Published:Updated:

`புதுப்பொலிவு உண்டாகும்’ - மகர ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

மகர ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

குருபகவான் 13.11.2021 அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி கும்பராசிக்குச் செல்கிறார். இந்த இடத்தில் அவர் அடுத்த ஆறுமாதத்துக்கு சஞ்சாரம் செய்ய இருக்கிறார். ஜன்ம குருவாக இருந்து பல காரியங்களை முடக்கி வந்த குருபகவான் தற்போது பெயர்ச்சி ஆவது மிகவும் நல்ல விஷயம். அதுவும் உங்களின் தன குடும்ப வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்ய இருக்க்கிறார் குருபகவான். மகர ராசியைச் சேர்ந்த வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்தப்பெயர்ச்சி என்ன மாதிரியான பலன்களை வழங்கும் என்பதை அறிந்துகொள்வோம்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

வியாபாரிகள்:

பொலிவிழந்து இருக்கும் கடை அல்லது வியாபாரதலத்துக்குப் புதுபொலிவு தருவீர்கள். உங்கள் விருப்பப்படி மாற்றி அமைப்பீர்கள். விட்டுப்போன வாடிக்கையாளர்கள் உங்களை மீண்டும் நாடி வருவார்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். பணியாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து பணி ஆற்றுவார்கள். தொழில் வரும் ஆங்கிலப் புத்தாண்டில் மிக லாபகரமாக மாறும். புதிய நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பும் தேடிவரும். கெமிக்கல், கமிஷன், ஹோட்டல், பைனான்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். கோபத்தில் பிரிந்து சென்ற பங்குதாரர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து உங்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

அலுவலகத்தில் எவ்வளவு உழைத்தாலும் மரியாதை இல்லாமல் இருந்ததே, மரியாதை இல்லை என்றாலும் உரிய சலுகைகளும் தடைப்பட்டு வந்து உங்களை மனச் சோர்வுக்கு ஆளாக்கியதே, இனி அந்த நிலை மாறும். பணியிடத்தில் உங்கள் மதிப்பு முன்புபோல் உயரும். மேலதிகாரிகள் தங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வார்கள். உங்களின் புதிய முயற்சிகளை ஊக்குவிப்பார்கள். வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடிவரும். உடன் பணி செய்பவர்கள் இனி உங்களோடு மரியாதையாகப் பழகுவார்கள். அலுவலகச் சூழல் மகிழ்ச்சியானதாக அமையும்.

குருபகவான்
குருபகவான்

கலைஞர்கள்: தட்டிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பல பணிகளை ஒரே நேரத்தில் ஏற்றுக்கொண்டு சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுக்காமல் முடியாமல் திணற வேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி இருந்த பிரச்னைகளிலிருந்து உங்களை விடுவித்து வசந்தமான வாழ்வுக்கு உங்களை வழிகாட்டுவதாக அமையும்.

பரிகாரம்: திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரை வணங்குங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு