Published:Updated:

5 இலைகள்... அற்புத பலன்கள்... பலன் தரும் பத்ர அர்ச்சனையின் சிறப்புகள் என்ன?

மகா வில்வம்
மகா வில்வம்

5 இலைகள்... அற்புத பலன்கள்... பலன் தரும் பத்ர அர்ச்சனையின் சிறப்புகள் என்ன?

இன்றைய பஞ்சாங்கம்

21.5.21 வைகாசி 7 வெள்ளிக்கிழமை

திதி: நவமி காலை 6.23 வரை பிறகு தசமி

நட்சத்திரம்: பூரம் காலை 10.58 வரை பிறகு உத்திரம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல்10.15 வரை / பகல் 4.30 முதல் 5.30 வரை

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்

சந்திராஷ்டமம்: திருவோணம் காலை 10.58 வரை பிறகு அவிட்டம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: ராஜராஜேஸ்வரி அம்பிகை

பலன் தரும் பத்ர அர்ச்சனையின் சிறப்புகள்!

நம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கை இறைவனால் அருளப்பட்டது. அந்த இயற்கையிலிருக்கும் அனைத்தையும் அவனுக்கே சமர்ப்பணம் ஆக்குவதுதான் ஆகச்சிறந்த பக்தியின் அடையாளம். அதனால்தான் இயற்கையாகக் கிடைக்கும் மலர்களை நாம் வழிபாடுகளில் பயன்படுத்துகிறோம். அதேவேளையில் வழிபாடுகளில் மலர்களுக்கு இணையான முக்கியத்துவம் இலைகளுக்கும் உண்டு. இலைகள் கொண்டு அர்ச்சிப்பதன் மூலம் இறைவனின் அருளை மிக எளிதாகப் பெறலாம். அதுவும் நம் வீடுகளுக்கு அருகிலேயே கிடைக்கும் இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது மிகவும் விசேஷம். ஒவ்வொரு இலைக்கும் ஒரு விசேஷத்தன்மை உண்டு. அதை உணர்ந்து அதற்குரிய தெய்வத்துக்கு அந்த மலரை சமர்ப்பித்தால் சகல நன்மைகளும் உண்டாகும். ‘அனைத்து வழிபாடுகளையும்விட பக்தியோடு ஒரு வில்வம் சமர்ப்பித்தாலே நான் மகிழ்வேன்’ என்கிறார் ஈசன். இத்தனை மகத்துவம் வாய்ந்த பத்ர வழிபாடு குறித்த தகவல்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம் :குழப்பம் : தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். நண்பர்களால் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

ரிஷபம் : திட்டம் : இன்று திட்டமிட்டுப் பணி செய்ய வேண்டிய நாள். பணவரவும் அதிகரிக்கும். சகோதர உறவுகள் பணம் கேட்டு வருவார்கள். சிக்கன நடவடிக்கையும் தேவை. - சிக்கனம் தேவை இக்கணம்!

மிதுனம் : துணிவு : அனுகூலமான நாள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். - துணிவே துணை!

கடகம் : செலவு : செலவுகள் அதிகரிக்கும் நாள். பொறுமை அவசியம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. செயல்கள் அனுகூலமாக்கும். - செலவே சமாளி!

சிம்மம் : திறமை : பணியிடத்திலும் வீட்டிலும் உங்கள் மரியாதை அதிகரிக்கும். சிறு பிரச்னை ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நன்மைகள் நடைபெறும் நாள். - திறமைக்கு மரியாதை!

கன்னி : மகிழ்ச்சி : குடும்பத்திலிருந்த பிரச்னை தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும். பணவரவும் அனுகூலமும் உண்டாகும். - என்ஜாய் தி டே!

துலாம் : சாதகம் : முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். செயல்கள் அனைத்தும் சாதகமாக முடியும். மனதில் உற்சாகம் பிறக்கும். - சாதகமான ஜாதகம் இன்று!

விருச்சிகம் : உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். செயல்களில் இருந்த இழுபறி நீங்கி வெற்றிகரமாகும். - ஆல் தி பெஸ்ட்!

தனுசு : ஆரோக்கியம் : செயல்கள் அனைத்தும் சாதகமாகும் நாள். வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். - ஹெல்த் இஸ் வெல்த்!

மகரம் : விவாதம் : இன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும். யாரோடும் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

கும்பம் : நன்மை : எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். முக்கிய வேலைகளை இன்றே முடித்துவிடுங்கள். பணவரவும் காரிய அனுகூலமும் நிறைந்த நாள். - நாள் நல்ல நாள்!

மீனம் : வெற்றி : செயல்களில் வெற்றி உண்டாகும் நாள். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்களோடு பேசுவது மகிழ்ச்சி தரும். - வெற்றிக்கொடிகட்டு!

அடுத்த கட்டுரைக்கு