Published:Updated:

கல்யாண வரம் தரும் பெருமாள் மாலை!

வசிஷ்டபுரம் பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
வசிஷ்டபுரம் பெருமாள்

கல்யாணம் வரம் அருளும் வசிஷ்டபுரம் பெருமாள்

கல்யாண வரம் தரும் பெருமாள் மாலை!

கல்யாணம் வரம் அருளும் வசிஷ்டபுரம் பெருமாள்

Published:Updated:
வசிஷ்டபுரம் பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
வசிஷ்டபுரம் பெருமாள்

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது வசிஷ்டபுரம். அருள்மிகு மகிழ்ந்தவல்லி சமேதராக ரங்கநாதப் பெருமான் அருளும் இவ்வூரை `வசிஷ்டா் குடி’ என்றும் போற்றுவர். ராகு-கேது தோஷங்களால் அவதியுறும் அன்பா்கள், இந்த ஆலயத்துக்குச் சென்று பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும்.

கல்யாண வரம் தரும் 
பெருமாள் மாலை!

இரு மனங்கள் ஒன்றிணைவது மட்டுமல்ல திருமணம்; இரண்டு குடும்பங்களின் சங்கமம். அவர்களின் வழியாக வாழையடி வாழையாகத் தழைக்கும் ஒரு சந்ததியின் தொடக்கம்.

திருமணத்துக்குப் பெண் பார்க்கவோ, வரன் பார்க்கவோ தொடங்கும்போது ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம். ஜோதிட சாஸ்திரபடி ஜாதகக் கட்டத்தில் லக்னம் தொடங்கி, 12-வது வீடு வரை ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு விதமான பொறுப்பு உண்டு.

திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை களத்திரஸ்தானம் அல்லது சப்தமஸ்தானம் எனப்படும் ஏழாமிடத்தில் என்ன கிரகம் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். எந்த கிரகமும் இல்லா விட்டால், ஏழாமிடத்துக்கு உடைய கிரகம் எந்த வீட்டில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதேபோல் ஜாதகத்தில் மற்ற நிலைகளையும் நன்கு ஆராய்ந்து, தோஷங்கள் ஏதேனும் உள்ளனவா என்றும் அறிய வேண்டும்.

சிலருக்கு செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற காரணங்களால் திருமணம் கூடிவருவதில் தடை ஏற்படும். இப்படியான அன்பர்கள் சுயம்வர பார்வதி பூஜை மற்றும் ஹோமம் செய்து பலன் அடையலாம். கெளரிதேவியின் அருளால் கல்யாண பாக்கியம் விரைவில் கிடைக்கும். மார்கழியில் பாவை நோன்பு இருந்து பெருமாளின் திருவருளையும் பெறலாம்.

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது வசிஷ்டபுரம். இது கல்யாண வரம் தரும் பரிகாரத் தலமாகும். ஶ்ரீராமனின் குலகுருவான வசிஷ்டர் தன் மனைவி அருந்ததியுடன் தவமிருந்த ஊர். பெருமாள் இந்தத் தம்பதிக்கு ரங்கநாதராக காட்சி தந்து அருள்பாலித்தாராம். அருள்மிகு மகிழ்ந்தவல்லி சமேதராக ரங்கநாதப் பெருமான் அருளும் இவ்வூரை `வசிஷ்டா் குடி’ என்றும் போற்றுவர்.

திருமணத் தடையால் வருந்தும் அன்பர்கள், இத்தலத்தில் சுவாமிக்குத் திருக் கல்யாண வைபவம் நடைபெறும்போது, பெருமாளுக்குச் சாற்றிய மாலையை பெண்ணும், தாயாருக்குச் சாற்றிய மாலையை ஆணும் வாங்கி அணிந்து கொண்டு, திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்து வணங்கவேண்டும். இதனால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

தசரதச் சக்ரவா்த்தியும் ஶ்ரீராமபிரானும் அரங்கநாதரை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளதாக இக்கோயிலின் தலவரலாறு தொிவிக்கிறது. புதன் கிழமைகளில் இங்குள்ள சந்தான கிருஷ்ணனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டின்போது மழலை வரம் வேண்டி, பல அன்பா்கள் பிராா்த்தனை செய்து கொள்கின்றனா். சந்தான கிருஷ்ணனுக்குச் செய்யப்படும் பாலபிஷேகத்தைப் பிரசாதமாகப் பெற்று அருந்துவதோடு, அப்பெருமானை தங்களது மடியில் கிடத்தி வழிபாடு செய்யும் மங்கையருக்கு, விரைவில் சந்தான ப்ராப்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism