Published:Updated:

குருப்பெயர்ச்சியின் அத்தனை நல்ல பலன்களையும் பெறப்போகும் விருச்சிக ராசி! #Video

விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதப் பயனும் பெற முடியாமல், வேதனையும் கண்ணீரும் வடித்து வந்தனர். வாழ்க்கைக்கு விடியல் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை (விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

Guru Transition
Guru Transition

``குருப்பெயர்ச்சிப் பலன்கள் சொல்லத்தொடங்கியதிலிருந்து, 12 ராசிகளிலேயே விருச்சிக ராசிக்குத்தான் அதிக கவனம் எடுத்துப் பலன்களைச் சொல்லி வருகிறேன். அதற்குக் காரணமும் இருக்கிறது. விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதப் பயனும் பெற முடியாமல், வேதனையும் கண்ணீரும் வடித்து வந்தனர். வாழ்க்கைக்கு விடியல் கிடைக்காமல் தவித்து வந்தனர். அவர்களுக்கெல்லாம் புதிய ஒரு விடியலாக இந்த குருப்பெயர்ச்சி அமையப்போகிறது. குறிப்பாக, விருச்சிக ராசிக்காரர்கள் இருக்கும் வீடுகளில்கூட அந்தக் குடும்பமே கஷ்டப்படக் கூடிய சூழ்நிலையைத்தான் இதுநாள் வரை பார்க்க முடிந்தது. இனி அந்தக் குடும்பம் சந்தோஷத்தை அனுபவிக்கும்.

குருப்பெயர்ச்சி -2019 பொதுப் பலன்கள்! #Astrology

தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்துக்கு குருபகவான் வரவிருப்பதால் ஏராளமான நற்பலன்களை அள்ளித் தரப்போகிறார். மேலும், ஏழரைச் சனியும் இப்போது உங்களைவிட்டு விலகப் போகிறது. எதிர்காலத்தில் நீங்கள் அனுபவிக்கப் போகும் நற்பலன்களுக்கு அச்சாரமாக, ஆணிவேராக இந்த குருப்பெயர்ச்சி அமையும். ஒரு வசந்த காலத்தின் விடியலாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும். வசந்த காலத்தின் வாசலைத் திறந்துவிடும்.

குருப்பெயர்ச்சியின் அத்தனை நல்ல பலன்களையும் பெறப்போகும் விருச்சிக ராசி! #Video

விருச்சிக ராசிக்காரர்களின் வயதுக்கேற்றாற்போல, தகுதிக்கேற்றாற்போல இதுநாள்வரை நற்பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அத்தனையும் விலகி, மிகவும் நன்றாக இருக்கப்போகிறீர்கள். இரண்டாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பத்தாம் இடமான வேலை, தொழில், பணிச்சூழல் ஆகியவற்றைப் பார்ப்பதால் பணி செய்யும் இடத்தில் சிறப்பான சூழல் அமையும்.

மேஷம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்! #Astrology #Video

சொல்வாக்கு, செல்வாக்கு இரண்டுக்கும் காரணமான பணம் தரும் தொழில் அமைப்புகள் உறுதிப்பட்டு நற்பலன்கள் கிடைக்கும். இதுவரைக்கும் 'வேலை கிடைக்கவில்லையே' என்று இருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை அமையும். 'என் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே' என்று இருப்பவர்களுக்கு, அவர்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும். உங்களின் உழைப்பு உங்களுக்கு மட்டுமே பயன்படப் போகிறது என்பதே இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய அம்சம்.

இதுவரை உங்களுக்குத் தடைப்பட்டிருந்த அனைத்து விஷயங்களும் பகலவனைக் கண்ட பனிப் போல விலகி, எல்லா வளமும் உங்களை வந்தடையும். குழந்தை இல்லாதவர்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணத்தடையில் சிக்கித்தவித்தவர்களுக்குத் திருமணம் கைகூடி வரும். பிள்ளைகள் பிடிவாதத்தின் காரணமாக உங்கள் பேச்சைக் கேட்காமல் இருந்தால், அவர்கள் உங்களின் பேச்சைக் கேட்டு நல்ல பிள்ளை எனப் பெயர் எடுப்பார்கள்.

ரிஷப ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Astrology

வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச் சென்றவர்கள் பணி முடித்து, சிறப்பான முறையில் சொந்த ஊர் வந்து செட்டில் ஆவார்கள். வேலை பறிபோனவர்களுக்கு வேலை கிடைக்கும். வீண்பழியைச் சுமந்து பதவியைப் பறிகொடுத்தவர்களுக்கு மீண்டும் பதவி கிடைக்கும்.

Scorpion
Scorpion
மிதுன ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்!#Video
சுபச்செலவுகள் செய்யப்போகும் கடகம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video

குருப் பெயர்ச்சியின் முழுமையான பலன்களைப் பெறப்போகும் முதன்மையான ராசியாக விருச்சிக ராசி இருக்கும்.

Sivan
Sivan
சிம்மம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்! #Video

பரிகாரம்:

விருச்சிக ராசிக்காரர்கள், குருப்பெயர்ச்சியின் முழுமையான பலன்களைப் பெற திருத்தணி முருகன், திருப்போரூர் முருகன் கோயில்களுக்கு வியாழக்கிழமைகளில் சென்று வழிபட்டு வருவது நல்லது. சென்னையிலிருப்பவர்கள் கந்தக்கோட்டத்துக்குச் சென்று கந்தனை வழிபடுவது மேலும் சிறப்பான பலன்களைத் தரும்.

கன்னி ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்! #Video
துலாம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்!#Video