Published:Updated:

`நிதானம் தேவை’ - விருச்சிக ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22!

விருச்சிக ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

குருபகவான் 13.11.21 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மூன்றாம் இடமான மகரத்திலிருந்தபோதும் குருபகவான் உங்கள் ராசிக்குப் பெரிய நன்மைகள் ஏதும் செய்யாமல் இருந்தார். ஆனால் உங்களுக்கு 11 ம் வீட்டைப் பார்த்து அதன் மூலம் உங்களை வெற்றிகரமாக இயங்க வைத்துக்கொண்டிருந்தார். தற்போது அந்த நிலை மாறுகிறது. குருபகவான் நான்காம் இடத்தில் அமர்ந்து பலன்தர இருக்கிறார். இதனடிப்படையில் இந்தப் பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை விருச்சிகராசி வியாபாரிகள் உத்தியோகஸ்தர்கள் மற்றும் கலைஞர்களுக்கு வழங்க இருக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.

குருபகவான்
குருபகவான்

வியாபாரிகள்: தொழிலை விரிவுபடுத்த சந்தர்ப்பம் கூடிவரும். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் நிதானத்தைப் பின்பற்ற வேண்டியது அவசியம். வேலை செய்பவர்களிடம் கனிவாகப் பேசி வேலைவாங்கப் பாருங்கள். அதேவேளையில் அவர்களிடம் தொழில் ரகசியங்கள் எதையும் சொல்லிவிட வேண்டாம். விட்டுப்போன வாடிக்கையாளர்களைக் கவரப் புதிய திட்டங்களை அறிவிப்பீர்கள். கெமிக்கல், பர்னிச்சர் வகைகளால் ஆதாயமுண்டு. பங்குதாரர்களிடம் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போங்கள். எதிர் எதிராக நின்று வாக்குவாதம் செய்வதைத் தவிருங்கள்.

உத்தியோகஸ்தர்கள்: பணிச்சுமை அதிகரித்த வண்ணமே இருக்கும். சக ஊழியர்கள் பொய்யான புகார்களைச் சொல்வார்கள். மேலதிகாரியிடம் மோதல் போக்கைக் கைவிடுங்கள். பணியில் திடீர் இடமாற்றம் உண்டாகலாம். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளிக்கும் திறனையும் குருபகவானே உங்களின் 10 ம் வீடான சிம்மத்தைப் பார்ப்பதன் மூலம் வழங்குவார்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

கலைஞர்கள்: புதிய வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டிவரும். வாய்ப்புகள் தடைப்பட்டாலும் பின்பு தேடிவரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கொஞ்சம் அலைக்கழித்தாலும், இறுதியில் நினைத்ததை முடிக்கும் வல்லமையைத் தரும்.

பரிகாரம்: கருவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பசுபதீஸ்வரரை வணங்குங்கள். பார்வையற்றோருக்கு உதவுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு