Published:Updated:

சந்தோஷம் தருவார் சனைச்சரன்!

ஶ்ரீசனீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசனீஸ்வரர்

சனிபகவான் மகிமைகள் மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சந்தோஷம் தருவார் சனைச்சரன்!

சனிபகவான் மகிமைகள் மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
ஶ்ரீசனீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசனீஸ்வரர்

நவகிரகங்களில் சனி பகவான் சூரியனிடமிருந்து வெளிவந்தவர். சூரியனின் ‘சாரம்’ சனி; சூரியனின் புதல்வன் என்றும் ஜோதிடம் தெரிவிக்கிறது. அப்பாவின் சாரம், பிள்ளையாக உருவெடுத்தது என்கிறது வேதம்.

சந்தோஷம் தருவார் சனைச்சரன்!

தேபோல், மனதுடன் தொடர்புகொண்டவர் சனி. மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல் பட வைக்கிறதமோ குணம் அவரிடம் உண்டு. சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடனும் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும்.

விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர். சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின என்கின்றன ஞானநூல்கள்.

இத்தகைய சிறப்புகள் பெற்ற சனி பகவானை மந்தன் என்று அழைப்பது ஏன், ஏழரைச் சனி - பொங்கு சனி - போக்கு சனி என்றெல்லாம் சொல்கிறார்களே அவற்றுக்கு என்ன அர்த்தம்..? விரிவாக அறிந்துகொள்வோம்.

சனைச்சரன்...

ஒன்பது கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். அவரை சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். ‘சனை’ என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு!

ஆயுள் காலமும் சனி பகவானும்!

ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்!

இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கௌமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது - கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது. துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது! மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோபலமும் குறைகிற இறுதிப்பகுதி. கௌமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம்.

மங்கு சனி: சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில், சகல விஷயங் களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர்.

பொங்கு சனி: இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர்.

இன்ப - துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர்.

போக்கு சனி: முதுமையில், சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக் காட்டி, போக்கு சனி என்றனர்.

ஏழரைச் சனி என்ன செய்யும்?

ராசி மண்டலத்தில் வலம் வரும் தருணத்தில், சந்திரன் இருக்கிற ராசியில் இருந்து பன்னிரண்டிலும், சந்திரன் இருக்கிற ராசியிலும், அடுத்து சந்திரனில் இருந்து 2-வது ராசியிலும் தலா இரண்டரை வருடங்கள் தங்கியிருந்து, பயணிப்பார் சனி பகவான். ஆக, மூன்று ராசியிலும் இருந்த காலத்தைக் கூட்டினால் மொத்தம் ஏழரை வருடங்கள் வரும். இதை, ஏழரை நாட்டுச் சனி என்பார்கள். அதாவது ஏழரை ஆண்டுகளை நாடிய சனி எனப் பொருள்.

அந்த ஏழரை வருட காலத்தில், அவனது தசாபுக்தி அந்தரங்கள் வலுவாகவும் நன்மையை வாரி வழங்குவதாகவும் இருந்தால், சனியின் தாக்கம் செயலிழந்துவிடும். தனக்கு இருக்கும் மூன்று இயல்புகளில் ‘பொங்கும்’ இயல்பு வெளிப்பட்டு, தசாபுக்தி அந்தரங்களின் தரத்தைப் பொங்க வைத்து மகிழ்ச்சியைப் பன்மடங்காக்குவார்.

எப்படி வழிபடுவது?

‘சம் சனைச்சராய நம:’ என்று சொல்லி, சனி பகவானுக்கு 16 வகை உபசாரங்களை அளித்து வழிபடலாம். ‘நம: ஸூர்யாய ஸோமாய மங்களாய புதாய ச குருசுக்கிர சனிப்ய: சராஹவே கேதவே நம:’ எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, 12 நமஸ்காரங்களைச் செய்தால், 12 ராசியில் வீற்றிருக்கும் கிரகங்களை வணங்கி வழிபட்டதாக ஆகிவிடும். உடல் - உள்ளத்தை வாடவைத்து, அடிபணிந்தால்தான் பலன் உண்டு என நினைக்க வேண்டாம். உள்ளத் தெளிவுடனும் ஈடுபாட்டுடனும் சனி பகவானின் திருநாமத்தைச் சொல்லி வழிபட்டால், அவனருளால் இன்பம் பொங்கும்.

சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றினால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை. வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல்பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனீஸ்வர பகவானை மனதாரப் பிரார்த்திப்போமாக!

(31.5.11 இதழிலிருந்து...)