திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் அசுவினி, பரணி, கார்த்திகை

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

நவகிரகங்களில் குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆவார். பூரண சுபகிரகமான குருபகவானின் இந்தப் பெயர்ச்சி ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறும் ஒன்று. பிலவ வருடம், ஐப்பசி மாதம் 27- ம் தேதி (13.11.2021) அன்று மாலை 6 மணி 10 நிமிடத்துக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மகர ராசியில் இதுவரை நீசமடைந்து இருந்த குருபகவான் தற்போது பெயர்ச்சி ஆகி ஸ்திர ராசியான கும்ப ராசிக்குள் சஞ்சரிக்க இருக்கிறார்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள் 
அசுவினி, பரணி, கார்த்திகை

ஒருவகையில் குருபகவான் பலம் பெற்று சஞ்சாரம் செய்வது அனைவருக்குமே நற்பலன்களை உண்டாகும். குருப்பெயர்ச்சியின் தொடக்கத்தில் குருபகவான் ராசி மாறினாலும் நட்சத்திரம் மாறாமல் அவிட்ட நட்சத்திரத்திலேயே 30.12.2021 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இவற்றையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எப்படிப்பட்ட பலன்கள் வாய்க்கும் என்பதை அறிந்துகொள்வோம்.

அசுவினி

சுவினிக்கு அதிபதி ஞானகாரகனான கேது. இந்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களைக் குறித்து, `பொய்யுரை ஒன்றுஞ் சொல்லான்; புகழ் பெற வாழ வல்லன்...’ என்று கூறுகிறது நட்சத்திர மாலை. ஆம்! `நெருக்கடி நேரத்திலும் உண்மையைச் சொல்லும் உத்தமர்கள் நீங்கள்.

அசுவினி தேவர்கள்
அசுவினி தேவர்கள்

இந்தக் குருப் பெயர்ச்சியில் குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தான குருவாக அமர்ந்து அருள்செய்யப் போகிறார். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். குரு பார்வை நன்மை தரும்; மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, சுமுக உறவு ஏற்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனை களை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கடனாகவும் கைமாற்றாகவும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரும் வாய்ப்பு ஏற்படும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் உதவியுடன் உங்கள் பணிகளை விரைந்து முடித்து, பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கிகள் கிடைக்கும். வியாபாரத் தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மொத்தத்தில், இந்தக் குருப்பெயர்ச்சி, சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக முடிக்கும் திறமையைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரணி

ரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்தவர்கள். பூமி காரகனான செவ்வாயின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், எலி வளையானாலும் தனி வளையே வேண்டும் என்று நினைப்பவர்கள்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள் 
அசுவினி, பரணி, கார்த்திகை

குரு பகவான் இனி உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் அமர்ந்து நீசபங்கம் பெறுவதால், வெளிச்சத்துத்துக்கு வருவீங்க. வருமானம் அதிகரிக்கும். குரு பார்வை நலன் சேர்க்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும்.

தடைப்பட்ட திருமணம் கூடி வரும். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. தாயார் மற்றும் தாய்வழியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். விலகியிருந்த மூத்த சகோதரர் விரும்பி வந்து பேசுவார்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும்.

அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை மாறி, பணிகளில் உற்சாக மாக ஈடுபடுவீர்கள். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். மொத்தத்தில், இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிக்கும்.

கார்த்திகை

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அதிகாரத்துக்குரிய சூரியனின் அம்சத்தில் பிறந்தவர்கள். உங்கள் நட்சத்திரம் கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்) எனில், இந்தக் குருப்பெயர்ச்சி வருமானத்தை அதிகரிக்கச் செய்யும். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள் 
அசுவினி, பரணி, கார்த்திகை

அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். பங்குச் சந்தை மூலம் பணம் வரத் தொடங்கும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். மனைவி வழியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும் பதவிஉயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையை பெருக்குவீர்கள்.

நட்சத்திரம் - கிருத்திகை 2, 3, 4 பாதம் (ரிஷபம்) எனில், 10-ம் இடத்தில் குரு. ஆனாலும் பதற்றம் வேண்டாம். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். தடைப்பட்ட காரியங்கள் நல்லவிதமாக முடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு உண்டு. உரிய அங்கீகாரம் இல்லையே எனும் ஆதங்கம் எழும். வியாபாரத்தில் அனுபவப் பாடங்கள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி, சமூகத்தில் வளைந்துகொடுத்துப் போகும் வித்தையைக் கற்றுத் தருவதாக அமையும்.