Published:Updated:

பதவி உயர்வு பெறப்போகும் மீனம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்!#Video

உங்களின் மனதில் தெளிவும் சிந்தனையில் வேகமும் இருக்கும். அதனால், நல்ல முடிவுகளை உங்களால் உடனுக்குடன் எடுக்க முடியும்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை (விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.

மீனம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

Pises
Pises

மீன ராசிக்காரர்களுக்குப் பாக்கியஸ்தானமான 9-ம் இடத்திலிருந்து திரிகோணஸ்தானமான 10-ம் இடத்துக்கு குரு பகவான் வருகிறார். 'பத்தாமிடத்துக்கு குரு பகவான் வந்தால் பதவிப் பறிபோகும்' என்று சொல்வார்கள், ஆனால், அது மீன ராசிக்காரர்களுக்குப் பொருந்தாது. 12 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய ஆட்சிபெற்ற நிலையில் குரு பகவான் தனுசு ராசியில் அமர்கிறார்.

மீன ராசிக்காரர்களுக்கு ஜீவனஸ்தானமான தனுசு ராசியில் குரு பகவான் அமர்வதால், புதிய தொழில் தொடங்குவதற்கான அமைப்பையும் பதவி உயர்வைத் தரக்கூடிய நிலையையும் அளிப்பார். ஜீவனஸ்தானாதிபதி வலுப்பெற்றால் நல்ல தொழில் அமையும். உத்தியோகத்தில் ஒரு ஸ்திரத்தன்மையும் கிடைக்கும் என்பது ஜோதிட விதி.

Planets
Planets

தங்களின் திறமைக்கேற்ற வேலை அமையாமல் அவஸ்தைப்பட்டவர்களுக்குத் திறமைக்கேற்ற வேலை அமையும். தற்போது வகித்து வந்த பதவியில் தேக்கநிலையில் இருந்தவர்களுக்கு, அந்த நிலை மாறி உத்தியோகத்தில் ஒரு நல்ல உயர்வான நிலை இப்போது கிடைக்கும்.

12 வருடங்களுக்கு ஒருமுறை ராசிநாதனான குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சிபெற்ற நிலையில் வருகிறார். இப்படி வரும்போது உங்களின் மனதில் தெளிவும் சிந்தனையில் வேகமும் இருக்கும். அதனால், நல்ல முடிவுகளை உங்களால் உடனுக்குடன் எடுக்க முடியும். வெற்றியைத் தரக்கூடிய நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

Pisces
Pisces

இந்தச் சூழலில் யார் நல்லவர், யார் கெட்டவர், எது நல்லது எது தீமையானது என்பதை அறிந்துகொண்டு தெளிவாக, உங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்வீர்கள். இந்த 13 மாதங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் யாவும் நல்லவிதமாகவே முடியும்.

தனுசில் இருக்கும் குரு பகவான் 2-ம் இடத்தையும் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும் பார்ப்பதால், இதுவரை குடும்பம் அமையாமல் இருந்தவர்களுக்குத் திருமணம் நல்லவிதமாக முடிந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்குவார்கள்.

குரு பகவான் 6-ம் இடத்தைப் பார்ப்பதால் இதுவரை கட்டமுடியாமல் இருந்த கடன்களையெல்லாம் இப்போது அவர்கள் கட்டி முடிப்பார்கள். தனம், குடும்பம், வாக்கு ஆகிய மூன்றுக்குமுடைய 2-ம் இடத்தையும் குரு பகவான் பார்ப்பதால், உங்களால் சொன்ன சொல்லை நிச்சயமாகக் காப்பாற்றக்கூடிய அளவு பண வசதி உங்களுக்குக் கிடைக்கும்.

வெளிநாட்டு யோகம் பெறும் மகர  ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்!#Video

மீன ராசிக்காரர்களுக்கு 4-ம் இடமான கன்னி ராசியைப் பார்க்கிறார். இது மீன ராசிக்காரர்களின் சுகஸ்தானமென்பதால், வாகனயோகம் சிறப்பாக அமையும். தாயாரின் உடல்நலம் சீரடையும். தாயாரிடம் எதையும் கேட்கத் தயங்கிக்கொண்டிருந்தவர்கள், இப்போது வெளிப்படையாகப் பேசி தங்களுடைய விருப்பத்தைப் பூர்த்திசெய்துகொள்வார்கள்.

Tiruchendur
Tiruchendur
சகல பாக்கியங்களையும் பெறப்போகும் கும்ப ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video

உங்களின் ராசிக்கு ஆறாமிடமான சிம்மத்தை குரு பார்ப்பதால் பதவியில் நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கும். இதுவரை பதவி உயர்வு கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசுத் தேர்வு எழுதுபவர்களுக்கு அரசுத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உங்களுடைய எதிர்காலம் எவருடன் எந்தத் திசையில் அமையப்போகிறது என்பதை, இந்த 13 மாத கால அளவில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

பரிகாரம்: அரக்கோணம் அருகே இருக்கும் தக்கோலம் குரு ஸ்தலத்துக்கோ திருச்செந்தூர் செந்தில்முருகன் கோயிலுக்கோ சென்று வியாழக்கிழமை நாளில் வழிபட்டால், மேலும் நல்ல பலன்களை அடைவார்கள்.