Published:Updated:

மேஷம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்! #Astrology #Video

மேஷம்
மேஷம்

மேஷ ராசிக்காரர்களைக் கடந்த குருப்பெயர்ச்சி மூலையில் முடக்கிப் போட்டிருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் போக்கும் விதமாக இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்குப் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் தரக்கூடிய வகையில் அமையும்.

மேஷம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019  29.10.2019 முதல் 13.11.2020 வரை 

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சிணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40-க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்கிறார்.

Aries
Aries

குருப்பெயர்ச்சியின் பொது பலன்கள் மற்றும் 12 ராசிகளுக்குமான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார். 

மேஷ ராசி நேயர்களுக்கு இதுவரை சாதகமற்ற எட்டாமிடத்தில் இருந்து யோகம் அளிக்கக்கூடிய ஒன்பதாம் இடத்துக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும்.

இந்தக் குருப்பெயர்ச்சியின் வாயிலாக மேஷ ராசி அன்பர்களுக்கு அவரவர்களின் வயது, படிப்பு, தகுதி, அந்தஸ்து, அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு என்ன நற்பலன்கள் உண்டோ நிச்சயம் அதை குரு பகவான் வழங்குவார். சென்ற வருட குருப்பெயர்ச்சியில் உங்களுக்கு ஏகப்பட்ட தடைகள்... ஒரு சிலருக்கு வேலை கிடைக்கவில்லை, ஒரு சிலருக்கும் குழந்தைபாக்கியம் கிடைக்கவில்லை, ஒரு சிலருக்குத் திருமணம் நடைபெறவில்லை என இப்படிப் பல விதமான தடைகளையும் துன்பங்களையும் தந்து வந்தார். ஆனால், அந்தத் தொந்தரவுகள், தடைகள் எல்லாம் இப்போது அகலக்கூடிய ஒரு நேரம் வந்துவிட்டது.

Guru
Guru

மேஷ ராசிக்காரர்கள் எப்போதுமே துணிச்சலானவர்கள். எந்த காரியத்தையும் பயப்படாமல் செய்து அவர்கள் சாதனை படைப்பவர்கள். இப்படி பரபரவென துருதுருவென அலைந்துகொண்டிருந்த வேலை பார்த்துக்கொண்டிருந்த மேஷ ராசிக்காரர்களைக் கடந்த குருப்பெயர்ச்சி மூலையில் முடக்கிப் போட்டிருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் போக்கும் விதமாக இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்குப் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் தரக்கூடிய வகையில் அமையும்.

மயிலாடுதுறையில் இருக்கும் வதானயேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் நடைபெறும் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜையில் சங்கல்பித்துக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்களுடைய அந்தஸ்து மரியாதை, கௌரவம் யாவும் சமூகத்தில் உயரக்கூடிய ஒரு காலகட்டம் இது. இதுவரை எதை நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தீர்களோ அதை அதிர்ஷ்டத்தின் கைகளால் நீங்கள் பெறப்போகிறீர்கள். இதற்கு நீங்கள் எந்தவித முயற்சியையும் உழைப்பையும் பணத்தையும்கூட தர வேண்டிய அவசியமிருக்காது.

இல்லத்தரசிகளுக்கு இதுவரை இருந்த கவலையெல்லாம் போக்கும் விதமாக இந்தக் குருப்பெயர்ச்சி அமையப்போகிறது. அவர்களுக்குப் பல வழிகளிலும் பணம் வரும் என்பதை இந்தக் குருப்பெயர்ச்சியின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளலாம்.

நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு அவர்களின் பிள்ளைகள் நல்ல கல்வி நிறுவனங்களில் பெரிய படிப்புகளில் சேர்க்க முடியவில்லை என்ற  கவலை முடிவுக்கு வரும். மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் நல்ல கல்வி அவர்கள் பெறக்கூடிய வாய்ப்பு அமையும் என்பது திண்ணம். மேலும் வேலை அமையாமல் இருந்த இளைஞர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைப்பதுடன் சாப்ட்வேர் கலைஞர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகமும் அமையும்.

இதுவரை திருமணமாகாமல் தடைப்பட்டிருந்த பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். பொருளாதார ரீதியாக இன்னும் 15 ஆண்டுகளுக்குச் சிறப்பான பலன்களை அனுபவிக்கக் கூடியதற்கான அஸ்திவாரமாக இந்தக் குருப்பெயர்ச்சி அமையும்.

Planet Guru
Planet Guru

கடன் வாங்கிய வகையில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் கடன்கள் யாவும் அடைபடும். உங்களின் கணவர் பொருளாதார ரீதியாக ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்கான வாய்ப்பை நிச்சயமாகக் குருபகவான் இப்போது தருவார். அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவருடைய செல்வாக்கு உயரும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடம் என்று சொல்லக்கூடிய  தைரியம், வீரியம், காரிய வெற்றி என்று சொல்லக்கூடிய மூன்றாவது இடத்தைக் குருபகவான் பார்ப்பதால், இவர்களுக்கு எல்லா வகையிலும் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். துணிச்சல் மிக்க மேஷ ராசிக்காரர்கள் இப்போது மிகப்பெரிய சாதனைகளைப் படைப்பார்கள். உதவிடும் ஸ்தானமான ராசிக்கு ஐந்தாமிடத்தை குரு பகவான் பார்ப்பதால் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்குக் கிடைக்கும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் பெயரும் புகழும் பெறுவீர்கள்.

Tiruchendur
Tiruchendur

உங்களுக்கு நிறைவான வாழ்க்கை அமைந்தால்தான் உங்களால் மற்றவர்களுக்கு உதவ முடியும். இந்தக் குருப்பெயர்ச்சியில் உங்களுக்கு நிறைவான வாழ்வு அமைவது உறுதி. அதனால் நீங்கள் மற்றவர்களுக்குப் பெரிய அளவில் உதவிகரமாக இருப்பீர்கள். உதவி செய்யும்போது அதிர்ஷ்ட தேவதை உங்களுக்குத் துணையாக இருந்து எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருவாள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வகையிலும் பயனளிக்கக்கூடியதாக அமையும் என்பது உறுதி. சுப பலன்களை மட்டுமே தரக்கூடிய குருப்பெயர்ச்சியாக இந்தக் குரு பெயர்ச்சி இருக்கும்.

பரிகாரம்:

 குரு ஸ்தலமான திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை ஒரு வியாழக்கிழமை நாளில் சென்று வழிபட்டு வந்தால், மிகவும் கூடுதலான பலன்களை மிக விரைவாகப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

அடுத்த கட்டுரைக்கு