Published:Updated:

Gurupeyarchi Palangal 2023: சிம்ம ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

குருப்பெயர்ச்சி சிம்மம்

இதுவரை மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து மனப்போராட்டத்தையும், பணப்போராட்டத்தையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 22.4.2023 முதல் 1.5.2024 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைகிறார். இனி புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள்.

Published:Updated:

Gurupeyarchi Palangal 2023: சிம்ம ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

இதுவரை மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து மனப்போராட்டத்தையும், பணப்போராட்டத்தையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 22.4.2023 முதல் 1.5.2024 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைகிறார். இனி புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள்.

குருப்பெயர்ச்சி சிம்மம்
மனிதநேயமும் மண்ணாளும் யோகமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... தவறுகளைத் தட்டிக் கேட்கும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் நீங்கள். உறவினர்கள், நண்பர்களுக்காக ஓடி ஓடி உழைத்தும் இறுதியில் விமர்சனத்திற்கு உள்ளாகுபவர்களும் நீங்கள்தான்.

நேர்மையால் எதையும் சாதிக்கத்துடிக்கும் உங்கள் ராசிக்கு இதுவரை மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து மனப்போராட்டத்தையும், பணப்போராட்டத்தையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 22.4.2023 முதல் 1.5.2024 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைகிறார். இனி புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள்.

சிம்ம ராசி
சிம்ம ராசி

'ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு' என்ற பழமொழிக்கேற்ப இனி எதைத் தொட்டாலும் வெற்றியில் போய் முடியும். அடிக்கடிக் குடும்பத்தில் நிலவி வந்த வீண் விவாதங்கள், சண்டை சச்சரவுகள் எல்லாம் இனி முடிவுக்கு வரும். கையில் கிடைத்தது வாய்க்குள் போவதற்குள் தடைப்பட்டுப் போனதே! எதற்கெடுத்தாலும் குடும்பத்திலுள்ளவர்கள் உங்களைதான் குறைகூறினார்களே சில நேரங்களில் நமக்குச் சரியாக வாழத்தெரியவில்லையோ என்றெல்லாம் யோசித்தீர்கள் அல்லவா... இனி அந்த நிலை மாறும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நேரங்காலம் பார்க்காமல், சிறிதுகூட ஓய்வெடுக்காமல் உழைத்தும் எந்தவிதப் பலனுமில்லையே, என்று புலம்பினீர்களே, இனி கையில் நாலுகாசு தங்கும்.

வருங்காலத்தை மனதில் கொண்டு கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். குடும்ப விசேஷங்களில் ஒதுக்கப்பட்டீர்களே! இனி எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பணவரவு சரளமாக வருவதால் வங்கியிலிருந்த நகையை மீட்பீர்கள். நெடுநாள் கனவான வீடு, மனை வாங்கும் ஆசை நிறைவேறும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் துவண்டிருந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளைக் கூடக் கவனிக்கமுடியாதபடி ஓடி ஓடி உழைத்தீர்களே! இனி அவர்களுக்காக நேரம் ஒதுக்குவீர்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வரன் அமையும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இயக்கம், சங்கம் இவற்றில் நல்ல பதவி கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களின் சுபகாரியங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். வட்டிமேல் வட்டியாக வாங்கி மலைபோல் கடன் வைத்திருந்தீர்களே, இனி அவற்றையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள். சின்னச் சின்ன வேலையைத் தொட்டால்கூட தடங்கலில் போய்தான் நின்றதே, இனி முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும்.

சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள்
சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள்

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர, சகோதரிகளுடன் இருந்த கோபதாபங்கெல்லாம் விலகிப் பாசமழை பொழிவீர்கள். அடிப்படை வசதிகள் வந்து சேரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி ஒய்யாரமாகச் செல்வீர்கள். பழைய வாகனத்தை மாற்றிவிட்டுப் புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள். வசதியான வீட்டில் குடி புகுவீர்கள். லோன் எடுத்து சொந்த வீடு வாங்குவீர்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்களின் எதிர்காலத்தில் அக்கறைகொண்டு உங்களின் அனுபவ அறிவைப் பயன்படுத்தி அறிவுரைகளைத் தருவீர்கள். வெகுநாள்களாகப் போக நினைத்தும் தடைப்பட்டுக் கொண்டிருந்ததே! இப்பொழுது குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு.

குருபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பாதை தவறிச் சென்ற பிள்ளைகள் இனி உங்கள் ஆலோசனையை ஏற்று நல்வழிக்குத் திரும்புவார்கள். அவர்களால் பெருமையடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி அயல் நாட்டில் படிப்பு, வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை விமர்சையாக நடந்துவீர்கள். பழைய சொந்தம்-பந்தங்கள் தேடி வருவார்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் பயனடைவீர்கள். எவ்வளவு காசு வந்தாலும் அவசரத்திற்கு எதுவும் இல்லாமல் தவித்தீர்களே! இனி கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். முன்பு போலக் கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கும் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை நீங்கும்.

குருபகவான்
குருபகவான்

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

23.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலக்கட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை, சற்றே உடல் நலக்குறைவு வந்து நீங்கும். பணவரவு உண்டு. செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் மகம் நட்சத்திரத்திரக்காரர்களுக்கு திடீர் பணவரவு, எதிலும் வெற்றியுண்டு, எதிரிகளை வீழ்த்துவீர்கள், கடன் பிரச்னை ஓயும், திருமணம் கூடிவரும். ஆனால் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், சிறுசிறு தடைகளும் வந்து நீங்கும். முன்னேற்றம் தடைப்படாது.

17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் உங்கள் ராசிநாதனான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் நிர்வாகத் திறமைக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. புது வேலை கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

11.9.2023 முதல் 20.12.2023 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால் பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு. செல்வாக்குக் அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும்.

வியாபாரம் : சோர்ந்திருந்த நீங்கள் இப்போது புத்துயிர் பெறுவீர்கள். தொழிலில் ஓர் ஆர்வம் பிறக்கும். பெரிதாக முதலீடு செய்து போட்டியாளர்களைத் திகைக்கச் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கப் புது திட்டம் தீட்டுவீர்கள். வராமலிருந்த பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். பழுதாகியிருந்த கடையை நவீன வசதிகளைப் புகுத்தி அழகுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்துமோதல்கள் நீங்கும்.

தேவூர் அனுக்கிரக தட்சிணாமூர்த்தி
தேவூர் அனுக்கிரக தட்சிணாமூர்த்தி

வேலை : காலநேரம் பார்க்காமல் உழைத்தும் அதற்கான பலனையும், பாராட்டையும் வேறொருவர் தட்டிச் சென்றாரே! இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். சிலருக்கு வேறு நல்ல புது வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினர்களுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த குருப்பெயர்ச்சி ஒடுங்கியிருந்த உங்களை ஓங்கி வளர வைப்பதுடன் எங்கும் எதிலும் வெற்றியையும், எதிர்பாராத வளர்ச்சியையும் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: நாகை மாவட்டம், கீவளூர் வட்டத்தில் உள்ள தேவூரில் குடிகொண்டிருக்கிறார் ஶ்ரீதேன்மொழி அம்பாள் சமேத ஶ்ரீதேவபுரீஸ்வரர். தேவ குரு பிரகஸ்பதி அருள்பெற்ற இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; சகல நன்மைகளும் உண்டாகும்.