Published:Updated:

சுபச்செலவுகள் செய்யப்போகும் கடகம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video

கடகம்
கடகம்

வெளிநாட்டு விசாவுக்காகக் காத்திருந்தவர்களுக்கு வெளிநாட்டில் நல்ல நிறுவனத்தில் வேலை அமைந்து கைநிறைய வருமானம் வரக்கூடிய அமைப்பு இப்போது ஏற்படும்.

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சிணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40-க்கு பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.

குருப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

கடக ராசிக்காரர்களுக்குச் சாதகமான இடமென்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்திலிருந்து குரு பகவான் சாதகமற்ற இடம் என்று சொல்லக்கூடிய 6 - ம் இடத்துக்கு மாறுகிறார். 6 - ம் இடத்துக்குச் செல்லும் குரு பகவானால் அல்லல்கள் எதுவும் வருமோ என்று பயப்படத் தேவையில்லை.

ஜோதிட ரீதியாகப் பார்க்கப் போனால் ஆறாமிடம் என்பது கடனைக் குறிக்கும். கடன் அதிகமாகத்தான் செய்யும். ஆனால், குரு பகவான் ஆறாமிடத்தில் இருப்பதால் உங்க்ளின் இல்லத்தில் சுபச்செலவுகள் ஏற்படும்.

மகன் அல்லது மகள் திருமணம் செய்வதற்காக, வீடு கட்டுவதற்காக, வண்டி வாகனங்கள் வாங்குவதற்காக, புதிதாகத் தொழில் தொடங்குவதற்காக நீங்கள் கடன் வாங்கவேண்டியிருக்கும்.

கிரகங்கள்
கிரகங்கள்

சுபச் செலவுகள், அசுபச் செலவுகள் எனக் கடன்களில் இருவகையுண்டு. ஆனால், குரு பகவான் சுபச் செலவுகளையே ஏற்படுத்துவார். ஆறாமிடத்து குரு பகவானைப் பார்த்து கடக ராசிக்காரர்கள் பயப்படத் தேவையில்லை. அதேபோல் ஆறாமிடத்தில் மறைந்த சனிபகவானால் கடந்த ஒன்றரை ஆண்டாகப் பெரிதாக நற்பலன்கள் எதுவும் நடக்கவில்லை.

ஆறாம் இடத்திற்கு அசுபகிரகங்கள் வரும்போது கடன் நீங்கும் என்பது விதி. ஆனாலும் கேதுவுடன் சனி சேர்க்கை இருந்ததால் பெரிதாக அந்தக் கடன்கள் அடைக்கப்படவில்லை.

தொழில் ரீதியாகப் புதிய நிறுவனம், புதிதாகத் தொழில் தொடங்குவது போன்றவற்றுக்கு வங்கிக்கடன் மிக எளிதாகக் கிடைக்கும். அதில் நல்ல வருமானமும் எதிர்காலத்துக்கான ஒரு நல்ல திட்டமிடலும் இருக்கக்கூடியதாக இந்தக் கடன் வாங்குதல் அமையும். உங்களின் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் 12 - ம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் வெளிநாட்டு யோகம் சிலருக்கு வாய்க்கும்.

Guru
Guru

வெளிநாட்டு விசாவுக்காகக் காத்திருந்தவர்களுக்கு வெளிநாட்டில் நல்ல நிறுவனத்தில் வேலை அமைந்து கைநிறைய வருமானம் வரக்கூடிய அமைப்பு இப்போது ஏற்படும்.

ராசிக்கு ஆறாமிடம் என்பது தொழில் ரீதியாக ஒருவரின் கீழ் வேலை செய்யும் அடிமைத்தொழிலைக் குறிக்கும். ஆனால், இதை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. அரசுப்பணியில் கூட ஒருவரின் கீழ்தான் மற்றொருவர் வேலை பார்க்க வேண்டியிருக்கும். இதுவரை டி.என்.பி.எஸ்.சி மூலமாகவோ அல்லது வாரியங்கள் மூலமாகவோ வேலைக்கு முயன்றவர்களுக்கு அரசுப் பணி இப்போது கிடைக்கும்.

மனதுக்குப் பிடித்த பணி அமையப்போகிறது. பணியில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கை மிக எளிதாக அடைவீர்கள். 10 - ம் இடத்தையும் 12 - ம் இடத்தையும் பார்க்கின்ற குரு பகவான் வேலை தொழில் போன்ற ஜீவன அமைப்புகளை உங்களுக்குச் சிறப்பாக அமைத்து தர இருக்கிறார்.

அலுவலகத்தில் நிம்மதியில்லாமல் வேலை பார்த்து வந்தவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். 12 - ம் இடத்தை குரு பார்ப்பதால் இதுவரை இருந்த மருத்துவச் செலவுகள் இனி குறையும். தாய் தந்தையருக்குச் செய்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். வீண்செலவுகள் இனி ஏற்படாது

சுபகிரகம் எந்த இடத்தில் இருந்தாலும் நல்ல பலன்களையே தரும் என்பது ஜோதிட விதி. அந்த அடிப்படையில் ஆறாமிடத்தில் இருக்கும் குரு பகவானைக் கண்டு கடக ராசிக்காரர்கள் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்ய குரு பகவான் காத்திருக்கிறார்.

ஆறாமிடத்து குரு, திருமணம் போன்ற விஷயங்களைச் சிறிது தள்ளிப் போடலாம். எந்தச் சூழ்நிலையிலும் கெடுக்கமாட்டார் தடைகளும் தாமதங்களும் கொடுத்து முயற்சியின் மூலமாக ஒரு பெரிய வெற்றியை உங்களுக்குத் தருவார். உங்களின் புத்தி தெளிவாக வேலை செய்து கடுமையாக உழைத்து நீங்கள் பல சாதனைகளைப் புரிவீர்கள் என்பது நிச்சயம்.

Eswar
Eswar

பரிகாரம்: கடக ராசிக்காரர்கள் மதுரை திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் சோமப்ப சுவாமிகள் என்று சொல்லக்கூடிய சித்தர் சமாதியில் வியாழக்கிழமை சென்று வழிபாடு செய்தால் மேலும் நற்பலன்கள் பெறலாம். சென்னையிலிருப்பவர்கள் சோமங்கலம் என்று சொல்லக்கூடிய இடத்திலிருக்கும் சோமநாதீஸ்வரரை வணங்குவது சிறந்த பரிகாரமாக அமைந்து நல்ல பலன்களை வழங்கும்.

அடுத்த கட்டுரைக்கு