Published:Updated:

ரிஷப ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Astrology

ரிஷபம்
ரிஷபம்

`எட்டாம் இடத்துக்கு குரு வந்துவிட்டாரே' என்று பயப்படத் தேவையில்லை. இந்த எட்டாம் இடத்து குரு, ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மையை தருவாரேயொழிய சாதகமற்ற பலன்களைத் தரமாட்டார்.

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சிணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40-க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும்  பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்கிறார். 

குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

Taurus
Taurus

ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான இடம் என்று சொல்லக்கூடிய ஏழாம் இடத்திலிருந்து குரு பகவான் இப்போது சாதகமற்ற இடம் என்று சொல்லப்படும் எட்டாம் இடத்துக்குச் செல்கிறார்.

'எட்டாம் இடத்துக்கு குரு வந்துவிட்டாரே' என்று பயப்படத் தேவையில்லை. இந்த எட்டாம் இடத்து குரு ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மையை தருவாரேயொழிய சாதகமற்ற பலன்களைத் தரமாட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அஷ்டமச் சனியின் பிடியில் சிக்கிய நீங்கள் எப்போதும் நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தீர்கள்.

எட்டாமிடம் என்பது ஒரு சாதகமற்ற இடம் என்று சொல்லப்பட்டாலும், எட்டாமிடத்தில் சனியைப் போன்ற பாவ கிரகங்கள் இருக்கும்போதுதான் அது சாதகமற்ற சூழ்நிலை உருவாக்குமே தவிர, குருவைப் போன்ற இயற்கை சுபர்கள் இருக்கும்போது அப்படி நடப்பதில்லை.

Planets
Planets

எட்டாமிடம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் இடம், உழைப்பைக் குறிக்கும் இடம். எதிர்பாராத திடீர் தனலாபம் கிடைக்கும். எப்படி இந்தப் பணம் வந்தது என்று தெரியாமலே நமக்கு மறைமுகமாக பணம் வழங்கக்கூடிய இடத்துக்கு குரு பகவான் வந்திருக்கிறார்.  இந்தக் காரணத்தால் தனக்காரகனாகிய குரு பகவான் உங்களுக்கு அதிக லாபத்தை, அதிக முயற்சி இல்லாமலேயே அள்ளித் தரப்போகிறார்.

இன்னும் சில வாரங்களில், அதாவது ஜனவரி மாதத்தில் அஷ்டமச் சனி விலக இருப்பதால் மேலும் குரு பகவான் பல நன்மைகளைச் செய்வார். ஒருவருக்கு அஷ்டமச் சனி முடிந்தால் வாழ்வில் செட்டில் ஆக வேண்டும் அதாவது நிலை பெற வேண்டும். மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்பது விதி. 

கோட்சார விதிப்படி சனி தரும் கெடுபலன்களை குரு நீக்குவார். எட்டாம் இடத்துக்கு வரும் குரு பகவான் எந்த ஒரு புதிய தீமையையும் நிச்சயமாகக் கொடுக்கமாட்டார். இந்த குருப் பெயர்ச்சியினால் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.

Guru Bhagavan
Guru Bhagavan

வாழ்நாள் முழுவதும் எதிர்பார்க்காத அளவுக்குப் பெரிய தொகை கிடைக்கக்கூடிய அமைப்பும் ஏற்படும். எனவே, எட்டாம் இடத்துக்கு வரும் குரு பகவான் எதிர்பாராத தன லாபத்தை அள்ளிக்கொடுப்பார். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து, கௌரவம் உயரும். எனவே, ரிஷப ராசிக்காரர்கள் இந்தக் குருப்பெயர்ச்சியைத் தாராளமாக வரவேற்கலாம். அதிலும் அவரவரின் வயதுக்கேற்ப நல்ல பலன்கள் கிடைக்கும்.

குறிப்பாகப் பெண்களுக்கு இவ்வளவு காலமாக தன் கணவன் மேல் ஒரு மன வருத்தம் இருந்துகொண்டே இருப்பது இனி விலகிவிடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். இல்லத்தில் பணப்புழக்கம் அதிகமிருக்கும். இதுவரை சரியாகப் படிக்காமலிருந்த உங்களின் குழந்தைகள் நன்றாகப் படித்து உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

Guru
Guru

நீங்கள் பார்க்கும் உத்தியோகத்தில் அதிக பிரச்னைகள் இருந்து வந்திருக்கும். இனி சீராகும். `இந்தத் தொழிலை ஏன் ஆரம்பித்தோம் என்று மனம் வருந்தியவர்களுக்குத் தொழிலில் தொட்டதெல்லாம் துலங்கும். தான் செய்யும் தொழிலில் அதிக லாபம் பெறுவதை நீங்கள் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

பாவ கிரகங்கள் எட்டில் இருக்கும்போது தீமையையும் சுபகிரகங்கள் எட்டில் இருக்கும்போது நன்மையையும் செய்யும். ஆக எட்டாம் இடத்து குரு பகவான் உங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்யவிருக்கிறார் எனவே ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தையும் அஷ்டம சனி விலகி நற்பலன்களையும் பெறுவார்கள். 2020-ம் வருட ஆரம்பத்திலேயே உங்களுக்குப் பல நற்பலன்கள் நடக்கவிருக்கின்றன.

பரிகாரம்:

பரிகாரமாக ரிஷப ராசிக்காரர்கள் ஸ்ரீரங்கத்தில்  அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வாரை தரிசிப்பது நல்லபலன்களைத் தரும். சென்னையில் உள்ளவர்கள் மாங்காட்டில் உள்ள வெள்ளீஸ்வரன் கோயில் சென்று வணங்கினால் மிக நல்ல பலன்களை விரைவாகப் பெறலாம்.

மற்ற ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன் வீடியோக்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

பின் செல்ல