்.

நிலம் , வீடு , சொத்து போன்ற பெரிய வியாபாரங்களில் விலை படியவில்லை என்றால், புதன் ஓரையில் பேச்சை ஆரம்பிக்கவும்; பேரம் படிந்துவிடும்.

புதன் ஓரையில் பெண் பார்க்கும் படலம், வரன் பார்க்கும் விஷயங்களை மேற்கொள்ள வேண்டாம்; எதிர்மறையான பலன்களைத் தந்துவிடும். மற்றபடி அறிவுசார் விஷயங்கள் அனைத்துக்கும் புதன் ஓரையே பொன்னான ஓரை.