Published:Updated:

விண்ணில் அபூர்வ நிகழ்வு கிரகமாலிகா யோகம்!

கிரகமாலிகா யோகம்
பிரீமியம் ஸ்டோரி
கிரகமாலிகா யோகம்

ஜோதிடர் ஆர்.சுப்ரமணியன்

விண்ணில் அபூர்வ நிகழ்வு கிரகமாலிகா யோகம்!

ஜோதிடர் ஆர்.சுப்ரமணியன்

Published:Updated:
கிரகமாலிகா யோகம்
பிரீமியம் ஸ்டோரி
கிரகமாலிகா யோகம்

விண்ணில் பல்லாண்டுகளுக்கு ஒருமுறை பல அபூர்வங்கள் நிகழ்வது உண்டு. விசேஷ அமைப்பில் கிரகங்கள் நிலைகொண்டு உரிய பலாபலன்களைத் தரும். அவ்வகையில், நிகழும் ஆனி மாதம் 18-ம் தேதி (2.7.22) சனிக்கிழமை காலை 9:45 முதல் மறுநாள் ஆனி மாதம் 19-ம் தேதி (3.7.22) ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரையிலும் ஆறு கிரகங்கள் வரிசையாக தத்தமது சொந்த ஆட்சி வீட்டில் அமையப் போகின்றன.

விண்ணில் அபூர்வ நிகழ்வு கிரகமாலிகா யோகம்!

அதாவது கும்பம் முதல் கடகம் வரையிலும் ஆறு ராசிகளில் முறையே சனி, குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் கீழ்க்காணும் விவரப்படி நிலைகொண்டிருக்கும். இப்படியான அமைப்பைக் கிரக மாலிகா யோகம் என்பார்கள்.

சனி - கும்பத்தில் ஆட்சி
குரு - மீனத்தில் ஆட்சி
செவ்வாய் - மேஷத்தில் ஆட்சி
சுக்கிரன் - ரிஷபத்தில் ஆட்சி
புதன் - மிதுனத்தில் ஆட்சி
சந்திரன் - கடகத்தில் ஆட்சி


இப்படியான நிகழ்வு நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். அவ்வகையில் வரும் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தினங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த தினங்களில் என்ன செய்யலாம்?

சூரியன் ஆட்சிபலம் பெற்ற புதனுடன் இணைந் துள்ளார். இதை புத ஆதித்யயோகம் என்பர். சந்திரனுக்குக் குரு பார்வை. ஆட்சிபலம் பெற்ற செவ்வாயுடன் ராகு இருக்கிறார்.

ஆக, இந்த இரண்டு தினங்களிலும் விசேஷ வழிபாடுகளில் ஈடுபடலாம். அவரவர் தங்களின் இஷ்டதெய்வத்துக்கு வீட்டில் உரிய நைவேத்தியங்கள் படைத்து, நெய் விளக்குகள் ஏற்றிவைத்து குடும்பத்துடன் வழிபடலாம்.

ஆன்மிகச் சொற்பொழிவுகளை நடத்தவும் கேட்கவும் செய்யலாம். இந்த தினங்களில் வேல்மாறல் பாராயணம், திருவாசக முற்றோதுதல், சுந்தரகாண்டம் பாராயணம் முதலான வைபவங்களை நிகழ்த்தி வழிபடலாம். அருகிலுள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் அபிஷேக வைபவங்களுக்குத் திரவியங்கள் வாங்கிக் கொடுத்து வழிபட்டு வரலாம். பொதுவில் நிகழும் அன்ன தானத்துக்கு இயன்ற பங்களிப்பை வழங்கலாம். இதுபோன்ற நற்காரியங்கள் பன்மடங்குப் புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

இந்தத் தினங்களில் பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் மேலான புகழும், அந்தஸ்தும் பெற்று சீருடன் வாழ்வார்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம்!