Published:Updated:

மிதுன ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் கலைஞர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்!
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்!

மிதுன ராசிக்காரர்களிக்கான வியாபாரிகள் உத்தியோகஸ்தர்கள் மற்றும் கலைஞர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

குருபகவான் 13.11.2021 அன்று மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதுவரை உங்களின் 8 ம் வீட்டில் இருந்த குருபகவான் 9 ம் வீட்டுக்கு மாறுகிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது ஜோதிட வாக்கு. மேலும் குருபகவானின் பார்வை பலமும் சாதகமாக இருக்கிறது. எனவே வாழ்வில் பல மாற்றங்கள் நிகழும். மிதுன ராசியைச் சேர்ந்த வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி என்ன மாதிரியான பலன்கள் வாய்க்கும் என்பதை அறிந்துகொள்வோம்.

குரு பகவான்
குரு பகவான்

வியாபாரிகளுக்கு:

குருபகவான் உங்கள் ராசிக்கு 3 ம் வீடான சிம்மத்தைப் பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை மாறும். புதிய முதலீடுகளைத் துணிந்து மேற்கொள்வீர்கள். அவை லாபகரமாக அமையும். வேலை ஆள்களால் உண்டான பாதிப்புகள் மறையும். திறமைவாய்ந்த பணியாளர்களைச் சேர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். பொருள்கள் விற்றுத் தீரும். மின்னணுப் பொருள்கள், பயணம், ஹார்டுவேர்ஸ் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு தேடிவரும். சக ஊழியர்களிடையே இருந்த போட்டி பொறாமை மறையும். வெளிநாட்டுப் பணி தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பணி கிடைக்கும். தடைப்பட்டிருந்த சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் மீது அன்போடு நடந்துகொள்வார். சக ஊழியர்களிடையே இருந்த குழப்பங்கள் தீரும். யாரைக் குறித்தும் தனிப்பட்ட முறையில் அலுவலகத்தில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிசுகிசுக்கள் மறையும். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகப்படுத்துவதாக அமையும். வெற்றிவாய்ப்புகள் தேடிவரும்.

பரிகாரம்: விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவுங்கள் குறிப்பாக மாங்கல்யம் வாங்கிக் கொடுத்தால் உங்கள் வாழ்வில் செல்வ வளம் கிடைக்கும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு