Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 - மேஷம்

மேஷம்

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். பல வகையிலும் கடன் வாங்கிப் புது முதலீடு செய்வீர்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 - மேஷம்

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். பல வகையிலும் கடன் வாங்கிப் புது முதலீடு செய்வீர்கள்.

Published:Updated:
மேஷம்

புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர் நீங்கள். இதுவரையிலும் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்து, ஓரளவு பணப்புழக்கத்தையும், பிரபலங்களின் அறிமுகத்தையும், வசதி வாய்ப்பையும் கொடுத்து வந்தார் குரு பகவான். இப்போது 14.4.22 முதல் 22.4.2023 வரையிலும் விரய வீடான 12-ம் வீட்டில் வந்து அமர்கிறார்.

மேஷம்
மேஷம்

இந்த காலக்கட்டத்தில் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களில் சிலர் கடன் பட்டாவது சொந்த வீடு கட்டுவீர்கள். புதிய வாகனங்கள் அமையவும் வாய்ப்பு உண்டு. உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். அதேநேரம் தன்னிச்சையாக திடீர் முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். வீண் பிரச்னைகள் ஏற்படலாம். எந்தவொரு காரியத்திலும் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். அதேபோல், வீண் கெளரவத்துக்காக செலவு செய்வதை நிறுத்துங்கள். வீணாக சேமிப்புகளைக் காலி செய்ய வேண்டாம்.

உங்களின் வாழ்க்கைத் துணைவருக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப் படலாம். பிள்ளைகளிடம் கண்டிப்பு வேண்டாம். அவர்களின் விஷயத்தில் பரிவும் பக்குவமும் தேவை. எவருக்கும் தடாலடியாக வாக்குறுதி கொடுக்க வேண்டாம். எந்த வேலையையும் எந்த பொறுப்பையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்கவேண்டாம். ஒவ்வொன்றையும் நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

குரு பகவானின் நட்சத்திரப் பலன்கள்:

14.4.22 முதல் 29.4.22 வரையிலும் உங்களின் பாக்யாதிபதியான குரு பகவான், தன்னுடைய நட்சத்திரத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால், எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களுடன் மனக்கசப்புகள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்; மகனுக்கு வேலை கிடைக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.

30.4.22 முதல் 24.2.23 வரை உங்களின் ஜீவன, லாபாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு செல்கிறார். ஆகவே, மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. எனினும் சனிபகவான் உங்களுக்குப் பாதகாதிபதியாக இருப்பதால், திடீர் இழப்புகள், ஏமாற்றங்கள், குடும்பத்தில் திருப்தியற்ற போக்கு, உடல் வலி, சோர்வு வந்து செல்லும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். அதேநேரம், 8.8.22 முதல் 16.11.22 வரையிலும், குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே வக்ரத்தில் செல்கிறார். ஆகவே, வேலைச் சுமை, பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள், குடும்பத்தில் சலசலப்பு எல்லாம் குறையும். உத்தியோகத்தில் எதிர்ப்புகள் விலகும்.

24.2.23 முதல் 22.4.2023 வரையிலான காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் தைரிய, ரோக ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், உறவினர்களுடனான பகை நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஆனால் செலவினங்கள் துரத்தும். கடன் வாங்குவீர்கள். விபத்து, வீண்பழி வந்து நீங்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேஷம்
மேஷம்

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். பல வகையிலும் கடன் வாங்கிப் புது முதலீடு செய்வீர்கள். வேலையாட்கள் நெருக்கமாக இருந்தாலும் வியாபார ரகசியங்களைக் காப்பது நல்லது. கமிஷன், உணவு, மருந்து வகைகளால் ஆதாயம் உண்டு. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிக லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழிலில் கொஞ்சம் வளைந்து கொடுத்து போகவும்.

உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரிகளிடம் கவனம் தேவை. உயரதிகாரியின் பார்வை உங்கள் மேல் விழும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதுப் பொறுப்புகள் வகிப்பீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்குமுன் நிதானிப்பது நல்லது.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன், வாழ்வில் முன்னேற மாறுபட்ட அணுகுமுறை தேவை எனும் பாடத்தைத் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism