Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
குருப்பெயர்ச்சி பலன்கள்

14.4.2022 முதல் 22.4.2023 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்

14.4.2022 முதல் 22.4.2023 வரை

Published:Updated:
குருப்பெயர்ச்சி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
குருப்பெயர்ச்சி பலன்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்

மேஷம்: கடந்த ஓராண்டுக் காலமாக உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து பண வரவையும் செல்வாக்கையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அள்ளிக்கொடுத்த குரு பகவான், 14.4.2022 முதல் 12-வது வீட்டில் நுழைவதால் பயணங்கள் அதிகமாகும். செலவினங்களும் கூடிக்கொண்டே போகும். திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப்போய் முடியும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். முன்கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. கணவரை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாம். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றி வெற்றி பெறுவீர்கள். புண்ணியத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் இருப்பவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். வியாபாரத்தில் லாபம் குறையாது. ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். மூத்த அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்துகொள்வார்கள். இந்த குரு மாற்றம் அவ்வப்போது செலவுகளையும் பயணங்களையும் தந்தாலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியதாக இருக்கும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்: கடந்த ஓராண்டுக் காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பல விதங்களிலும் அவமானங்களையும் தோல்வியையும் கொடுத்த குரு பகவான், 14.4.2022 முதல் லாப வீட்டில் நுழைவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தைரியம் பிறக்கும். வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். கணவர் மனம்விட்டுப் பேசுவார். புதிய வேலைக்கு நல்ல பதில் வரும். அயல்நாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. பார்த்தும் பார்க்காமல் சென்றுகொண்டிருந்த சொந்தங்களெல்லாம் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் சம்பாதிப்பீர்கள். நவீன டிசைனில் நகை வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்னை தீரும். வழக்கு சாதகமாகும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களிடமிருந்த கற்பனைத்திறன், கலைத்திறனை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்த செல்வாக்கையும் லாபத்தையும் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். வேலையாட்களின் பிரச்னையும் குறையும். உத்தியோகத்தில் கடந்த ஓராண்டுக் காலமாகப் பட்ட அவஸ்தைகள், நெருக்கடிகள், அவமானங்களெல்லாம் நீங்கிப் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த குரு மாற்றம் ஒதுங்கி ஒடுங்கியிருந்த உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுடன் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தருவதாக அமையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனம்: கடந்த ஓராண்டுக் காலமாக உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்திலே அமர்ந்து ஓரளவு பணவரவைத் தந்துகொண்டிருந்த குரு பகவான், 14.4.2022 முதல் ராசிக்கு 10-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார். 10-ம் இடம் பதவியைக் கெடுக்குமே, அந்தஸ்தை குறைக்குமே என்றெல்லாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். ஓரளவு நல்ல பலன்கள் உண்டாகும். முக்கிய விஷயங்களுக்கெல்லாம் இடைத்தரகர்களை நம்பாமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. கணவருடன் வாக்குவாதங்கள் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணத்துக்காக அதிகம் அலைய வேண்டியிருக்கும், குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டின் மீது விழுவதால் பண வரவு குறையாது. வருமானம் உயரும். ஆனால், தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை இருந்துகொண்டேயிருக்கும். வியாபாரத்தில் பெரிதாக முதலீடு செய்ய வேண்டாம். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரருடன் மோதல் வரும். உத்தியோகத்தில் அவமானங்களும் நெருக்கடிகளும், விரும்பத்தகாத இடமாற்றங்களும் இருக்கும். அதிகாரிகளை அனுசரித்துப்போவது நல்லது. இந்த குரு மாற்றம் சகிப்புத் தன்மை யுடனும் நாவடக்கத்துடனும் செயல்பட்டால் ஓரளவு நன்மையைத் தருவதாக அமையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

கடகம்: கடந்த ஓராண்டுக் காலமாக உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து உங்களுக்குப் பணத் தட்டுப்பாட்டையும் பிள்ளைகளால் பிரச்னைகளையும் குடும்பத்தில் நிம்மதியற்ற போக்கையும் உருவாக்கிய குரு பகவான், 14.4.2022 முதல் 9-ம் வீட்டில் நுழைவதால் உங்கள் வாழ்க்கையில் பல திருப்பங்களும், யோகங்களும் அடுத்தடுத்து நடக்கும். வசதி, வாய்ப்புகள் கூடும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதப்போக்கு நீங்கும். உறவினர்களிடம் இருந்துவந்த மனத்தாங்கல் நீங்கும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய நகையை மாற்றிப் புதிய டிசைனில் வாங்குவீர்கள். சகோதர பாசம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த நிலை மாறும். அதிரடி லாபம் உண்டு. ஷேர் மூலமாகவும் பணம் வரும். புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகள் உதவுவார்கள். அதிக சம்பளத்துடன் நல்ல வேலையும் கிடைக்கும். இந்த குரு மாற்றம் பலவித பிரச்னைகளால் வாடி, வதங்கிப் போயிருந்த உங்களின் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்குவதாக இருக்கும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம்: உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியைத் தந்த குரு பகவான், 14.4.2022 முதல் 8-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார். 8-ல் குரு வந்தால் எல்லாம் தட்டிப்போகுமே, தள்ளிப்போகுமே என்று கவலைப்பட வேண்டாம். குரு 8-ல் ஆட்சி பெற்று அமர்வதாலும், முக்கியமான வீடுகளைப் பார்ப்பதாலும் உண்டாகும். அயல்நாட்டுப் பயணம் கூடி வரும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவுவார்கள். தவிர்க்க முடியாத பயணங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். கணவருக்குக் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் இருக்கும். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு பேசாமல், யதார்த்தமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். வீடு, மனை வாங்க வங்கிக்கடன் உதவி கிடைக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி விற்பனை மூலமாகவும் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். மூத்த அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவுவார்கள். இந்த குரு மாற்றம் வேலைச்சுமையையும் ஒருவித படபடப்பையும் தந்தாலும் மற்றொரு பக்கம் வெற்றியையும் உற்சாகத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி: கடந்த ஓராண்டுக் காலமாக ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் பாடாய்ப்படுத்திய குரு பகவான், 14.4.2022 முதல் 7-ம் வீட்டுக்குள் வந்து அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால் அடிக்கடி ஏற்பட்ட விபத்துகள், நஷ்டங்கள், அவமானங்கள், பிரச்னைகள் இவற்றிலிருந்தெல்லாம் விடுபட்டு முன்னேறுவீர்கள். கணவருடன் இருந்து வந்த பகைமை நீங்கும். ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களை எதிர்த்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் வளைந்து வந்து பேசுவார்கள். வருமானம் உயரும். வசதிகள் கூடும். வீடு, மனை வாங்குவீர்கள். தன்னிச்சையாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். கணவரும் உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மூத்த அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். இந்த குரு மாற்றம் பிரச்னைகளாலும் சிக்கல்களாலும் முடங்கிக்கொண்டிருந்த உங்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் பணவரவையும் தருவதாக அமையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

துலாம்: இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்த குரு பகவான், 14.4.2022 முதல் 6-ம் வீட்டில் சென்று மறைவதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. முடிந்தவரை மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருக்கவும். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நீங்கள்தான் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை வரும். கணவருடன் கருத்து மோதல் உண்டாகும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவதற்கெல்லாம் வங்கிக் கடன் உதவி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் தேதியில் பணம் கிடைக்காவிட்டாலும் கடைசி நேரத்தில் கைக்கு வந்து சேரும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். முன்கோபத்தைக் குறைக்கப் பாருங்கள். பிள்ளைகளிடம் உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம். அவர்களின் திறமையைக் கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை ஊக்கப்படுத்துங்கள். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் நிலவும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். இந்த குரு மாற்றம் உங்கள் இமேஜை ஒருபடி குறைத்தாலும், உடல்நலக் குறைவையும் தந்தாலும் சகிப்புத் தன்மையாலும் சாதுர்யமான பேச்சாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்: கடந்த ஓராண்டுக் காலமாக 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் கஷ்டப்படுத்திய குரு பகவான், 14.4.2022 முதல் 5-ம் வீட்டில் அமர்வதால் இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகளும் தடுமாற்றங்களும் நீங்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கு வித்திடுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அழகு, இளமை கூடும். வழக்கு சாதகமாகும். தந்தை வழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும். அக்கம்பக்கம் வீட்டாருடன் இருந்த சச்சரவு நீங்கும். நாத்தனார், மச்சினர் மதிப்பார்கள். சொந்தங்கள் உங்களுடைய முடிவை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டு. புகழ்பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் கிடைக்கும். இந்த குரு மாற்றம் எதிர்பாராத திடீர் யோகங்களையும் செல்வச் செழிப்பையும், அந்தஸ்தையும் உங்களுக்கு அள்ளித் தரும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு: கடந்த ஓராண்டுக் காலமாக உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் முடக்கிப்போட்ட குரு பகவான், 14.4.2022 முதல் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்வதால் இனி நல்லது நடக்கும். தயக்கம், தடுமாற்றங்கள் நீங்கும். உங்களுக்குள் இருந்த தாழ்வுமனப்பான்மை விலகும். உங்கள் பலத்தைப் புரிந்துகொள்வீர்கள். கணவரிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. தாயாருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண விஷயத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புண்ணியத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்த வேண்டிய சூழல் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். சிறுசிறு கௌரவக் குறைவான சம்பவங்களும் வந்து போகும். இந்த குரு மாற்றம் வேலைச்சுமையையும் பணப்பற்றாக்குறையையும் தந்தாலும் ஓரளவு உங்கள் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

மகரம்: இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு செல்வாக்கையும் செல்வச் செழிப்பையும் தந்த குரு பகவான், 14.4.2022 முதல் 3-ம் வீட்டில் மறைகிறார். 3-ம் இடத்து குரு முடக்கிவிடுவாரோ என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். குரு ஆட்சி பெற்று அமர்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு தொடரும். ரசனைக்கேற்ப வீடு அமையும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும். மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சிலர் புதிதாக முதலீடு செய்து புதுத் தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அலைச்சலும் வேலைச்சுமையும் இருந்தாலும் செல்வாக்கு கூடும். அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இந்த குரு மாற்றம் சின்னச் சின்ன அலைச்சலையும் செலவினங்களையும் தந்தாலும் உங்களைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க உதவும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

கும்பம்: கடந்த ஓராண்டுக் காலமாக உங்களுடைய ராசிக்குள்ளே அமர்ந்து உங்களைப் பலவித பிரச்னைகளாலும் பிழிந்தெடுத்த குரு பகவான், 14.4.2022 முதல் 2-ம் வீட்டில் நுழைவதால் சோர்வு, களைப்பு நீங்கும். அழகு, ஆரோக்கியம் கூடும். கடன் பிரச்னையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுக்குள் கலகத்தை உண்டாக்கியவர்களை இனம்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்குத் திட்டமிடுவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். வேலையில்லாமல் தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். எதிர்பாராத வி.ஐ.பி-க்களின் சந்திப்பு நிகழும். மாமனார், மாமியாரின் எதிர்ப்பு நீங்கும். அயல்நாடு செல்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் பாராமுகம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரம் தழைக்கும். வரவு உயரும். புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் இனி தடையில்லாமல் வந்து சேரும். இந்த குரு மாற்றம் பதுங்கிக் கிடந்த உங்களைப் பிரபலப்படுத்துவதாகவும் வசதி, வாய்ப்புகளைத் தருவதாகவும் அமையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள்

மீனம்: இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் அமர்ந்து பலவிதங்களிலும் நஷ்டங்களையும் பிரச்னைகளையும், நிம்மதியற்ற போக்கையும் உருவாக்கிக்கொண்டிருந்த குரு பகவான், 14.4.2022 முதல் உங்கள் ராசிக்குள் நுழைவதால் நீங்கள் எதிர்பார்த்தபடி இனி எல்லாம் சிறப்பாக நடக்கும். ஜன்ம குரு என்பதால் சாதாரண விஷயத்தையெல்லாம் பெரிதாக்கா தீர்கள். சந்தேகப்பார்வையைத் தவிர்த்துவிடுவதும் நல்லது. வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். கணவர் உங்களைப் புரிந்துகொள்வார். அவருக்கிருந்த மன இறுக்கம் விலகும். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு கணவர் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். பணப் புழக்கம் உண்டு. குரு, ஜன்ம குருவாக இருப்பதால் பணப்பற்றாக்குறையும் அவ்வப்போது ஏற்படும். மற்றவர்களுக்கு பணம் வாங்கித் தருவதில் நீங்கள் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாக்கிகளும் வசூலாகும். வேலையாட்களும் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள். சூழ்ச்சிகளையும் தாண்டி அலுவலகத்தில் மதிப்பு கூடும். பதவி உயர்வு உண்டு. இந்த குரு மாற்றம் சற்றே மனநிம்மதியற்ற போக்கையும் ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும் மற்றொரு பக்கம் ஓரளவு வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism