Published:Updated:

`முதலீட்டில் கவனம்’ - கும்ப ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

கும்ப ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

குருப்பெயர்ச்சி 13.11.2021 அன்று நடைபெற இருக்கிறது. குருபகவான் மகர ராசியில் இருந்து பெயர்ச்சி ஆகி ஜன்ம குருவாக உங்கள் ராசிக்குள்ளேயே வருகிறார். 13.4.2022 வரை உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்க இருக்கிறார். இது தனிப்பட்ட வாழ்வில் பல நல்ல பலன்களைக் கொடுக்கும். என்றாலும் கொஞ்சம் கவனத்துடனேயே செயல்பட வேண்டிய காலகட்டம் இது. குருபகவான் உங்கள் ராசிக்கு 2, 10 க்கு அதிபதி. இதை மனதில்கொண்டு கும்ப ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் கலைஞர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை இந்த குருப்பெயர்ச்சி வழங்கும் என்பதை அறிந்துகொள்வோம்.

ஆலங்குடி குருபகவான் கோயில்
ஆலங்குடி குருபகவான் கோயில்

வியாபாரிகள்:

சந்தை நிலவரம் கொஞ்சம் முன்னேற்றம் காட்டினாலும் அத்தனை சாதகமாக இருக்காது என்பதால் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன்னால் ஒன்றுக்குப் பத்துமுறை யோசித்துச் செய்வது நல்லது. வேலையாள்களின் ஒத்துழைப்பு இருக்காது. என்றாலும் அவர்களைக் கொஞ்சம் விட்டுப்பிடியுங்கள். அவர்கள் கேட்கும் சலுகைகளில் பாதியாவது கொடுத்து அவர்களைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் மனம் கோணாமல் நடந்துகொள்ளுங்கள். சந்தையில் சக வியாபாரிகளிடம் இணக்கமான போக்கையே கடைப்பிடியுங்கள். கெமிக்கல், ஹோட்டல், துணி வகைகளால் லாபம் உண்டு. பங்குதாரர்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொள்வார்கள். இருவருக்கும் இடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களைக் குறித்துக் குறை கூறினாலும் அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக்கொள்ளவும் வேண்டாம். அதேவேளையில் கௌரவப் பதவிகள் தேடிவரும். உங்களுக்கான மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும். சவால்களை ஏற்றுக்கொள்வீர்கள். அதில் வெற்றியும் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியன இந்த ஆண்டு இறுதியில் வாய்க்கும்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

கலைஞர்கள்: விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் அதை முறையாக அணுகுங்கள். பெரிய நிறுவனங்கள் உங்களுக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சவால்களை சந்திக்கத் தேவையான சாமர்த்தியத்தையும், சகிப்புத்தன்மையையும், பணவரவையும் தரும்.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருக்கருகாவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுல்லைவனேஸ்வரரை வணங்குங்கள். ரத்த தானம் செய்யுங்கள். அந்தஸ்து பெருகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு