Published:Updated:

கன்னி ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்! #Video

குரு பகவான் 4-ம் இடத்திலிருந்து 8, 10, 12-ம் இடங்களைப் பார்வை செய்கிறார். இவை மூன்றும் ஒரு ஜாதகருக்கு மிக மிக முக்கியமான இடங்கள்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019

29.10.2019 முதல் 13.11.2020 வரை

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்கிறார்.

Guru Transition
Guru Transition

கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

''கன்னி ராசிக்காரர்களுக்கு இதுவரை மூன்றாம் இடமான விருச்சிகத்திலிருந்த குரு பகவான் 4-ம் இடமான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.

ஏற்கெனவே இருந்த மூன்றாமிடம் அவ்வளவு சாதகமான இடமாகச் சொல்லப்படவில்லை. தற்போது செல்லக்கூடிய நான்காம் இடமும் அவ்வளவு நல்ல இடமாக ஜோதிட சாஸ்திரப்படி சொல்லப்படவில்லை. ஆனாலும், குரு பகவான் இருக்கும் இடத்தைவிட, அவரின் பார்வைக்குத்தான் பலன் அதிகம்.

குரு பகவான் 4-ம் இடத்திலிருந்து 8, 10, 12-ம் இடங்களைப் பார்வை செய்கிறார். இவை மூன்றும் ஒரு ஜாதகருக்கு மிக மிக முக்கியமான இடங்கள்.

பத்தாமிடம் என்பது தொழில்ஸ்தானம் என்பதால், வேலை, வியாபாரம், தொழில் போன்றவற்றில் ஒரு ஸ்திரமான தன்மையை ஏற்படுத்தித் தருவார் என்பது நிச்சயம்.

Virgo
Virgo

4-ம் இடத்திலிருந்து 10-ம் இடத்தைப் பார்க்கக்கூடிய இந்தக் குரு தொழில் ரீதியாக ஒரு நிரந்தரமான அமைப்பை இந்தக் காலகட்டத்தில் அமைத்துத் தருவார். கன்னி ராசிக்காரர்கள் பொதுவாகவே பொருளாதார ரீதியாக கடந்த ஓராண்டாகச் சிறப்பான நிலையில் இல்லை. அந்த நிலை மாறி நல்லவிதமான வரவுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உழைத்த உழைப்புக்கேற்ற கூலியோ, சம்பளமோ, ஊதியமோ கிடைக்காத கன்னி ராசிக்காரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே இந்தக் குரு பெயர்ச்சியின் காரணமாக என்ன வேலை செய்கிறீர்களோ எந்தத் தொழில் செய்கிறீர்களோ என்ன வியாபாரம் செய்கிறீர்களோ நீங்கள் உழைக்கும் அளவுக்கு சமமான ஓர் ஊதியத்தை, சம்பளத்தை நிச்சயம் பெறுவீர்கள்.

இந்த நான்காமிட குரு வீடு, வாகனம், தாயார் ஆகிய விஷயங்களில் நல்ல பலன்களைத் தருவார். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அமையும். தாயாரின் உடல்நலம் சீராகும். இதுவரை வசதி குறைவான வீடுகளில் வசித்தவர்கள், நல்ல காற்றோட்ட வசதியும் தாராளமான இடவசதியுமுள்ள வீடுகளுக்குச் செல்வார்கள்.

Guru Transition
Guru Transition

குறைந்தபட்சம் வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஒத்திகைக்குப் பணம் கொடுத்து வாடகை இல்லாத அமைப்பிலான வீட்டுக்குச் செல்வார்கள். தாயாரின் அன்பு கிடைக்காமலிருந்த கன்னி ராசிக்காரர்களுக்குத் தாயாரின் பரிபூரண அன்பு இப்போது கிடைக்கும். பழைய வாகனங்களை வைத்துக்கொண்டு சிரமப்பட்டவர்கள் அதைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்குவார்கள்.

தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தொழில் சரியில்லாமல் இருந்தவர்கள், தொழிலில் ஒரு நல்ல இடத்தைப் பிடிப்பார்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லைகள் இதுநாள்வரை இருந்து வந்திருக்கும். இனி வேலைபார்க்குமிடத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். உங்களை அன்பாக வழிநடத்தும் சரியான புதிய மேலதிகாரி வர இருக்கிறார்.

இதுநாள் வரை நீங்கள் கடினமாக வேலை செய்தும் அதற்குரிய பலன் இன்னொரு நபருக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த நிலையெல்லாம் இனி மாறி, உங்கள் உழைப்பின் பலன் உங்கள் கைகளுக்கே வழங்கப்படும். பணி புரியும் இடத்தில் நல்ல சந்தோஷமான அமைப்பை இந்தக் குருபெயர்ச்சி உங்களுக்குத் தரும்.

12-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் சொந்த ஊரிலிருந்து வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யக்கூடிய அமைப்பைத் தருவார். வெளிநாட்டு யோகம் பலருக்கு இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும். இதுவரை விசா கிடைக்காமல் இருந்தவர்களுக்கு விசா வந்து சேரும்.

வெளிநாடுகளில் கடினமான வேலையைச் செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த கன்னி ராசிக்காரர்களுக்கு, முன்னேற்றகரமான வேலைகள் இப்போது அமையும். வேறு சிலருக்கு வெளிநாட்டுக் குடியுரிமை கிடைப்பதற்கான வாய்ப்பும் இந்தக் குருப் பெயர்ச்சியில் நிகழும்.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றி வருபவர்களில் சிலர், இந்தியாவுக்கே திரும்பிவிடலாமா, வெளிநாட்டிலேயே தொடர்ந்து இருக்கலாமா என்ற குழப்பமான மனநிலையில் இருந்து வந்தனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் குருபெயர்ச்சியின் வாயிலாக, அவர்கள் தொடர்ந்து வெளிநாட்டிலேயே பணிபுரியக்கூடிய வாய்ப்பை 8, 12-ம் இடத்தைப் பார்க்கும் குரு பகவான் நிச்சயம் வழங்குவார். இதில் ஒரு சிறப்பான முடிவை அவர்கள் இப்போது எடுப்பார்கள்.

Signs
Signs

கன்னி ராசிக்காரர்கள், பெரும்பாலும் கணிதம், புள்ளியியல், வருமான வரி கணக்கு போன்ற வகைகளில் அக்கவுண்டன்ட் என்று சொல்லக்கூடிய துறைகளில் புள்ளிவிவரப் புலிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி மிக நல்ல பலன்களைத் தரும்.

குறிப்பாக, கணிப்பொறித் துறையில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்லவித முன்னேற்றகரமான சூழல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்களுக்குத் திருமணமாகக்கூடிய வாய்ப்பும் இப்போது அமையும்.

நான்காம் இடத்தில் இருக்கும் குரு பகவான் அயன சயன சுக ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் இல்லற வாழ்க்கையில் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். அப்படித் தாம்பத்தியம் அமைப்பதற்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை இப்போது உங்களுக்கு அமைத்துத் தருவார்.

உங்களின் எதிர்கால வாழ்க்கையில் யாருடன் நீங்கள் இணையப் போகிறீர்கள் என்பதை வரப்போகிற தை மாதத்துக்குப் பிறகு, நீங்கள் காணப்போகிறீர்கள். இன்றைய இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமான குரு பெயர்ச்சியாக இருக்கும்.

சகல விஷயத்திலும் நன்மையையும் ஒரு மேன்மையையும் தரக்கூடிய குருப் பெயர்ச்சியாக இந்தக் குருப் பெயர்ச்சி இருக்கும்.

பரிகாரம்:

சீர்காழிக்கு அருகே இருக்கும் திருவெண்காட்டிலிருக்கும் ஈஸ்வரனை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது ஆகச் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

சென்னையைச் சேர்ந்தவர்கள் போரூர் அருகே இருக்கும் கோவூரில் இருக்கும் ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன்களைப் பெறலாம். வியாழக்கிழமையில் தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள்கள்.