Published:Updated:

`பற்று வரவில் கவனம்' - மீனராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மீனராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

13.11.2021 அன்று குருபகவான் மகர ராசியில் இருந்து பெயர்ச்சி ஆகி கும்ப ராசிக்குள் வருகிறார். இது மீன ராசிக் காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பதைப் பார்ப்போம். மகரம் என்பது தங்கள் ராசிக்கு 11 ம் வீடு. தற்போது குருபகவான் 11 ல் இருந்து விலகி 12 ம் இடமான விரையஸ்தானமான கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 13.4.2022 வரை அங்கேயே இருந்து பலன்தரப் போகிறார். இந்த அமைப்பு மீன ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் கலைஞர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்க இருக்கிறது என்பதைக் காணலாம்.

குருபகவான்
குருபகவான்

வியாபாரிகள்:

பற்று வரவுவில் கவனம் தேவை. வாடிக்கையாளர்களின் தோற்றத்தைப் பார்த்துக் கடன் கொடுத்து ஏமாற வேண்டாம். கொள்முதலிலும் அக்கறை தேவை. சந்தையில் தேவை அறிந்து பொருள்களைக் கொள்முதல் செய்யுங்கள். தள்ளுபடிச் சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்பீர்கள். பணியாளர்களால் சில பிரச்னைகள் வரலாம் என்பதால் கவனமாகக் கையாளுங்கள். கடையை விரிவுபடுத்த முயல்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேச வேண்டியது அவசியம். பங்குதாரர்கள் சிலர் தன் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

அலுவலகத்தில் எவ்வளவு உழைத்தாலும் அங்கீகாரம் கிடைக்காது. உங்கள் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் உருவாகும். அனைத்துக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். மேலதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். என்றாலும் பணிச்சுமை அதிகமாகவேயிருக்கும். சக ஊழியர்களின் தவறுகளைப் பெரிதுபடுத்திப் பொதுவில் பேசுவதைத் தவிருங்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதிவு உயர்வு ஆகியன கொஞ்சம் தாமதமாகவே கிடைக்கும்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

கலைஞர்கள்: வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் ஓயும். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி ஓய்வில்லாமல் உங்களைக் கடினமாக உழைக்க வைத்தாலும், அதற்கேற்ற உயர்வில்லையே என சில நேரங்களில் ஏங்க வைக்கும்.

பரிகாரம்: தஞ்சை மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு