Published:Updated:

மிதுன ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்!#Video

மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சந்தோஷங்களைத் தரக்கூடிய குருப்பெயர்ச்சியாக இந்தக் குருப்பெயர்ச்சி அமையும்.

குரு
குரு

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சிணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40-க்கு பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.

குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

Gemini
Gemini

மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சந்தோஷங்களைத் தரக்கூடிய குருப் பெயர்ச்சியாக இந்தக் குருப்பெயர்ச்சி அமையும். இத்தனை காலமாக 6-ம் இடத்தில் இருந்த குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்கள் எதையும் பெரிதாகச் செய்யவில்லை. இப்போது அவர் ஏழாம் வீட்டுக்கு வந்துள்ளார். ஏழாமிடத்தில் இருக்கும் குரு பகவான் நேரடியாக உங்களின் ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கு எண்ணற்ற நற்பலன்கள் நிகழ இருக்கின்றன.

குரு பகவான் தனுசு ராசியிலிருந்து உங்களின் ராசி வீட்டைப் பார்ப்பதால் ஏராளமான நற்பலன்கள் நடைபெறும். ராகு பகவான் ராசியிலிருந்துகொண்டு உங்களுக்குப் பல மனசஞ்சலங்களை அவ்வப்போது கொடுத்து வந்தார். குறிப்பாக, கடந்த 8 மாதங்களாக நீங்கள் எந்த விஷயத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையே நிலவி வந்தது.

Guru Transition
Guru Transition

மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த ஆண்டு சிலருக்கு வாழ்க்கை சரியில்லை, சிலருக்கு வாழ்க்கைத்துணையே சரியில்லை என்ற நிலையில் மன நிம்மதி இல்லாமல் இருந்து வந்தீர்கள். ஏதோ ஒரு மனக்கலக்கம் உங்களை வாட்டி வந்தது. ராகு பகவான் ராசியிலிருக்கும்போது மனநிலையும் நம்முடைய சிந்தனையும் ஒரு நிலையில் இருக்காது என்பது ஜோதிட ரீதியான உண்மை.

'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்தக் கோடி நன்மை பணமாகவும் இருக்கலாம். கோடிக்கான பணம் கிடைக்கும் அளவிலான சந்தோஷமாகவும் இருக்கலாம்.

பொதுவாகவே, மிதுன ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள், அப்படிப்பட்டவர்களை, கடந்த ஓராண்டாக 6-ம் வீட்டிலிருந்த குரு பகவான் முடக்கிப்போட்டிருந்தார். அந்தச் சூழ்நிலைகள் எல்லாம் மாறி, மனதில் உற்சாகமும் முகத்தில் தெளிவும் பிறக்கும்.

Elephant
Elephant

துறுதுறுவென பரபரவென பல வேலைகளையும் சாதனைகளையும் செய்துமுடிப்பீர்கள். மிக முக்கியமாக, ஒரு வீடு வாங்க வேண்டும், பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அவையெல்லாம் இப்போது எளிதாக அமையும்.

இதுவரை சிறிய அளவிலான தொகையைக்கூடச் சேமித்து வைக்க முடியவில்லையே என்றிருந்தவர்கள் இப்போது அதிகமாக சேமிப்பார்கள். வீண்செலவுகள் மருத்துவச் செலவுகள் யாவும் இப்போது குறைந்து போகும்.

கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி அவர்களுக்குள் அந்நியோன்யம் பெருகும். அவர்களுக்குள்ளான பரஸ்பர புரிந்துகொள்ளல் இயல்பாகவே நடக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு சகல விஷயங்களிலும் நல்லவையே இந்த குருப்பெயர்ச்சி வாயிலாக நடக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமை நாளில் குரு ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு உணவு வழங்கினால், அது மிகச் சிறந்த பரிகாரமாக அமைந்து ஏராளமான நற்பலன்களை விரைவாகவும் பெறுவார்கள்.