Published:Updated:

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2021- 22: `சுதந்திரக் காற்றைச் சுவாசிப்போம்!' - கே.பி. வித்யாதரன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குருப்பெயர்ச்சி பொதுபலன்கள்
குருப்பெயர்ச்சி பொதுபலன்கள்

இந்த குருப்பெயர்ச்சி பொதுவாக என்ன மாதிரியான பலன்களைத் தரும் எப்படி இருக்கும் என்று பொதுபலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் கே.பி. வித்யாதரன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நவகிரகங்களில் குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆன குருபகவான் ஏப்ரல் மாதம் (2021) அதிசாரமாக கும்பத்துக்குச் சென்று பின் வக்ரமடைந்து மகர ராசிக்கே வந்து தற்போது மகர ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

வரும் நவம்பர் 13-ம் தேதி அன்று அவர் பெயர்ச்சியாகி கும்பராசிக்கே செல்கிறார். இந்த குருப்பெயர்ச்சி பொதுவாக என்ன மாதிரியான பலன்களைத் தரும் எப்படி இருக்கும் என்று பொதுபலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் கே.பி. வித்யாதரன்.
கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

குருப்பெயர்ச்சி எப்போது?

“நிகழும் பிலவ வருட ஐப்பசி மாதம் 27ம் தேதி சனிக்கிழமை சுக்ல பட்சத்து தசமி திதி, மேல்நோக்குள்ள சதயம் நட்சத்திரத்தில், கும்ப ராசியில், வியாகாதம் நாமயோகம், தைதுலம் நாமகரணத்தில், பஞ்சபட்சியில் மயில் பலவீனம் அடையும் நேரத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த அமிர்தயோகத்தில், ரிஷப லக்னத்தில் நவாம்சத்தில் கும்ப லக்னத்தில், புதன் ஓரையில் பொன்னன் எனப் புகழப்படும் பிரகஸ்பதியாகிய குருபகவான் மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்குள் 13.11.2021 அன்று மாலை 6 மணி 10 நிமிடத்தில் அமர்கிறார்” என்று குருபெயர்ச்சியின் துல்லியமான நேரத்தைக் குறிப்பிட்டார் வித்யாதரன்.

இந்த முறை குருபகவான் அமரும் கும்பத்தை குரு வளைய வீடென்று சொல்வார்கள். ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம். இந்த நான்கு வீடுகளையே குருவளைய வீடென்று சொல்வார்கள். ’குரு வளையத்தில் இருக்கும் குரு, குறைவில்லாத வாழ்க்கையைத் தருவார்’ என்பது ஜோதிட மொழி என்பதைச் சொல்லி தொடர்ந்து இந்த குருப்பெயர்ச்சிக்கான பொதுபலன்களையும் வழங்கினார்.

தங்கம் விலை...
தங்கம் விலை...

குருப்பெயர்ச்சி பொதுபலன்கள்

இந்த முறை குருபகவான் ஸ்திர வீடான கும்ப ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த அமைப்பு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கப் போகிறது. குறிப்பாகத் தற்போது உலகெங்கும் ஆட்டிப்படைக்கும் நோய் பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும்.

ஆட்டம் கண்டிருக்கும் உலகப் பொருளாதாரம் மெல்ல மெல்ல எழுந்து நிற்கும்.

நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வீடுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் மனிதர்கள் வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள்.

மகரத்தில் நீசமடைந்து இருந்த குருபகவான் பெயர்ச்சி ஆவதன் மூலம் நல்ல பலன்கள் ஏற்படும். அதிலும் குறிப்பாக அவர் சனிபகவானிடமிருந்து விலகி வருவது மிகவும் நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்கு வர்த்தகம் உயரும்.

தங்கத்தை வாங்குபவர்கள் அதிகரிப்பார்கள். புதிய சுரங்கங்கள் கண்டறியப்படும்.

தங்கத்தின் விலையில் உயர்வு காணப்படும்.

நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை இருந்த வண்ணம் இருக்கும். ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகள் மறுபுறம் யுத்தத்துக்கும் தயாராகும். நாட்டில் ஆயுதபலம் அதிகரிக்கப்படும்.

கும்பராசியில் குருபகவான் அமர்வதால் மதுபான உற்பத்தி அதிகரிக்கும்.

நிறைய புதிய மதுபானக் கடைகள் திறக்கப்படும். உலகெங்குமே மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பெட்ரோல், டீசல் விலை!
பெட்ரோல், டீசல் விலை!

லாட்டரி, சூதாட்டம் போன்ற சட்டத்துக்குப் புறம்பான விளையாட்டுகள் அதிகரிக்கும். போதைபொருள் கடத்துவோர் வழக்கத்தைவிட அதிகமாகப் பிடிப்படுவர்.

சந்தையில் போலியான பொருள்கள் அதிகரிக்கும்.

அத்தியாவசியப் பொருள்களான உணவு மற்றும் மருந்து வகைகளில் கலப்படங்கள் அதிகரிக்கும்.

சமூக ஊடகங்களில் வதந்திகளும், வாதங்களும் அதிகம் வலம் வரும்.

கும்பத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் நீர்நிலைகள் யாவும் நிரம்பியே காணப்படும். அதன் பலனாக விவசாய உற்பத்தி அதிகரிக்கும். அதே நேரம் சேதமும் இருக்கும்.

குருபகவான் தன் ஏழாம் பார்வையாக சிம்ம ராசியைப் பார்ப்பதால் அரசியலில் ஆளுங்கட்சியின் கை ஓங்கியிருக்கும். அவர்களின் நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றுவார்கள்.

அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படும்.

பெடரோல், டீசல் விலை உயரும். எரிபொருளுக்கான மாற்று வழியை மத்திய அரசாங்கம் கண்டுபிடிக்கும். அதன்பின் விலையேற்றம் தடுத்து நிறுத்தப்படும்.

சனிபகவான் வலுத்திருப்பதால் நிலக்கரிக் சுரங்கங்களின் உற்பத்தி அதிகமாகும். குருபகவான் ஐந்தாம் பார்வையாக மிதுன ராசியைப் பார்ப்பதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு முழுவீச்சில் செயல்படும். மாணவர்கள் ஆர்வமாகப் படிப்பார்கள்.

குருபகவான் ஒன்பதாம் பார்வையாக துலாம் ராசியைப் பார்ப்பதால் வர்த்தகம் நல்ல முறையில் நடைபெறும். மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகும். ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும்.

உயர்ரக வாகனங்கள் வாங்குபவர்கள் அதிகரிப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்வார்கள்.

ஆலங்குடி குருபகவான் கோயில்
ஆலங்குடி குருபகவான் கோயில்

புதிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். வேலைவாய்ப்புகள் பெருகும்.

மன உளைச்சலிலிருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவர். சுற்றுலாத்துறை மற்றும் சினிமாத்துறை மீண்டும் பிரபலமாகும்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி ஒரு கும்பாபிஷேகத்தை போல மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்” என்று விளக்கமாகக் குறிப்பிட்டார் ஜோதிடரத்னா கே.பி. வித்யாதரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு