Published:Updated:

குருப்பெயர்ச்சியின் வாயிலாக வாழ்க்கைத் துணையைப் பெறப்போகும் தனுசு ராசி! #Video

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

இந்த குருப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை செய்யக்கூடியதாக அமையும். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை (விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

Guru Transition
Guru Transition

இத்தனை நாள்களாக விருச்சிக ராசியில் இருந்த குரு பகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு வருகிறார். இந்த குருப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்குப் பல நன்மைகளைச் செய்யக்கூடியதாக அமையும். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

தனுசு ராசி இளைஞர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் சிரமத்துக்கு ஆளாகி இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நல்லதொரு பாதையைக் காட்டக்கூடிய வழிகாட்டியாக இந்த குருப்பெயர்ச்சி அமையும்

சனி பகவான் ஜன்ம ராசியிலிருந்துகொண்டு இளைஞர்களுக்கு, பணம் என்றால் என்ன, வாழ்க்கை என்றால் என்ன, எனப் பாடம் நடத்தி புரிய வைத்துக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில், தனது சொந்த வீடான தனுசுக்கு வரும் குரு பகவான் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தரக்கூடியவராக இருப்பார்.

ஜோதிட சாஸ்திரப்படி எப்போதெல்லாம் ராசிநாதன் வலுப்பெற்று இருக்கிறாரோ, அப்போதெல்லாம் நம்முடைய மனம் தெளிவடைந்து நம் முயற்சிகள் யாவும் சிறப்பான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும்.

தனுசு ராசியின் ராசி நாதனான குருபகவான் தனுசில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். இனி உங்களின் மனம் தெளிவடையும். முகத்தில் பொலிவு கூடும். தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். நினைத்தவை யாவும் நிறைவேறும். உறுதியான எண்ணங்கள் மனத்தில் வலுப்பெற்று நேர்மறையான எண்ணங்கள், நல்ல நிகழ்வுகள் இனி நடக்கத்தொடங்கும்.

Planets
Planets

இன்னும் சில வாரங்களில், சனி பகவான் தனுசில் இருந்து மகரத்துக்குப் பெயர்ச்சியாகிறார். ஜனவரி மாதம் முதல் உங்களுக்கு யோக பலன்கள் கிடைக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு பலன் சொல்லும்போது இரண்டு விதமாகச் சொல்லலாம். 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒருவகையான பலனும் 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஒருவகையான பலன்களும் இப்போது நடந்தேறும்.

குறிப்பாக நடுத்தர வயதில் இருக்கும் நாற்பதில் இருந்து ஐம்பது வயதுக்குள் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இதுவரை கிடைக்காத பாக்கியங்கள் யாவும் தாராளமாக கிடைக்கும். உதாரணமாக, வீடு, வாகனயோகம் அமையும். வாடகை வீட்டிலேயே இருந்தவர்கள் சொந்த வீட்டுக்குச் செல்லக்கூடிய அமைப்பு ஏற்படும். வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும்.

பிள்ளைகளை, நல்ல கல்வி நிலையத்தில் சேர்க்க முடியாத நிலையில் இருந்தவர்கள் இந்த ஆண்டு சிறப்பான கல்வி நிறுவனங்களில் சேர்ப்பார்கள். சிறப்பான கல்வியை அவர்களுக்கு வழங்கக்கூடிய பாக்கியமும் கிடைக்கும். புத்திரகாரகனான குரு ராசியிலேயே ஆட்சி பெறுவதால், குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கவேண்டும் என்பது விதி.

தனுசு ராசிக்கு நான்காம் இடமான மீனமும், குருவின் சொந்த வீடாக இருப்பதால், மீனத்துக்கு பத்தாம் வீடாக தனுசு ராசி இருப்பதால் சொந்த வீடு அமைந்தே தீரும். வேலை இல்லாமல் இருந்த இளைஞர்களுக்கு நல்ல ஒரு வேலை இப்போது அமையும்.

Sagittarius
Sagittarius

தனுசு ராசியில் இருந்து ஏழாமிடமான மிதுன ராசியை குரு பகவான் பார்ப்பதால், உங்களுக்கான வாழ்க்கை துணை யார் என்பதை இப்போது குரு பகவான் அடையாளம் காட்டுவார். அவர்களோடுதான் நீங்கள் வாழ்க்கையில் பயணிக்கப்போகிறீர்கள். விருப்பமான வாழ்க்கைத் துணையை இப்போது அவர்கள் அடைவீர்கள்.

வெளிநாட்டுக்குச் சென்று நல்லவிதமான வேலையில் அமர்ந்து கைநிறைய காசு சம்பாதிக்கலாம் என்று இருந்தவர்களுக்கு வெளிநாட்டுயோகம் இப்போது அமையும்.

அரசுத்தேர்வு பலவற்றில் தோல்வியைச் சந்தித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைத்து அரசு பதவி கிடைக்கும். எடுத்துக்கொண்ட துறைகளிலெல்லாம் இதுவரை தோல்வியைச் சந்தித்தவர்கள் இனி வெற்றியின் கனியை ருசி பார்ப்பார்கள்.

பரிகாரம்

தனுசு ராசிக்காரர்கள் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று அங்கிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு வியாழன்தோறும் மஞ்சள் நிறத்தில் உள்ள இனிப்புப் பண்டமான 16 லட்டுகளை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும். பதினாறு வியாழக்கிழமைகள் இவ்வாறு வழங்குவது நல்லது.

மேஷம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்! #Astrology #Video
குருப்பெயர்ச்சி -2019 பொதுப் பலன்கள்! #Astrology
ரிஷப ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Astrology
குருப்பெயர்ச்சி -2019 பொதுப் பலன்கள்! #Astrology
மிதுன ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்!#Video
சுபச்செலவுகள் செய்யப்போகும் கடகம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video
சிம்மம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்! #Video
கன்னி ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்! #Video
துலாம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்!#Video
Vikatan
அடுத்த கட்டுரைக்கு