திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்

குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, மற்றும் புனர்பூசம் நட்சத்திரத்துக்கான பலன்களை விளக்குகிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள் 
ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எந்த வித்தையையும் விரிவாகக் கற்றுக்கொள்வதில் வல்லவர்கள். இந்தப் பெயர்ச்சியில் குரு, உங்கள் நட்சத்திரம் அமைந்த ரிஷப ராசிக்கு 10-ல் அமர்ந்து பலன் தரப் போகிறார்; 2,4,6 ஆகிய வீடுகளைப் பார்க்க இருக்கிறார்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள் 
ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்

உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயத்தையும் நீங்களே நேரடியாகக் கையில் எடுத்தால், வெற்றி நிச்சயம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். உங்கள் பலவீனங்களை அறிந்து அவற்றை விலக்கினால், உங்களை வெல்ல எவரும் இல்லை எனும் நிலை உண்டாகும். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். என்றாலும் அலைச்சலும், செலவினங்களும் உண்டு என்றாலும் அவற்றால் ஆதாயமும் உண்டு.

அலுவலகத்தில் விரும்பத் தகாத இடமாற்றம், சலிப்பு ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக சமாளிக்கும் எண்ணம் பிறக்கும்; தடைகளைத் தகர்த்தெறிய முனைப்புடன் செயல்படுவீர்கள்.

வியாபாரத்தில் அலட்சியம் வேண்டாம். பணியாளர்கள் விடுமுறையில் செல்வதால் அவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். அதேநேரம் வியாபார பாதிப்புகள் எதுவும் இருக்காது. பங்குதாரர்களின் ஆலோசனைகளைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சிறந்த அனுபவங்களைத் தருவதாக அமையும்.

மிருகசீரிடம்

மிருகசீரிடம் 1, 2 பாதங்கள் (ரிஷபம்) எனில், குருவின் பார்வை நன்மை சேர்க்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அனுபவஅறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புதிய வீட்டில் குடியேறும் வாய்ப்பு கனிந்து வரும். மருத்துவச் செலவுகள் குறையும்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள் 
ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். சிறிய சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறத் துடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்கவேண்டும். பங்குதார்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மிருகசீரிடம் 3, 4 பாதங்கள் (மிதுனம்) எனில், 9-ம் இடத்து குருவாக அருள்செய்வார். மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும்.மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் தயங்குவீர்கள். சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிப்பீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் உதவி உண்டு. விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும். பெண்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கைகூடும்; முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு நல்ல வேலை அமையும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்தும் முயற்சி சாதகமாகும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சகல விஷயங்களிலும் சாதகமான பலன்களைப் பெற்றுத் தரும்.

திருவாதிரை

திருவாதிரை முழுக்கவும் மிதுன ராசியில் அமைந்த நட்சத்திரம். உங்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து அருளப் போகிறார் குரு. அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3, 5 ஆகிய வீடுகளையும் பார்க்க இருக்கிறார். வாழ்வில் புதிய வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள் 
ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்

தள்ளிப்போன திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இப்போது கூடி வரும். பேச்சில் அனுபவ முதிர்ச்சி தென்படும். சுபச் செலவுகள் அதிகமாகும்.அலைச்சலைக் குறைத்து உடல் நலனில் கவனம் செலுத்தவும். சிலருக்குப் புது வீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு ஏற்படும்.

குழந்தை பாக்கியம் இல்லாத அன்பர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளை அல்லது பெண்ணின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமான திருப்பம் ஏற்படும். சில நேரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் தடைகள் அனைத்தும் நீங்கும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளைத் திறம்படச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளையும் சலுகைகளையும் பெற்று மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த தடை, தாமதங்கள் நீங்கும். பணியாளர்கள் சிறப்பான முறையில் ஒத்துழைப்பார்கள். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். எதிர்பார்த்தபடி லாபம் பெருகும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களின் மனச் சலனங்களையெல்லாம் போக்கி மகிழ்ச் சியையும் முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

புனர் பூசம்

ங்கள் நட்சத்திரம் புனர்பூசம் 1, 2, 3-ம் பாதங்கள் (மிதுனம்) எனில், செளபாக்கிய ஸ்தான குருவின் நற்பலன்கள் கிடைக்கும். குரு மிதுன ராசியையும், ராசிக்கு 3, 5 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார். ஆகவே, முக்கிய பிரமுகர்களால் நல்ல திருப்பம் ஏற்படும். குழந்தை இல்லாத அன்பர்களுக்கு குழந்தைப் பேறு கிட்டும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனைத் தந்து முடிப்பீர்கள்.

குருப்பெயர்ச்சி 
நட்சத்திர பலன்கள் 
ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்

உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்கள் விலகிச் செல்வார்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களின் நட்சத்திரம் புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்) எனில், குரு பகவான் அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். அவர் கடக ராசிக்கு 2, 4, 12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார். பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும். கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வில் அனைத்து வசதிகளையும் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். ஆனாலும், செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். பணம் கடனாக வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.

சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். திருமணம் கூடி வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அலுவலகத்தில், பதவி உயர்வு சிறிது தாமதமாகக் கிடைக்கும். வியாபாரத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பீர்கள். புதிய வாடிக்கை யாளர்களின் அறிமுகம் கிடைக்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உழைப்பால் சாதிக்க வைப்பதாக அமையும்.