Published:Updated:

பெரும்பிணி பாதிப்பு பயம் நீங்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குருப்பெயர்ச்சி
பொதுப்பலன்கள்
குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி

நிகழும் பிலவ வருடம் ஐப்பசி மாதம் 27-ம் தேதி சனிக்கிழமை 13.11.2021 அன்று (மாலை 6 மணி 10 நிமிடத்தில்) - சுக்ல பட்சத்து தசமி திதி, மேல்நோக்குள்ள சதயம் நட்சத்திரத்தில், கும்ப ராசியில், `வியாகாதம்' நாமயோகம், `தைதுலம்' நாமகரணத்தில், பஞ்சபட்சியில் மயில் பலவீனம் அடையும் நேரத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த அமிர்தயோகத்தில், ரிஷப லக்னத்தில்... நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் - புதன் ஓரையில்... பொன்னன் எனப் புகழப்படும் பிரகஸ் பதியாகிய குருபகவான் மகரம் ராசி யிலிருந்து விலகி கும்பம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.

பெரும்பிணி பாதிப்பு பயம் நீங்கும்!

`குரு வளைய வீடு' என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஸ்திர வீடான கும்ப ராசியில் குரு அமர்வதால் உலகெங்கும் நோய் பயம், உயிர் பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும்.

பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரம் மெள்ள மெள்ள எழுந்து நிற்கும். பல இடங்களில் பெருந்தொற்று பாதிப்பு போன்ற சூழலால், கூண்டுக் கிளிகளாய் அடைப்பட்டுக் கிடக்கும் மானுடர்கள் இனி சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நிலை உருவாகும்.

நீசமாகி தன்னிலை தாழ்ந்து கிடந்த குருபகவான் இப்போது சனிபகவானை விட்டு விலகி தனித்து அமர்வதால், ஷேர் மார்க்கெட்டில் பங்குகள் விலை ஏறும். தங்கத்தின் பயன்பாடு அதிகரிக்கும்.

புதிய தங்கச் சுரங்கங்கள், படிமங்கள் கண்டறியப்படும். தங்கத்தின் விலை உயரும். அரசாங்க நிறுவனங்கள் தனியார் மயமாகும். ஆயுள்காப்பீட்டுத் துறை மற்றும் தொலைத்தொடர்பு துறை பங்குகள் கைமாறும்.

எல்லைப் பிரச்னைகள் பேச்சுவார்த்தைக்குள் கட்டுப்படுவதாகத் தோன்றினாலும் நாடுகள் போருக்குத் தயாராகும். இத ந்நிலையில் ஆயுத பலம், ராணுவ பலம் பலமடங்கு அதிகரிக்கும். கும்ப ராசியில் குரு அமர்வதால் குடுப்பழக்கம், சூதாட்டம் போன்றவை அதிகரிக்கும். போதைப் பொருள் கடத்துவோர் பிடிப்படுவர். தரமான நிறுவனங்களின் உயர் ரக பொருட்கள் மற்றும் சாதனங்களைப் போல் போலியானவை சந்தையில் அதிகம் புரளும். உணவு மற்றும் மருந்து வகைகளில் கலப்படம் அதிகரிக்கும். சமூக வலைத்தளங்களில் வதந்திகளும், வாதங்களும் அதிகம் வலம் வரும்.

ஶ்ரீகுருபகவான்
ஶ்ரீகுருபகவான்

குடமாகிய கும்பத்தில் குரு அமர்வதால் குளம் குட்டை உள்ளிட்ட நீர்பிடிப்புப் பகுதிகள் யாவும் நிரம்பும்; உணவு உற்பத்தி அதிகரிக்கும்.

குருபகவான் சிம்மத்தைப் பார்ப்பதால் அரசியலில் ஆட்சியாளர்களின் கை ஓங்கும். அவர்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை உயரும். எரிபொருளுக்கான மாற்று வழியைக் கண்டறிந்து, விலையேற்றத்தைத் தடுக்க அரசாங்கங்கள் முயற்சி மேற்கொள்ளும்.

நிலக்கரிக்கு உரிய கிரகமான சனிபகவான் வலுத் திருப்பதால் நிலக்கரி உற்பத்தி அதிகமாகும். குருபகவான் மிதுனத்தைப் பார்ப்பதால் பள்ளி, கல்லூரிகள் முழுவீச்சில் இனி செயல்படும். மாணவர்கள் சாதிப்பர்.

துலாம் ராசியைக் குரு பார்ப்பதால் வியாபாரம் சூடு பிடிக்கும். மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகும். ரியல் எஸ்டேட் தொழில் வேகமெடுக்கும்; சொத்துக்கள் விலை உயரும். சொகுசு வாகனங்கள் வாங்குவோர் அதிகரிப்பர். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும். புதிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்படும். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இன்டர்நெட் சேவைகள் பெருகும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மன உளைச்சலிலிருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவர். சுற்றுலாத்துறை மற்றும் சினிமாத்துறை மீண்டும் பிரபலமாகும்.

மொத்தத்தில் கும்பத்தில் அமரும் குருவால், ஒரு கும்பாபிஷேகம் போன்று கொண்டாட்ட சூழல் உருவாகும்; மக்கள் மனதில் கலக்கம் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு