Published:Updated:

சுக்கிர ஓரையில் என்னென்ன செய்யலாம்?

சுக்கிர பகவான்
பிரீமியம் ஸ்டோரி
சுக்கிர பகவான்

ஜோதிட விபூஷண் டாக்டர் தஞ்சை இராஜ.ஞானசேகர்

சுக்கிர ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஜோதிட விபூஷண் டாக்டர் தஞ்சை இராஜ.ஞானசேகர்

Published:Updated:
சுக்கிர பகவான்
பிரீமியம் ஸ்டோரி
சுக்கிர பகவான்

நாள் நட்சத்திரம் பார்ப்பது போலவே சுப ஓரை யைக் கவனித்து தொடங்கப்படும் செயலும் வெற்றியில் முடியும். ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்தையும் ஒரு கிரகம் ஆட்சி செலுத்தும். ராகு, கேது என்ற சாய கிரகங்களுக்கு இதில் இடமில்லை. மீதமுள்ள ஏழு கிரகங்களும் மாறி மாறி தொடர்ச்சியாக தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன.

சுக்கிர ஓரையில் என்னென்ன செய்யலாம்?

வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி ஆகும். அவ்வகையில் குறிப்பிட்ட நாளின் அதிபதியாக வரும் கிரகமே அந்த நாளின் முதல் ஓரைக்கு அதிபதி. இந்த ஓரைகளில் நாமாக தேர்வு செய்து சில காரியங்களைத் தொடங்க உதவுவது சுக்கிர ஓரைதான்.

ஒரு நிகழ்ச்சி... நல்லா எண்டெர்டெயின் பண்ணனுமா... அந்த நிகழ்ச்சியை சுக்கிர ஓரை யில் ஆரம்பிக்கலாம். மியூசிக் கம்போஸ் பண்ண உட்காருகிறீர்களா? அந்த வேலையை சுக்கிர ஓரையில் ஆரம்பிக்கலாம்.

வேலை கொஞ்சம் சீக்கிரம் முடியணுமா? சுக்கிர ஓரை காலத்துல சந்தோஷமா ஆரம்பிக்க லாம். அந்த வேலை மிக அற்புதமா சீக்கிரமா முடியும்.

சுக்கிர ஓரையில் என்னென்ன செய்யலாம்?

நண்பர்களிடம் விருப்பத்தைத் தெரிவித்து, அவர்கள் அதை ஏற்கும்படி செய்யவேண்டுமா? சுக்கிர ஓரையில் நண்பர்களைச் சந்தியுங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள்; சாதகமான பதிலையும் அவர்களின் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். விருப்பத்தை, ஆசையைத் தூண்டு வது சுக்கிர ஓரை.

முதல் கல்யாணமோ, மறு விவாகமோ எதுவாயி னும் கல்யாணப் பேச்சுவார்த்தைகளை சுக்கிர ஓரையில் பேசி முடிக்கலாம். தடங்கல்கள், சிற்சில மனப் பிரச்னைகள் போன்றவை இருந்தாலும் அவை எல்லாம் விலகி பேச்சுவார்த்தை நல்லபடி யாக முடியும். கல்யாணம் சிறப்பாக நடக்கும்.

விருந்துக்குப் புறப்படுவதாக இருந்தாலும் சரி, நீங்கள் விருந்து கொடுப்பதாக இருந்தாலும் சரி... அதற்கு சுக்கிர ஓரையைத் தேர்ந்தெடுத்து செயல் படுத்துங்கள்; விருந்து களைகட்டும்.

வீட்டில் சிறப்பாக ஏதேனும் சமைச்சுச் சாப்பிடலாம்னு முடிவு செய்தால், சுக்கிர ஓரையில் சமைக்க ஆரம்பிக்கலாம். அன்றைய சாப்பாடு வீட்டாரை மிகவும் குஷிப் படுத்தும்

சுபகாரியங்களுக்குத் துணிமணி வாங்க போறீங்களா... சுக்கிர ஓரை சிறப்பானது. இந்த ஓரையில் புறப்பட்டுச் சென்றால் அந்த ஷாப்பிங்க் மனசுக்குத் திருப்தியா சந்தோஷமா அமையும். புதுத் துணிகள், நகைகளைப் போட்டுப் பார்க்கவும் சுக்கிர ஓரையே சிறப்பானது. இதன் மூலம் ஆடை, ஆபரணங்கள் மென்மேலும் சேரும்.

சுபகாரியங்களுக்கு ஆர்க்கெஸ்ட்ரா, பந்தல் அலங்காரம், கல்யாணை மேடை அலங்காரம், ஊர்வலத்துக்குக் கார்... இந்த ஏற்பாடுகளுக்கு முன்தொகை கொடுக்க சுக்கிர ஓரை ஏற்றது. எல்லா ஏற்பாடுகளும் தடையின்றி, மிகச் சிறப்பாக அமையும். அதேபோல் அலங்காரம், கார்-வாகனம், பந்தல் ஏற்பாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்வோரும் சுக்கிர ஓரையிலேயே இந்த வேலைகளை ஆரம்பிக்கலாம்; தொழில் அமோகமாக இருக்கும்.

சுக்கிர ஓரையில் என்னென்ன செய்யலாம்?

மகனுக்கு டூவீலர் வாங்கிக் கொடுப்பது, உங்களுக்காக சொந்தமாய் ஒரு கார் வாங்குவது, தொழில் நிமித்தம் புது கனரக வாகனங்கள் - லோடு வண்டி வாங்குவது, மாடு - கன்று வாங்குவது இவை எல்லாவற்றையும் சுக்கிர ஓரையில் செய்தால் விருத்தி ஏற்படும்.

`கொடுத்த கடனை வெகு நாட்களாக வசூலிக்க முடியவில்லையே’ என்ற கவலையா? சுக்கிர ஓரையில் போன் செய்து கேளுங்கள் அல்லது நேரில் செல்லுங்கள்... நல்ல பதில் கிடைக்கும். கொடுத்த கடன் தொகை விரைவில் கைக்கு வரும்.

உங்கள் பெண்ணின் நடன அரங்கேற்றம், அதுதொடர்பான ஏற்பாடுகளை ஆரம்பிப்பது, அலுலகத்தில் லீவு கேட்பது, குழுவாக சேர்ந்து நல்ல காரியங்கள் தொடங்குவது, சகோதர சகோதரிகளுக்குப் பரிசுப் பொருள் அனுப்புவது, இனிப்புக்கு ஆர்டர் கொடுப்பது அல்லது வீட்டிலேயே இனிப்புப் பலகாரங்கள் செய்யத் தொடங்குவது ஆகிய அனைத்தையும் சுக்கிர ஓரையில் செய்வது மிகவும் சிறப்பு.

கண் சிகிச்சை அல்லது வேறு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குப் புறப்படுவதற்கு மட்டும் சுக்கிர ஓரை வேண்டாம். மற்றபடி சகல சுப காரியங்களுக்கும் சுக்ர ஓரை மிகச் சிறப்பானது!

சர்ப்ப தோஷம் நீங்கும்!

மிக விசேஷமான திதி நாள் பஞ்சமி. அம்பாள் வழிபாட்டுக்கு உகந்தது. மேலும் இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதைகள். எனவே, நாக வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள், இந்த திதியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டால், நாக தோஷம் நீங்கும். நாக பஞ்சமி விசேஷத்தன்மை கொண்ட திதியாகும்.

இந்தத் திதி நாளில் அனைத்துச் சுப காரியங்களையும் செய்யலாம். குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் கருதப் படுகிறது. நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் தீர, இந்த திதியில் மருந்து உட்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். விஷம் தொடர்புடைய பயம் நீங்கும்.

-கே.பிரபா, கடலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism