Published:Updated:

குருப்பெயர்ச்சி -2019 பொதுப் பலன்கள்! #Astrology

கால புருஷ தத்துவப்படி ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்துக்கு குரு பகவான் வருவதால் உலகம் முழுவதும் பலருக்கும் பாக்கியங்களை இந்த குருப்பெயர்ச்சி வழங்கும்

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சிப் பலன்கள் - 2019

29.10.2019 முதல் 13.11.2020 வரை

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சிணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40-க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்கிறார்.

குரு
குரு

குருப்பெயர்ச்சியின் பொது பலன்கள் மற்றும் 12 ராசிகளுக்குமான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

குருப்பெயர்ச்சி என்பது ஒவ்வோர் ஆண்டும் வரக்கூடியதுதான் என்றாலும், இந்த 2019-ம் ஆண்டு வருகின்ற குருப்பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் என்னவென்றால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குரு பகவான் தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசிக்கு வருவார். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இந்த ஆண்டு நிகழ்கிறது.

Vikatan

விருச்சிக ராசியிலிருந்து குரு பகவான் வலிமைமிக்க தனது ஆட்சி வீடான தனுசு ராசிக்கு வருகிறார். தனுசு ராசியில் ஏற்கெனவே இருக்கும் சனி, கேது ஆகிய கிரகங்களுடன் ஒன்றாக இருக்கப் போகிறார். இந்த மூவரின் இணைப்பு மிக நல்ல பலன்களை மக்களுக்குத் தரும்.

குருபகவான் தனுசு ராசியிலும் மீனராசியிலும் இருக்கும்போது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மிக நேர்மையான முறையில் நல்ல பலன்களை அளிக்கக்கூடியவர். இந்த ஓராண்டு காலம் உலகம் முழுவதும் அமைதியும் மகிழ்ச்சியும் எங்கும் நிலவும்.

கால புருஷ தத்துவப்படி ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்துக்கு குரு பகவான் வருவதால் உலகம் முழுவதும் பலருக்கும் பாக்கியங்களை இந்தக் குருப்பெயர்ச்சி வழங்கும்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வயது, படிப்பு, ஏழை, பணக்காரர் என்றும் மொழி, மாநிலம் நாடு என்ற பேதங்களின்றி சகலருக்கும் சகலவிதமான பாக்கியங்களையும் குரு பகவான் வழங்குவார்.

ஆன்மிகத்தில் இருந்துகொண்டு, 'கடவுள் என்னை மிகவும் சோதித்துவிட்டார்' என்று வருத்தப்படுகிற எல்லோருக்கும் இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்கள், வியாபாரத்தில், நஷ்டப்பட்டவர்கள், கடன்பட்டுக் கலங்கிப்போய் நின்றவர்கள், இவர்களுக்கெல்லாம் நல்லவிதமான வழி பிறக்க வருகிறது. இது நம் நாட்டில் மட்டுமல்ல, நம் மாநிலத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நல்ல பலன்கள் நிகழும்.

இதுநாள்வரை நிலவி வந்த பணத்தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி இவை எல்லாம் இனி விலகி, புதிய வெளிச்சம் சமுதாயத்தில் ஒளிவீசும்.

குந்துமணி அளவுகூட தங்கம் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த பெண்கள், இந்த ஆண்டில் தங்க நகைகளைத் தாங்கள் விரும்பிய வண்ணம் வாங்குவார்கள். தங்கத்துக்கு அதிபதி குரு பகவான் என்பதால் அவர் ஆட்சி பெற்றிருக்கும் இந்த நல்ல வேளையில் தங்கம் வாங்கக்கூடிய தன்மையையும் வளத்தையும் பெண்களுக்குத் தருவார் என்பது உண்மை.

அரசியல், ஆன்மிகம், வியாபாரம் எனப் பல்வேறு துறையில் இருப்பவர்களுக்கும் இளையதலைமுறையினருக்கும் மாணவர்களுக்கும் குறிப்பாக, பெண்களுக்குச் சிறப்பு செய்யும் விதமாக இந்தக் குரு பெயர்ச்சி அமையவிருக்கிறது.

மயிலாடுதுறையில் இருக்கும் வதானயேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் நடைபெறும் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜையில் சங்கல்பித்துக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.