Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 - மிதுனம்

மிதுனம்

வியாபாரத்தில் தடாலடியாக செயல்படவேண்டாம். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுங்கள். சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கக்கூடும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 - மிதுனம்

வியாபாரத்தில் தடாலடியாக செயல்படவேண்டாம். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுங்கள். சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கக்கூடும்.

Published:Updated:
மிதுனம்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து யோகங்களையும், பண வரவையும் தந்த குருபகவான் இப்போது 14.4.22 முதல் 22.4.23 வரை 10-வது வீட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார்.

மிதுனம்
மிதுனம்

பத்தாம் இடமென்றால் பதவி, புகழெல்லாம் பறிபோய் விடுமே, என்று பதற்றம் தேவையில்லை. வேலைப்பளு கூடும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். எந்த வேலையை முதலில் முடிப்பது என்று குழப்பமும் டென்ஷனும் இருக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். தன்னம்பிக்கை குறையும். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். சின்னச் சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். உங்கள்மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.

விலையுயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

குருபகவானின் நட்சத்திரப் பலன்கள்:

14.4.22 முதல் 29.4.22 வரை உங்கள் பாதகாதிபதியான குரு பகவான், தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதியில் 4-ம் பாதத்தில் செல்வதால் உத்தியோகத் தில் இடையூறுகள், கணவன் மனைவிக்குள் கருத்து மோதல், சிறு சிறு விபத்துகள், உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் வந்து நீங்கும்.

30.4.22 முதல் 24.2.23 வரை உங்களின் அஷ்டம, பாக்கியாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். புதுத் திட்டங்கள் நிறைவேறும். இருந்தாலும் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். சகோதரருடன் மனத்தாங்கல் வரும். பூர்வீகச் சொத்தை விற்று விட்டு, புதிய சொத்து வாங்குவீர்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். 8.8.22 முதல் 16.11.2022 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால் பண வரவு உண்டு. வருமானம் உயரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

24.2.23 முதல் 22.4.23 வரை குரு உங்கள் ராசிநாதனும், சுகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், எதையும் சாதிப்பீர்கள். வருமானம் உயரும். தங்க ஆபரணம் சேரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். கல்யாணம் முடியும். வேலை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

வியாபாரத்தில் தடாலடியாக செயல்படவேண்டாம். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுங்கள். சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கக்கூடும். வேலையாள்கள் சில சமயங்களில் முரண்டு பிடிப்பார்கள். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலியுங்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போகவும். புதிய பங்குதாரர்கள் சேர்வார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிதுனம்
மிதுனம்

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அலுவல ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. தேவையில்லாமல் விடுப்பு எடுக்கவேண்டாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிம்மதியுண்டு. மூத்த அதிகாரிகளுடன் முரண்பட வேண்டாம். புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பிரபலங் களின் நட்பைப் பெற்றுத் தருவதுடன், யதார்த்த அணுகுமுறையால் முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism