Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 - தனுசு

தனுசு

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பற்று - வரவு உயரும். என்றாலும் பெரிய முதலீடுகள் வேண்டாம்.

Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 - தனுசு

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பற்று - வரவு உயரும். என்றாலும் பெரிய முதலீடுகள் வேண்டாம்.

தனுசு

சிறு உளிதான் பெரிய மலையை உடைக்கும் என்ற சூட்சுமத்தை உணர்ந்த நீங்கள், சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பவர்கள். இதுவரை மூன்றாம் வீட்டில் அமர்ந்து, உங்களை நாலாவிதத்திலும் அலைய வைத்த குருபகவான் இப்போது நான்காவது வீட்டிற்குள் அமர்கிறார். 14.4.22 முதல் 22.4.23 வரை வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரும். வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிய வேண்டி வரும். உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.

தனுசு
தனுசு

தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் வந்துபோகும். உறவினர்கள், நண்பர்களின் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாகக் கையாளுங்கள். நெடுந்தூர, இரவுநேரப் பயணங்களைத் தவிர்க்கப்பாருங்கள். வாகன விபத்துகள் நிகழக்கூடும். குருபகவான் உங்கள் சுக ஸ்தானத்தில் ஆட்சிப்பெற்று அமர்வதால், அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சுற்றியுள்ளவர்களின் சுயரூபத்தை குருபகவான் காட்டிக் கொடுப்பார். பணத்தட்டுபாடு ஓரளவு குறையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். எந்த சிக்கலாக இருந்தாலும் பெரியவர்களை வைத்துப் பேசி சுமுகமாக முடிக்கப்பாருங்கள். பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் அவசரப்படவேண்டாம். உயர் கல்வி- உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள்.

வெளிவட்டாரத்தில் எவரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். சில நேரங்களில் உங்களின் கோபதாபங்களை, கூடா பழக்கவழக்கங்களை வாழ்க்கைத் துணைவர் சுட்டிக்காட்டுவார்; தயங்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். வறுத்த, பொரித்த உணவுகள் வேண்டாம்; நேரம் தவறி சாப்பிடுவதையும் தவிருங்கள். சொத்து வாங்கும்போது மிகவும் கவனம் தேவை. அரசியல்வாதிகள் ஆதாரமின்றி எவரையும் விமர்சிக்க வேண்டாம்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்...

14.4.22 முதல் 29.4.22 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் திடீர்ப் பயணங்கள், தாயாரின் உடல்நிலை பாதிப்பு, வீடு வாகனப் பாராமரிப்புச் செலவுகள் அதிகரித்தல், எதிலும் ஒரு நாட்டமில்லாத நிலை ஆகியவை வந்து நீங்கும்.

30.4.22 முதல் 24.2.23 வரையிலும் உங்களின் தன, சேவகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்கிறார். முன்கோபம், வாக்குவாதம் வந்து நீங்கும். தோலில் அலர்ஜி வரக்கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்திலும் நிம்மதியுண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குருபகவான் வக்ரத்தில் செல்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவீர்கள். தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது.

24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்களின் சப்தம, ஜீவனாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பற்று - வரவு உயரும். என்றாலும் பெரிய முதலீடுகள் வேண்டாம். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று டென்ஷன் ஏற்படுத்துவார்கள். அவர்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய யுக்திகளைக் கையாளுங்கள். ரியல் எஸ்டேட், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் கருத்து மோதல்கள் வரக்கூடும். கொஞ்சம் வளைந்துகொடுத்துப் போகவும்.

தனுசு
தனுசு

உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க நேரிடும். அலுவல ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. மேலதிகாரியிடம் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் குருபகவான் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி அனுபவங்களைப் பெற்றுத் தருவதுடன், வருங்காலத்தில் சாதிப்பதற்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்துவதாக அமையும்.