Published:Updated:

சுபிட்சம் தரும் 15 வகை சுபமுகூர்த்தங்கள்!

சுபமுகூர்த்தங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சுபமுகூர்த்தங்கள்

ஜோதிட விபூஷண் தஞ்சை இராஜ ஞானசேகர்

சுபிட்சம் தரும் 15 வகை சுபமுகூர்த்தங்கள்!

ஜோதிட விபூஷண் தஞ்சை இராஜ ஞானசேகர்

Published:Updated:
சுபமுகூர்த்தங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சுபமுகூர்த்தங்கள்

நாம் செய்யும் புதிய முயற்சிகள் மற்றும் சுப காரியங்கள் - வைபவங்களை, நல்ல நேரம் பார்த்துச் செய்வது வழக்கம். மங்கலகரமான அந்தப் பொழுதை - நேரத்தையே முகூர்த்தம் என்கிறோம். ஞானநூல்கள் சுட்டிக்காட்டும் குறிப்பிட்ட சுபமுகூர்த்த நேரங்களில் செய்யப் படும் காரியங்களும் வைபவங்களும் சுபிட்சமான பலன்களைத் தரும்.

சுபிட்சம் தரும் 
15 வகை சுபமுகூர்த்தங்கள்!

ம்மில் பலருக்கும் முகூர்த்தம் என்றதுமே திருமணம் என்ற ஒரு சுபகாரியம் மட்டுமே சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால் திருமணத்துக்கு மட்டுமன்றி, நம் வாழ்வில் நிகழும் சகல நல்ல காரியங்களுக்கும் முகூர்த்த நேரம் பார்த்துச் செயல்படுவது நல்லது.

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 30 முகூர்த் தங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதலில் பகல்வேளை முகூர்த்தங்களை அறிவோம். ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகைகள் அல்லது 48 நிமிடங்கள் கொண்டது. இதன்படி காலை 6 முதல் மாலை 6 மணி வரையிலும் 15 முகூர்த்தங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 6:48 மணி வரை: ரௌத்ரம் முகூர்த்தம்.

6:48 முதல் 7:36 மணி வரை: சர்ப்ப முகூர்த்தம்.

7:36 முதல் 8.24 மணி வரை: மைத்ர முகூர்த்தம்.

8.24 முதல் 9.12 மணி வரை: பைத்ருகம்.

9.12 முதல் 10 மணி வரை: வாஸவம்.

10 முதல் 10.48 மணி வரை: அம்பு முகூர்த்தம்.

10.48 முதல் 11.36 மணி வரை: விசுவதேவம்.

11.36 முதல் 12.24 மணி வரை: அபிசித்து.

நண்பகல் 12.24 முதல் 1.12 மணி வரை: பிரசாபத்யம்.

1.12 மணி முதல் 2 மணி வரை: அயிந்திரம்.

2 முதல் 2.48 மணி வரை: அக்னி முகூர்த்தம்.

2.48 முதல் 3.36 மணி வரை: நிருதி முகூர்த்தம்.

மாலை 3.36 முதல் 4.24 மணி வரை: வாருணம்.

4.24 முதல் 5.12 மணி வரை: அக்கியம்.

5.12 முதல் 6 மணி வரை: பாக்கியம்.

சுபிட்சம் தரும் 
15 வகை சுபமுகூர்த்தங்கள்!
Anupam Nath

இதன்பிறகு இரவு தொடங்குகிறது. மாலை 6 முதல் மறுநாள் காலை 6 மணி வரையிலுமான பொழுது 15 முகூர்த்தங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மாலை 6 மணி முதல் 6:48 மணி வரை: ரௌத்ரம் முகூர்த்தம்.

6:48 முதல் 7:36 மணி வரை: அஜேகபாதம்.

7:36 முதல் 8.24 மணி வரை: அகிர்ப்பத்னி.

இரவு 8.24 முதல் 9.12 மணி வரை: பூஷா.

9.12 முதல் 10 மணி வரை: கந்தருவம்.

10 முதல் 10.48 மணி வரை: இராக்கதம்.

10.48 முதல் 11.36 மணி வரை: அக்னி.

11.36 முதல் 12.24 மணி வரை: பிரசாபத்யம்.

நள்ளிரவு 12.24 முதல் 1.12 மணி வரை: சந்திரம்.

1.12 மணி முதல் 2 மணி வரை: அதிதி முகூர்த்தம்.

2 முதல் 2.48 மணி வரை: பார்க்க வஸ்பத்யம்.

2.48 முதல் 3.36 மணி வரை: வைஷ்ணவம்.

3.36 முதல் 4.24 மணி வரை: சாவித்திரி.

அதிகாலை 4.24 முதல் 5.12 மணி வரை: துவாட்டிரம்.

5.12 முதல் 6 மணி வரை: வாயவ்யம்.

இவற்றில் மைத்ரம், பைத்ருகம், வாஸவம், விசுவதேவம், அபிசித்து, பிரசாபத்யம், அயிந்திரம், நிருதி, பாக்கியம், கந்தருவம், சந்திரம், அதிதி, வைஷ்ணவம், சாவித்திரி, வாயவ்யம் ஆகிய முகூர்த்த நேரங்கள் சுப பலன்களைத் தரும். இந்த வேளைகளில் செய்யப்படும் காரியங்கள் வெற்றியையும், புகழையும், நல்ல பலன்களையும் பெற்றுத் தரும்.

மற்றவை பெரும்பாலும் ஏமாற்றத்தைத் தரக்கூடியவை, அமைதியற்ற சூழலை உருவாக்குபவை. ஆகவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ஏற்க வேண்டிய சுபமுகூர்த்தங்களில் மிகவும் சிறப்பானது, பகல் நேரத்தில் 11. 36 முதல் 12.24 மணி வரையிலும் உள்ள அபிசித்து முகூர்த்தம் ஆகும். இது மிகவும் உத்தமமானது. இந்த நேரத்தில் நல்ல காரியங்களைச் செய்தால், அது நூறாயிரம் குற்றங்களையும் போக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

ஆகவே உபநயனம் செய்தல், பெண் பார்க்கும் படலம், திருமணம், சாந்தி முகூர்த்தம், வளைகாப்பு, உபநயனம், மனைக்கு அடிகோலுதல், கிரகப்பிரவேசம், புதுவேலையில் சேர்வது, வெளிநாடுகளுக்குப் பயணம் புறப்படுதல், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் முதலானவற்றை அபிசித்து முகூர்த்த வேளையில் செய்வதால், மிகுந்த நற்பலன்கள் விளையும்.