Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22: கன்னி - தனலாபம் கிடைக்கும்!

கன்னிராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 -22!

கலைமனமும் கலங்காத குணமும் உடைய கன்னிராசி அன்பர்களே

13.11.2021 அன்று குருபகவான் மகரத்தில் இருந்து கும்பத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதுவரை உங்களின் ஐந்தாம் வீட்டில் இருந்து நற்பலன்களை வழங்கிவந்ததோடு பார்வை பலமும் பெற்றிருந்தீர்கள். ஆனால் இப்போது சஷ்டம ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறதோ என்று கவலைப்படும் கன்னி ராசி அன்பர்களே... குருபகவான் இந்தப் பெயர்ச்சியிலும் உங்களுக்குத் தன் பார்வையால் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளித்தர இருக்கிறார் என்பதை அறிந்து சந்தோஷப்படுங்கள்.

ஆலங்குடி குருபகவான் கோயில்
ஆலங்குடி குருபகவான் கோயில்

2 - ம் இடமான துலாத்தில் குருபகவானின் பார்வை விழுகிறது. இது தங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்குஸ்தானமாகும். எனவே உங்கள் தனலாபம் அதிகரிக்க இருக்கிறது. பொருளாதார வரவில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி எதிர்பார்த்ததைவிட அதிகப் பணவரவு உண்டாகும். அதற்கான வழிகள் பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீர்ந்து இல்லறம் நல்லறமாகும். குருபகவான் மிதுனத்தைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். பதவியுயர்வு தேடிவரும். பணவரவும் அதிகரிக்கும். உங்களின் விரையஸ்தானமான சிம்மராசியை குருபகவான் பார்ப்பதால் வீண் செலவுகளை எல்லாம் கட்டுப்படுத்துவார். மகன் கல்விக்காகச் செலவு செய்வீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விட்டுப்போன பணிகளை எடுத்துச் செய்யும் நிலை வரும்.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் செவ்வாய் பகவானின் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற கோபம், செலவு ஆகியன ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் உண்டாகி நீங்கும். உடல் ஆரோகியத்திலும் அக்கறை செலுத்துங்கள். முன்பின் தெரியாதவர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். பயணத்தின் போதும் உரிய கவனம் தேவை.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

சதய நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

31.12.2021 முதல் 02.03.2022 வரை யிலான காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பரம்பரை சொத்தை விற்கும் நிலை ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் நடவடிக்கையில் கவனம் செலுத்துங்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிகள் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் குருபகவான் தனது சொந்த நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் சண்டைக்குச் செல்லாதீர்கள். குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். காதுபடவே சிலர் உங்களைக் குறித்து அவதூறு பேசுவார்கள். அதை எல்லாம் கண்டும் காணாமலும் விடுங்கள். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்க வேண்டாம். பணியிடத்தில் இடமாற்றம் இருந்துகொண்டேயிருக்கும்.

நடராஜப் பெருமான்
நடராஜப் பெருமான்

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை அலைகழித்தாலும் மறைமுக வெற்றியையும் பல முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.

பரிகாரத்தலம்: சிதம்பரம்

வணங்கவேண்டிய தெய்வம்: நடராஜப்பெருமான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு