Published:Updated:

துலாம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்!#Video

தைரியஸ்தானம் என்றும் வீரிய ஸ்தானம் என்றும் மூன்றாம் இடத்தைச் சொல்வார்கள். அதனால் எந்தக் காரியத்திலும் மன உறுதியுடனும் துணிச்சலுடனும் செயல்பட்டு நிச்சய வெற்றி பெறுவார்கள்.

துலாம்
துலாம்

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

Guru Transition
Guru Transition

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் சாதகமான இடமான இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்துக்குச் செல்கிறார். இந்த மூன்றாம் இடம் என்பது அவ்வளவு சாதகமான இடம் இல்லை. ஆனாலும், தைரியஸ்தானம் என்றும் வீரிய ஸ்தானம் என்றும் மூன்றாம் இடத்தைச் சொல்வார்கள். அதனால் எந்தக் காரியத்திலும் மன உறுதியுடனும் துணிச்சலுடனும் செயல்பட்டு நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

குருபகவான் தான் இருக்கின்ற இடத்தைச் சுகமாக்கி, தான் பார்க்கின்ற இடத்தில் சிறப்பான அம்சங்களைத் தருவார் என்பது என்பது ஜோதிட விதி.

மூன்றாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் பாக்கியஸ்தானமான 9 -ம் இடத்தையும் லாபஸ்தானமான 11-ம் இடத்தையும் பார்க்கிறார். ஒன்பதாமிடம் சகல பாக்கியங்களையும் தரக்கூடியது, பதினோராம் இடம் வருமானத்தைப் பெருக்கி லாபத்தைத் தரக்கூடியது. இந்த இரண்டு இடங்களையும் குரு பகவான் பார்க்கும்போது சின்ன சின்ன தடைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டித் துலா ராசிக்காரர்கள் சாதனை படைப்பார்கள் என்பது நிச்சயம்.

Libra
Libra

இதுவரைக்கும் ஒரு காரியத்தில் இறங்குவதற்குத் தயக்கமும் அச்சமும் இருந்ததால் அதில் ஈடுபடாமல் இருந்துவந்தீர்கள். இப்போது அதில் துணிச்சலுடன் இறங்கிச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

இதுவரைக்கும் `ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க்' சாப்பிடலாம் நினைச்சுக்கிட்டிருந்தீங்க. ஆனால், அது இப்போது நீங்கள் களத்தில் இறங்கிப் போராட வேண்டிய காலம் இது. அப்படி நீங்கள் போராடினால், கண்டிப்பாக அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சகாயஸ்தானத்தை குரு பார்ப்பதால் பலரும் தேடி வந்து உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் யாரிடம் உதவி கேட்டாலும் உடனே கிடைக்கும்.

உங்களுக்கு உதவலாம் என்ற எண்ணம் இருந்தும், அவர்களால் உதவ முடியாத ஒரு நிலை நிலவி வந்தது. ஆனால், இப்போது உங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தாராளமான பண வசதி கிடைக்கும். அதனால் அவர்கள் நீங்கள் கேட்கும் உதவிகளை உங்களுக்குச் செய்து தருவார்கள். மனம் இருந்தும் பணம் இல்லாத நிலை நிலவிய சூழலில் இப்போது பணமும் இருக்கும், மனமும் இருக்கும் என்ற சூழ்நிலை உருவாகும்.

Libra
Libra

இந்த 13 மாத காலத்தில் நீங்கள் கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கும். உங்களை நம்பி இருப்பவர்களுக்கும் உங்களால் உதவ முடியும்.

பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பதால், இதுவரை திருமண பாக்கியம், குழந்தைபாக்கியம் ஆகியவை தடைப்பட்டு வந்தவர்களுக்கு இப்போது திருமணம் கைகூடிவரும். உங்களின் வாழ்க்கைத்துணையை நீங்கள் இப்போது கண்டடைவீர்கள்.

உங்களின் வாழ்க்கைத்துணையை குரு பகவான் உங்களுக்கு அடையாளம் காட்டுவார். மூன்றாம் இடத்து குரு பகவான் நமக்கு நன்மை செய்ய மாட்டாரோ, என்று கவலைப்படவேண்டாம். நிச்சயமாக  உங்களுக்கு அவர் நன்மையே செய்வார்.

லாபஸ்தானமான 11-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் இதுவரைக்கும் கிடைத்த லாபத்தைவிட, இரட்டிப்பான லாபம் உங்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதாவது 10 சதவிகிதம் 20 சதவிகிதம் என்ற அளவில் இருந்த லாபம், இப்போது 40 சதவிகிதம் 60 சதவிகிதம் என்ற அளவில் உயரும்.

வியாபாரம், தொழில், பணிச்சூழல் எல்லாமே மிகவும் சிறப்பாக அமையும். பாக்கியஸ்தானத்தையும் லாபஸ்தானத்தையும் குரு பார்ப்பது மிக மிக மேன்மையான ஒரு அமைப்பாகும்.

பூர்வீகச் சொத்தில் பங்கு பெறுவதில் இருந்துவந்த சர்ச்சைகள் வழக்குகள் எல்லாம் இப்போது முடிவுக்கு வரும். உங்களுக்கான பங்குத் தொகை அல்லது உங்களுக்கான சொத்து சரியான அளவில், உரிய நேரத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.

மூதாதையர்களின் சொத்து, தந்தைவழிச் சொத்துகள் இப்போது உங்கள் கைக்கு வந்து சேரும். குரு பகவான் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் இதுவரை திருமணப் பேச்சுவார்த்தை தடைப்பட்டிருந்தவர்களுக்குத் தடைகள் அகலும். பதில் சொல்லாமல் இருந்தவர்கள், இப்போது உங்களுக்கு நல்லதொரு பதிலைத் தருவார்கள்.

இந்தக் குருப்பெயர்ச்சி உங்களின் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கும். சமூகத்தில் புகழையும் கௌரவத்தையும் அந்தஸ்தையும் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு வழங்கும்.

Sivan
Sivan

பரிகாரம்:

 குருப் பெயர்ச்சியில் மேலும் சிறப்பான பலன்களைப் பெற தமிழகத்தின் நடுமாவட்டங்கள் தென்மாவட்டங்கள் ஆகியவற்றில் இருப்பவர்கள், ஆலங்குடியிலிருக்கும் குரு பகவானை வியாழக்கிழமை நாளில் சென்று வழிபட்டால்  சிறப்பான பலன்களைப் பெறலாம். குறிப்பாக ஜன்ம நட்சத்திர நாளில் சென்று பூஜை செய்வது மிகவும் சிறப்பாக அமையும். 

ஆலங்குடி செல்ல முடியாதவர்கள் உங்களின் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய பழைமை வாய்ந்த சிவன் கோயிலுக்குச் சென்று தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.