Published:Updated:

வெளிநாட்டு யோகம் பெறும் மகர ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்!#Video

உங்களின் ராசிக்கு 12 - ம் இடத்துக்கு குரு பகவான் வரும்போது இயற்கைச் சுபரான அவரால் சுபச்செலவுகள் பல காத்திருக்கின்றன. அதற்கு ஏற்றவகையில் உங்களுக்கு வருமானமும் கிடைக்கப்போகிறது.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை (விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.

மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

வெளிநாட்டு யோகம்
வெளிநாட்டு யோகம்

மகர ராசிக்காரர்களுக்கு, இதுவரை 11-ம் வீடான லாபஸ்தானத்தில் இருந்த குருபகவான் இப்போது 12-ம் வீடான விரய ஸ்தானத்துக்கு வருகிறார்.

பொதுவாக 12-ம் இடத்துக்கு ஒரு கிரகம் வருகிறதென்றால், விரயச் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்களின் ராசிக்கு 12-ம் இடத்துக்கு குரு பகவான் வரும்போது இயற்கைச் சுபரான அவரால் சுபச்செலவுகள் பல காத்திருக்கின்றன. அதற்கு ஏற்றவகையில் உங்களுக்கு வருமானமும் கிடைக்கப்போகிறது.

இதுநாள்வரை நடைபெறாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்த திருமணம் இப்போது கைகூடிவரும். சொத்து வாங்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு வீடு, வாகனம், நிலம் போன்ற சொத்துகள் வாங்கக்கூடிய பாக்கியம் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சியின் வாயிலாக வாழ்க்கைத் துணையைப் பெறப்போகும் தனுசு ராசி! #Video

இப்போதெல்லாம் வீட்டுக்கொருவர் வெளிநாட்டில் இருக்கிறார்.

12 - ம் இடத்துக்கு வரும் குரு பகவான் உங்களுக்குக் கண்டிப்பாக நல்ல சம்பாத்தியத்தில் வெளிநாட்டில் வேலையை வாங்கித் தருவார். வெளிநாடு செல்லக் காத்திருப்பவர்களுக்கு உடனே விசா கிடைக்கும். இதைத் தொடர்ந்து அவர்கள் வெளிநாடு சென்று விரும்பிய வேலையில் பணிபுரிவார்கள்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

தற்போது நீங்கள் செய்து வரும் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால், அதற்கேற்ற வகையில் கடின உழைப்பையும் அலைச்சலையும் நீங்கள் விலையாகத் தரவேண்டியிருக்கும். ஒன்று கிடைக்க வேண்டுமென்றால் இன்னொன்றை இழக்கவேண்டியது வரும் என்பது இயற்கையின் விதி.

குருப்பெயர்ச்சியின் அத்தனை நல்ல பலன்களையும் பெறப்போகும் விருச்சிக ராசி! #Video

சனி பகவான் இன்னும் சில வாரங்களில் உங்களின் ஜன்ம ராசிக்கு வர இருப்பதால், நீங்கள் எதையும் கடினமாக உழைத்து போராடித்தான் பெற வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் கடுமையாக உழைத்தால்தான் பெரிய அளவிலான பலன்களை அடைய முடியும். உங்களுக்கு அதற்குரிய மன உறுதியையும் உடல் வலிமையையும் குருபகவான் நிச்சயம் உங்களுக்குத் தருவார்.

கிரகங்கள்
கிரகங்கள்

பொதுவாகவே மகர ராசிக்காரர்கள் நேர்மையானவராகவும் உழைப்பாளியாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலம், பொற்காலமாக அமையும். அபரிமிதமான பணவரவு இருக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்!#Video

'நாளை மிகப் பெரிய செலவு காத்திருக்கிறது, அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்' என்கிற கவலை மனத்தில் இருந்தாலும் அதற்கேற்ற வகையிலான பணம், எந்த வகையிலாவது உங்களின் கைக்கு வந்துசேரும். அதனால் மனக்கலக்கம் இல்லாமல், மகர ராசிக்காரர்கள் கடுமையாக உழைத்து முன்னேறுவதற்குரிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி திகழ்கிறது.

ராசிக்கு 6-ம் இடத்தை குரு பார்ப்பதால் இப்போது நீங்கள் வாங்கும் கடன்கள் சுபச்செலவாக சொத்து வாங்குவதற்காகவோ, திருமணத்துக்காகவோ தானிருக்கும் என்பதால் கடன்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

குருப்பெயர்ச்சியின் அத்தனை நல்ல பலன்களையும் பெறப்போகும் விருச்சிக ராசி! #Video

இளைஞர்களுக்குப் பிடித்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமெனச் சொல்ல முடியாதென்பதால், கிடைத்த வேலையைப் பிடிக்கும்விதமாக மாற்றிக்கொள்வது நல்லது. சிறிய வேலையாக இருந்தாலும், அதில் உங்களின் திறமையை வெளிப்படுத்தி பெரிய அளவில் முன்னுக்கு வருவீர்கள். இந்த குருப்பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தருமே தவிர பாதகமான பலன்களை நிச்சயம் தராது.

சிவன்
சிவன்
கன்னி ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்! #Video

பரிகாரம்:

சென்னை. பாடி அகத்தீஸ்வரர் கோயில், தென்குடித்திட்டை ஈஸ்வரன் கோயில் ஆகியவற்றுக்கு வியாழக்கிழமை நாளிலோ உங்களின் ஜன்ம நட்சத்திர நாளிலோ சென்று பூஜைகள் செய்து வர நற்பலன்களைப் பெறலாம்.

குருப்பெயர்ச்சி -2019 பொதுப் பலன்கள்! #Astrology