Published:Updated:

சகல பாக்கியங்களையும் பெறப்போகும் கும்ப ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

கும்ப ராசிக்காரர்கள் எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்துவிட்டுத்தான் செய்வார்கள். ஆனால், இப்போது அவர்கள் எந்த முடிவெடுத்தாலும் அது அவர்களுக்கு நல்லவிதமாகவே அமையும்.

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை (விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.

கும்பம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

வெளிநாட்டு யோகம் பெறும் மகர  ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்!#Video
Guru Transition
Guru Transition

கும்ப ராசிக்காரர்களுக்கு மிகப் பெரும் நன்மைகளைச் செய்யக்கூடிய விதமாக இந்த குருப்பெயர்ச்சி அமையவிருக்கிறது. ஒரு ராசிக்கு லாபஸ்தானமான 11-ம் இடத்துக்கு குரு பகவான் வரும்போது அந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் பல்வேறுவிதமான நன்மைகளையும் வழங்குவார் என்பது ஜோதிட விதி. இப்போது கும்ப ராசிக்கு 11-ம் இடமான தனுசு ராசிக்கு குரு பகவான் வந்துள்ளார்.

பொதுவாகவே 2, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய இடங்களுக்கு குரு பகவான் வரும்போது, பல்வேறுவிதமான அதிர்ஷ்டங்களை வழங்குவார். இப்படிப்பட்ட காலகட்டத்தில் அதிகம் சிரமமில்லாமலேயே தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

சுபச்செலவுகள் செய்யப்போகும் கடகம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video

கும்ப ராசிக்காரர்கள் எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்துவிட்டுத்தான் செய்வார்கள். ஆனால், இப்போது அவர்கள் எந்த முடிவெடுத்தாலும் அது அவர்களுக்கு நல்லவிதமாகவே அமையும். ஏனென்றால், இப்போதுள்ள கிரக சஞ்சாரங்கள் அவர்களுக்குச் சாதகமாக இருக்கின்றன.

Guru Transition
Guru Transition

கோச்சார ரீதியாகக் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கும்ப ராசிக்காரர்களுக்கு பதினோராம் இடத்தில் சனியும் கேதுவும் இருந்ததால் மிகப் பெரிய முன்னேற்றங்கள் இல்லாத நிலையே இதுவரை நிலவி வந்தது. அந்த நிலை இப்போது மாறும். குரு பகவான் 11-ம் இடத்துக்கு வருவதால் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண வரவுக்கு இடமுண்டு

குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையிலிருந்த தேக்கநிலை மாறி இன்னும் ஒரு சில மாதங்களில் நல்ல தொகை கிடைக்கும். இப்படி ஒரே நாளில் கிடைக்கும் தொகை, ஒரு வருட காலத்துக்கு உங்களுக்குப் பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்!#Video

11-ம் இடத்தில் இருக்கக்கூடிய குரு ஐந்தாம் இடத்தைப் பார்வை செய்வார். ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியஸ்தானம், புத்திரஸ்தானமாகவும் அதிர்ஷ்ட ஸ்தானமுமாக இருப்பதால், அந்த ஸ்தானத்தைப் பார்க்கும்போது, குழந்தைகள் மூலமாக உங்களுக்கிருந்த மனக்குறைகள் யாவும் இப்போது தீரும். இதுவரை திருமணமாகாமலிருந்த பிள்ளைகளுக்கு இப்போது திருமணமாகும். நல்ல கல்வி நிறுவனத்தில் சேர முடியாமல் தவித்து வந்த குழந்தைகளுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் சேர சேரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு அமையும்.

Guru Transition
Guru Transition

கருத்து வேற்றுமையால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். விலகியே இருந்த உறவினர்கள் உங்களைத் தேடி வந்து பேசக்கூடிய நிலையை இப்போது நீங்கள் பார்க்கலாம்.

கல்யாணமாகியும் பிரம்மச்சாரியைப்போல் இருக்க வேண்டிய நிலையிலிருந்த வெளிநாட்டிலிருந்தவர்கள் தற்போது சொந்த ஊர் திரும்பி புதிய தொழில் தொடங்கி, உங்களுடனே இனிவரும் காலங்களைக் கழிப்பார்கள். கணவன், மனைவி, பிள்ளைகளுடன் சகல பாக்கியங்களையும் அனுபவிப்பார்கள். வீடு, வாகனம், தொழில் அமைப்புகளும் நல்லவிதமாக ஏற்படும். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து உங்களுக்கான பங்கு கிடைக்கும்.

ரிஷப ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Astrology

பொதுவாக கும்ப ராசிக்காரர்களுக்கு, பாக்கியங்கள் யாவும் நிதானமாகவே கிடைக்கும். இப்போது அவர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டக்கூடிய ஒரு காலகட்டம். திருமணம், புத்திரபாக்கியம் ஆகியவை எல்லாம் சுபமாக நடைபெறும். பழைய கடன்களையெல்லாம் பைசல் செய்யக்கூடிய வாய்ப்பும் சிலருக்கு அமையும்

தங்களின் திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்திக்கொண்டிருந்த மாணவர்கள், எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கெல்லாம் நல்ல ஒரு வாய்ப்பாக இந்தக் குருப்பெயர்ச்சி காலகட்டம் அமையும்.

பரிகாரம்: கும்ப ராசிக்காரர்கள் சென்னை போரூரிலிருக்கும் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று வியாழக்கிழமை நாளிலோ ஜன்ம நட்சத்திர நாளிலோ வழிபட்டால் மேலும் அதிகமான பலன்களைப் பெறலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் சேக்கிழார் பெருமானால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

அடுத்த கட்டுரைக்கு