Published:Updated:

நட்சத்திர மகிமைகள்!

நட்சத்திர மகிமைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திர மகிமைகள்!

ஒருவன் பிறக்கும்போதே நட்சத்திரத்துடன் இணைகிறான்.அவனுக்கு உலகத் தொடர்பையும் நட்சத்திரமே ஏற்படுத்துகிறது.

சூரியனும் சந்திரனும் மறைந்திருக்கும் வேளையில், ஒளியை வழங்குபவை நட்சத்திரங்கள். கும்மிருட்டில்கூட போதிய ஒளியைத் தந்து உயிரினங்களுக்கு வழிகாட்டுபவை அவை!

விண்ணில், கிரக மண்டலத்தையும் கடந்து, நட்சத்திர மண்டலம் பரந்துவிரிந்து தென்படுகிறது. சப்தரிஷிகள், அகத்தியர், த்ருவன், அருந்ததி ஆகியோர் நட்சத்திர வடிவில், வானில் திகழ்கின்றனர் என்கிறது தர்ம சாஸ்திரம் (ஸப்தரிஷய: ப்ரதமாம்கிருத்தி தானாம் அருந்ததீயத்குவ...).

நட்சத்திர மகிமைகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேதம், நட்சத்திர யாகத்தைப் பரிந்துரைக்கிறது. வானில் உள்ள நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியதும், அவை தேவதைகளின் இருப்பிடம் என்று தெரிவித்ததும் வேதம்தான் (தேவ கிரஹாவை நக்ஷத்ராணி). ஒளி வடிவான தேவர்கள், ஒளி வடிவான நட்சத்திரத்தில் ஒன்றியிருப்பது பொருந்தும்தானே?!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`க்ஷத்திரம்’ என்றால் அழிவு; `நக்ஷத்திரம்’ என்றால் அழிவற்றது என்கிறது நிருக்தம். புவியில் வேள்வியில் ஈடுபட்டவன், நட்சத்திரம் வாயிலாக விண்ணுலகம் செல்கிறான் (யேவா இஹயஜதெ அமும்ஸ லோகம் நக்ஷதெ). எண்ணிக்கைக்கு அடங்காத அளவுக்கு நட்சத்திரங்கள் இருந்தாலும், 27 நட்சத்திரங்களை அறிமுகம் செய்தது வேதம். மேலும், வேள்விக்கு மட்டுமன்றி, அன்றாட அலுவல்களை நடைமுறைப்படுத்த, நட்சத்திரங்களின் தொடர்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தியது.

நட்சத்திர மகிமைகள்!

ஒருவன் பிறக்கும்போதே நட்சத்திரத்துடன் இணைகிறான்.அவனுக்கு உலகத் தொடர்பையும் நட்சத்திரமே ஏற்படுத்துகிறது. பிறந்த குழந்தையின் காதில், நட்சத்திரத்தின் பெயரை ஓதுவான் தகப்பன் (நக்ஷத்ரநாமசநிர்திசதி...). அதையொட்டியே, பஞ்சாங்கங்களில் நட்சத்திரத்தை வைத்து, பெயரின் முதல் எழுத்துக்களின் அட்டவணை கள் சேர்க்கப்பட்டன. நட்சத்திரப் பெயருடன் இணைந்தபடி, நாம் வைக்கிற பெயர்களுக்கு உயிரோட்டம் இருக்கும்.

இன்ன நட்சத்திரத்தில், இன்ன ராசியில், இன்ன பெயரில் இருப்பவரின் நன்மைக்காக... என்று அர்ச்சகர், நட்சத்திரத்தின் பெயரையும் இணைத்து சங்கல்பம் சொல்லி, அர்ச்சனை செய்வார். ஒளி வடிவில் இயங்கிக் கொண்டிருப்பது நட்சத்திரம். எனவே, இந்த ஒளியின் பிறப்பில் இணைந்த மனிதன், உலகின் எல்லாப் பொருள்களுடனும் தனது இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நவகிரகங்களும் நட்சத்திரங்களும்

நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள் இணைந்த ஓடுபாதையில் பயணிக்கின்றன. ஒளியின் இணைப்பில் சைதன்யம் பெற்று, நம்முடைய கர்மவினையை எடுத்து விளக்குவதால், அவற்றுக்குக் கிரகங்கள் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது வேதம் (கிருஹ்ணாதீதிக்ரஹ;)

நட்சத்திர மகிமைகள்!

நட்சத்திரங்களுக்கு கிரகங்களுடனும், கிரகங்களுக்கு அகண்ட விண்வெளியுடனும் தொடர்பு உண்டு. அந்த விண்வெளி, உடலுக்குள் இருக்கும் விண்வெளியுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்தத் தொடர்பு மனம் வரை நீடித்திருக்கும்; தந்தை ஓதிய நட்சத்திரத்தின் பெயர், காதினுள் இருக்கிற இடைவெளியில் புகுந்து, மனத்தை எட்டிவிடும். மனிதனை ஆகாயத்தில் இருக்கிற நட்சத்திரத்தில் இணைந்தவனாகச் சித்திரிக்கிறது சாஸ்திரம். காலத்துடன் இணைந்த கர்மவினையைத் தருணம் வரும்போது வெளிப்படுத்தும் நவக்கிரகங்களின் தசைகளைப் பட்டியலிட்டு வரையறுப்பது, அவனுடன் இணைந்த நட்சத்திரமே!

அசுவினியில் ஆரம்பித்து ஒன்பது நட்சத்திரங்களுக்கு எண்ணிக்கையை வைத்துப் பலனை அறிமுகம் செய்த வேதாங்க ஜோதிடம், 27-ல் மிச்சமிருக்கும் இரண்டு ஒன்பது ஒன்பதான நட்சத்திரங்களுக்கும், அதே பலனை எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறது.

நட்சத்திர மகிமைகள்!

அதாவது மூன்று தொகுப்பு. முதல் தொகுப்பு: அசுவினி முதல் ஆயில்யம் வரை; இரண்டாவது தொகுப்பு மகம் முதல் கேட்டை வரை; மூன்றாவது தொகுப்பு மூலம் முதல் ரேவதி வரை. இந்த மூன்று தொகுப்புகளின் முதலாவது வரும் மூன்று நட்சத்திரங்களுக்குக் குறிப்பிட்ட தசையை அறிமுகம் செய்தது அது.

முதலாவது தொகுப்பில் முதல் நட்சத்திரம் அசுவினி. 2-வதில் முதல் நட்சத்திரம் மகம், 3-வதில் முதல் நட்சத்திரம் மூலம். ஆக, அசுவினி, மகம், மூலம் என்கிற மூன்றில் கேது தசை என அறிமுகமானது. இப்படியே ஒவ்வொரு தொகுப்பிலும் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் வரும் நட்சத்திரங்களைக் கணக்கிட்டு மற்ற கிரகங்களின் தசா காலங்களையும் வரையறுத்துள்ளது.

இப்படி, நட்சத்திரம் ஒருவனது தசா கால அட்டவணையை நிர்ணயிக்கிறது. நல்லது- கெட்டது என மாறி மாறி வருகிற தசா காலத்தை, அவன் கர்மவினைக்குத் தக்கபடி, அவன் பிறந்த வேளையில் இணைந்த நட்சத்திரம் அமைத்துக் கொடுப்பதாகத் தெரிவிக்கிறது ஜோதிடம்.

ராசிகளும் நட்சத்திரங்களும்

ராசிகள் பன்னிரண்டும் ஜடங்கள். அதற்கு சைதன்யம், அதாவது செயல்படும் தகுதியை அளிப்பது நட்சத்திரங்களே. அவற்றுடன் இணைந்த ராசி, உயிரோட்டத்தைப் பெறுகிறது.

நட்சத்திர மகிமைகள்!

உச்சம், நீசம், அஸ்தமனம், மௌட்யம் எனப் பல மாறுதல்களை கிரகங்கள் சந்திக்கின்றன. வக்கிரம், அதிசாரம் போன்றவற்றால் நிலையில்லாத போக்கும் உண்டு. அவற்றில் தென்படும் சாரத்தைத் துல்லியமாக அறிவது கடினமான ஒன்று. விண்வெளியில் மாறுபாட்டுக்கு உட்படாமல் நிலையாக விளங்கும் நட்சத்திரத்தின் தொடர்பு நம்பகமானது என்பதால், நட்சத்திரத்தை இணைப்புக்குப் பயன்படுத்தினார்கள்.

தாத்தா, தந்தை, தனயன் ஆகிய மூவரும் ஒரே நட்சத்திர பாதத்தில் பிறக்க நேர்ந்தால், பரிகாரம் செய்யப் பரிந்துரைக்கிறது தர்ம சாஸ்திரம். தசைகளின் அட்டவணை ஒன்றாக இருப்பதாலும், இன்ப- துன்பங்கள் மாறி மாறி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாலும், தாத்தா தன்னுடைய தசா காலங்களில் அனுபவித்துத் தெரிந்திருப்பதாலும்... ஒருவேளை விபரீத விளைவுகளுக்கு இடமிருந்தால், துன்பங்களை அகற்ற, தப்பான கர்மவினையைக் கரைக்கும் பரிகாரத்தைக் கையாண்டால், மற்ற இரண்டு பேரும் துன்பப்படமாட்டார்கள். இந்த நம்பிக்கையில் முன்னோர்கள் அதனைக் கடைப்பிடித்துத் தப்பியுள்ளனர்.

‘ஏக நக்ஷத்ர ஜனன சாந்தி’ அதாவது, ஒரே நட்சத்திரத்தில் பிறந்த மூவரின் நன்மைக்காகச் செய்யும் சடங்கு என்கிறது சாந்தி ரத்னாகரம்.

நட்சத்திரக் கண்டாந்தம்

முதல் ஒன்பது நட்சத்திரங்களில், 9-வது ஆயில்யம். அதேபோல் 2-வது மற்றும் 3-வது தொகுப்புகளின் ஒன்பதாவது நட்சத்திரங்களான கேட்டை, ரேவதி ஆகியவற்றின் கடைசி பாதத்துக்குக் குறை உண்டு என்கிறது சாஸ்திரம். இதனை ‘கண்டாந்தம்’ எனக் குறிப்பிடுகிறது ஜோதிடம்.

நட்சத்திர மகிமைகள்!

ஒன்பது நட்சத்திரங்களின் மூன்று துண்டுகளை (கண்டம்) உள்ளடக்கியதே ராசிச் சக்கரம். மூன்று துண்டுகளின் கடைசி, கழிவுப்பொருள் போல் கருதப்படுகிறது. கரும்பின் கடைசி அப்படித்தான் இருக்கும். கண்டாந்தத்தில் பிறந்தவன், ஆயுஸ் இருந்தால் சீரும் சிறப்புமாக, அரச போகத்தில் வாழ்வான். இல்லையெனில், தாயையும் தந்தையையும் பாழாக்கி மடிவான் என்கிறது ஜோதிடம். இதற்கு ராவணனின் ஜாதகத்தை (ரேவதி கடைசி பாதம்) உதாரணம் காட்டி விளக்கமளிப்பர்.

இங்கே, மற்ற ஜாதகத் தகவல்கள் நிறைய இருந்தாலும், நட்சத்திர கண்டாந்தமே முடிவை இறுதி செய்கிறது எனும் தகவல், நட்சத்திரப் பலனுக்கு அழிவில்லை என உணர்த்துகிறது.

நட்சத்திரங்களும் தெய்வங்களும்

திருவாதிரையின் தேவதை ருத்ரனாக இருப்பதால், திருவாதி ரையை ‘ஈசன் நட்சத்திரம்’ எனப் போற்றுகிறோம். திருவோணத்தின் தேவதை ‘பெருமாள்’ என்பதால், சிரவண விரதம் பெருமையுடன் திகழ்கிறது. ரோகிணியில் ஸ்ரீகிருஷ்ணரையும், புனர்பூசத்தில் ஸ்ரீராமரையும் வணங்குகிறோம்.

இயற்கையின் பாதுகாவலர்களான நட்சத்திரங்களை வழிபடச் சொல்லி வலியுறுத்துகிறது வேதம். ஆகவே, காலையில் நீராடி, அன்றைய நட்சத்திரத்தை வணங்கி, அன்றாடப் பணிகளைத் தொடங்கினால், எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்!

(4.10.2011 சக்தி விகடன் இதழிலிருந்து...)

நட்சத்திர தேவதைகள்!

நட்சத்திரங்களுக்குரிய தேவதைகளையும் எடுத்துரைக்கிறது வேதம் (கிருத்திகா நக்ஷத்திரமக்னிர்தேவதா...). பிறந்த நாளில், ஆயுஷ்ய ஹோமத் தில் அந்த நட்சத்திரத்தையும் தேவதையையும் பூஜித்து, வேள்வியில் உணவு அளிப்பார்கள். ஆகவே, அன்றாட வாழ்வில் நட்சத்திரங்களை வழிபடுவது நலம்!

நாள்தோறும் அன்றைய நாளில் தென்படும் நட்சத்திரங்களின் பெயரைச் சொல்லி வணங்குவதுடன், அந்த நட்சத்திரங்களுக்கான தேவதைகளை அறிந்து வழிபடுவதால் நன்மைகள் உண்டு.

அசுவினி - அசுவினி குமாரர்கள்; பரணி - யமன்; கிருத்திகை - அக்னி; ரோஹிணி - பிரஜாபதி; மிருகசீரிடம் - சோமன்; திருவாதிரை - ருத்ரன்; புனர்பூசம் - அதிதி; பூசம் - பிரஹஸ்பதி; ஆயில்யம் - அஹி;

மகம் - பித்ருக்கள்; பூரம் - பகன்; உத்திரம் - ஆர்யமான்; ஹஸ்தம் - அர்க்கன்/சாவித்ரி; சித்திரை - விஸ்வகர்மா; ஸ்வாதி - வாயு; விசாகம் - சக்ராக்னி; அனுசம் - மித்ரன்; கேட்டை - இந்திரன்.

மூலம் - நைருதி; பூராடம் - அபா தேவதை; உத்திராடம் - விஸ்வதேவன்; திருவோணம் - விஷ்ணு; அவிட்டம் - வாசுதேவன்; சதயம் - வருணன்; பூரட்டாதி - அஜைகபாதன்; உத்திரட்டாதி - அஹிர்புத்தன்யன்; ரேவதி - பூசன்.

நட்சத்திரச் சிறப்புகள்...

நட்சத்திரங்களுக்கு நேரடி பலன் சொல்லும் தகுதி இருப்பதாகச் சொல்கிறது வேதம். நட்சத்திரங்களின் ஒவ்வொரு பாதத்துக்கும் தனித் தனியே பலன் சொல்லும் பகுதியை வராஹமிஹிரர் தனது ‘பிருஹத் ஸம்ஹிதை’யில் கூறுகிறார். வான சாஸ்திரத்தின் அடிப்படைத் தத்துவங்களில் நட்சத்திரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. இரவு, நட்சத்திரங் களைப் பார்த்து, பிறகு விரதத்தை முடிக்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம் (நக்ஷத்ரம் த்ருஷ்ட்வாவாசம் விஸ்ருஜேத்).

புதுமணத் தம்பதி, துருவனையும் அருந்ததி யையும் பார்த்து, தங்களது திறமையை வலுப்படுத்திக் கொள்கின்றனர். (த்ருவம் அருந்ததீம் சதர்சயதி). மழை நீரானது சுவாதி நட்சத்திர வேளையில், முத்துச்சிப்பியில் விழுந்தால், முத்தாக மாறிவிடும் என்கிறார் பர்த்ருஹரி.

பும்ஸுவனத்துக்குப் பூசம் சிறப்பு, குடுமிக் கல்யாணத்துக்குப் புனர் பூசம் சிறப்பு, கன்யகாதானத்துக்குச் சுவாதி சிறப்பு என நம்முடைய விசேஷங்களுக்கு நட்சத்திரங்களின் சிறப்பைச் சொல்கிறது சாஸ்திரம் (வ்யத்தேகர்பேதிஷ்யேண, சௌனம் புனர்வஸ்வோ:). அவிட்டம் முதல் ரேவதி வரை உள்ள நட்சத்திரங்களில் உயிர் பிரிந்தால், இறந்தவர்களுக்காகப் பரிகாரம் செய்யச் சொல்கிறது. பரணி, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி ஆகியவற்றில் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம் (யம ருத்ராஹி...). மாடு வாங்க, கலப்பையில் பூட்ட, மகம், பூரம் இரண்டையும் சுட்டிக் காட்டுகிறது.

கிருத்திகை நட்சத்திரம், வேள்வியைத் துவக்கச் சிறந்தது என்கிறது சாஸ்திரம் (கிருத்திகாஸ்வக்னிமாததீத). அது, அக்னி தேவனின் நட்சத்திரம் (ஏதத்வா அக்னேர் நக்ஷத்ரம்); நடைமுறையில், கத்திரி வெயில் என்பார்கள்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பல காலங்களாக போர் மூண்டது. சோர்ந்து போன தேவர்கள், நம்பிக்கை இழக்கும் வேளையில், அசுரன் ஒருவனை வீழ்த்தினான் தேவன். அதில் நம்பிக்கை முளைக்க, ‘அண்ணனை வீழ்த்திய நட்சத்திரம்’ என்று அன்றைய நட்சத்திரத்துக்குப் பெருமை சேர்த்தனர், தேவர்கள். அது ‘ஜேஷ்டா நட்சத்திரம்’. அண்ணனை அழித்த நட்சத்திரம், ‘ஜேஷ்டக்னி’ எனப் பெயர் வைத்தனர் (தேவர்களுக்கு அசுரர்கள் அண்ணன் முறை).

அடுத்த நாள், அசுர குலத் தலைவன், அதாவது மூல புருஷன் கொல்லப் பட்டான். ஆகவே, அன்றைய நட்சத்திரம் ‘மூலம்’ எனப்பட்டது. மறுநாள், எதிரிகள் பொறுமை இழந்தனர். அன்றைய நட்சத்திரம் ‘பூராடம்’ எனப் பட்டது. அந்தத் தகவல் அனைவரின் காதுகளுக்கும் எட்டியது. தகவல் கிடைத்த நாள் ‘ச்ரோணா’, அதாவது திருவோணம் என்றானது.

இப்படியாக வெற்றி, பட்டாபிஷேகம் போன்றவை நிகழ்ந்ததைக் குறிக்கும் விதத்தில் ‘பரணி’ வரையிலான விளக்கம் வேதத்தில் உண்டு. ஆகவே, நட்சத்திரங்களால் நேரடிப் பலன் உண்டு என்பதற்குச் சான்றுகள் இவை!