Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 - கடகம்

கடகம்

வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். நவீன விளம்பரங்கள், அதிரடியான சலுகைகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 - கடகம்

வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். நவீன விளம்பரங்கள், அதிரடியான சலுகைகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள்.

Published:Updated:
கடகம்

சீர்திருத்த சிந்தனை அதிகமுள்ள நீங்கள், மந்திரியாக இருந்தாலும் மனதில் பட்டதைப் பளிச்சென பேசுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து எதையும் முழுசாக செய்யவிடாமல் டென்ஷனாக்கிய குருபகவான், இப்போது 14.4.22 முதல் 22.4.23 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் அமர்வதால், உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றியடையும்.

கடகம்
கடகம்

‘ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப அடிப்படை வசதிகள் உயரும்; அந்தஸ்து பெருகும். எடுத்த வேலைகளை முடிக்க முடியாமலும், அடுத்த வேலைகளைத் தொட முடியாமலும் தத்தளிக்க வைத்த குரு, இனி தொட்டதெல்லாம் துலங்கவைப்பார். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். தள்ளிப் போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களை கட்டும். அறிவுபூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் பேசத் தொடங்குவீர்கள்.

கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். வாழ்க்கைத் துணைவர் உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். அவர் வழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு இருந்த கூடாநட்பு விலகும். அவருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திரப் பலன்கள்:

14.4.22 முதல் 29.4.22 வரை உங்களின் பாக்கியாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் திடீர் யோகம், பண வரவு, சொத்துச் சேர்க்கை எல்லாம் உண்டு. மகளுக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். புது வேலை அமையும். செல்வாக்கு கூடும்.

30.4.22 முதல் 24.2.23 வரை உங்களின் சப்தம, அட்டமாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டு. அதேநேரம் சிறு சிறு மனஸ்தாபங்களும் ஏற்படும். காலில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு பகவான் வக்ரத்தில் செல்வதால், வேலைச் சுமையால் பதற்றம் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கடன் பிரச்னையால் கௌரவத்துக்குப் பங்கு வந்துவிடுமோ என்ற அச்சம் எழும்.

24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்களின் தைரிய, விரய ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர் உதவுவார். ஆடை, ஆபரணங்கள் சேரும். வாகனத்தை மாற்றுவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடகம்
கடகம்

வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். நவீன விளம்பரங்கள், அதிரடியான சலுகைகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். போட்டியாளர்கள் உங்களுடன் போட்டியிடமுடியாமல் திணறுவார்கள். கடையை கொஞ்சம் விரிவுபடுத்துவீர்கள். விலகிச் சென்ற பழைய வேலையாள்களே மீண்டும் வருவார்கள். ரியல் எஸ்டேட், கணினி உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில், பங்குதாரர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து போனாலும் உங்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உத்தியோகத்தில் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனி புகழாரம் பாடுவார். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு, இனி உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்கள் உங்களை சண்டைக் காரர்களாக பார்த்தார்களே! இனி சிரித்துப் பேசி நட்புறவாடுவார்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி மதில்மேல் பூனையாக இருந்த உங்களைக் குன்றிலிட்ட விளக்காக ஒளிரவைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism