Published:Updated:

`பொறுமை தேவை’ - தனுசுராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

தனுசு ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

13.11.2021 அன்று குருபகவான் உங்கள் ராசிக்கு 2 -ம் இடமான மகரத்தில் இருந்து 3 -ம் இடமான கும்பத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். குருபகவான் மூன்றில் சென்று மறைவு பெறுவது அத்தனை நல்ல அமைப்பு அல்ல என்றாலும் குருபகவான் அங்கிருந்து உங்களின் ராசிக்கு 7, 9 , 11 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். இதை மனதில் கொண்டு தனுசு ராசியைச் சேர்ந்த வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப் பட்ட பலன்களைத் தர இருக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.

குருபகவான்
குருபகவான்

வியாபாரிகள்:

தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதாக இருந்தால் நன்கு சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுச் செய்யவேண்டாம். சந்தை நிலவரத்தை கவனத்தில் கொள்ளுங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் அன்போடு நடதுகொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போங்கள். ஸ்டேஷ்னரி, ஹோட்டல், விடுதிகள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

அலுவலகத்தில் தேவையற்ற பேச்சுகளைத் தவிருங்கள். உயர் அதிகாரிகளோடு விவாதம் செய்வதை விட்டுவிடுங்கள். முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். எனவே நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். யாரேனும் உங்களை வம்புக்கு இழுத்தாலும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டாம் இடமாற்றங்கள் வரலாம். அதிர்ச்சி அடைய வேண்டாம். வேலைச்சுமை படிப்படியாகக் குறையும். அடிக்கடி விடுப்பு எடுப்பதைக் குறையுங்கள். பணி தொடர்பான வழக்குகள் கொஞ்சம் நிதானமாகச் செல்லும். பதற்றம் வேண்டாம். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

கலைஞர்கள்: கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டிய காலம் இது. எனவே எந்த வாய்ப்பையும் நழுவ விட வேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சோதனைகளைத் தந்தாலும் உங்களை நன்கு பக்குவப்படுத்தி சாதனைகளை நோக்கி நகர்த்தும்.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஏகாம்பரநாதேஸ்வரரை வணங்குங்கள். மனவளம் குன்றியோருக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு