Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22: மிதுனம் - ஒன்பதில் குரு... பணவரவு அதிகரிக்கும்!

மிதுன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

எதற்கும் மனம் தளராமல் எடுத்த காரியத்தை சிறப்பாக முடியும் மிதுனராசி அன்பர்களே!

தொட்டதில் எல்லாம் தாமதம். பணவரவில் பிரச்னை. வேலை செய்யும் இடத்திலும் நிறைய தொந்தரவுகள் என்று பல்வேறு சிக்கல்களில் சிக்கி கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்காதா என்று காத்திருக்கும் மிதுனராசிக்காரர்களுக்கு அற்புதமான ஒரு காலகட்டமாக அமைகிறது இந்த குருப்பெயர்ச்சி காலகட்டம்.

குருபகவான் இதுவரை உங்களின் எட்டாம் இடத்தில் இருந்த குருபகவான் 13.11.2021 அன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான கும்பத்தில் அடியெடுத்துவைக்கிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள். அந்த அளவுக்கு இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கப் போகிறது.

குருபகவான்
குருபகவான்

இனி உங்கள் வாழ்வில் அனைத்தும் மாறும். சோர்வாக இருந்த நீங்கள் உற்சாகமடைவீர்கள். நம்பிக்கை இழந்தும் காணப்பட்ட நீங்கள் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களின் பாக்கியஸ்தானமான கும்பராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் போது எல்லா வகையிலும் உங்கள் நலனை உறுதி செய்வதாகவே இருக்கும்.

உங்களுக்கு குருவின் ஸ்தான பலத்தைப்போலவே பார்வை பலமும் அனுகூலமாகும். குருபகவான் 5 ம் பார்வையாக உங்கள் ராசியையே பார்க்கிறார். இது மிகவும் நல்ல விஷயம். எப்போதும் புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். இதுவரை நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் பயன் இல்லை என்று புலம்புவீர்களே... இனி அவை அனைத்துக்கும் சேர்த்துப் பலன் வந்து சேரும். வருமானத்தில் கொஞ்சம் சேமிக்கவும் முடியும்.

குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் பிரச்னைகள் தீரும். மனம இலகுவாகும். கலகலப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். அதேபோன்று குருபகவானின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். செயல்களில் இருந்த தடங்கல்கள் விலகும். வெற்றிகள் குவியும். புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்டுவந்த குலதெய்வப் பிராத்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள். மகான்களின் சந்நிதானங்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள். அவர்களின் ஆசி கிட்டும். நண்பர்கள் உதவுவார்கள்.

குருப்பெயர்ச்சி பொதுபலன்கள்
குருப்பெயர்ச்சி பொதுபலன்கள்

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவான்:

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான காலகட்டங்களில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் இதுவரை இருந்த சின்னச் சின்னப் பிரச்னைகள் நீங்கும். இந்தக் காலகட்டத்தில் செயல்படும்போது கொஞ்சம் நிதானம் தேவை. பயணத்தின் போது கவனம் தேவை. புதிய வீடுமனை வாங்கும்போது மூலப்பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். சகோதர வகையில் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. யாரோடும் வாக்குவாதம் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சதய நட்சத்திரத்தில் குருபகவான்:

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள், தேவையற்ற பதற்றம், டென்ஷன் வந்து செல்லும். சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் கவனம் தேவை. வீட்டிலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர்களிடம் கடுமை காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான்:

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் தனது சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டியது அவசியம். வீண் கவலைகளைத் தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற விஷயங்களை வீட்டிலும் வெளியிலும் பேச வேண்டாம். பணிச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் ஏற்படலாம். எதற்கெடுத்தாலும் உறவுகளோடு சண்டைக்கு நிற்காதீர்கள்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சங்கடங்களிலிருந்து உங்களை மீட்பதாகவும் எதிர்காலத்தில் நிலை நிறுத்த உதவுவதாகவும் அமையும்.

பரிகாரத் தலம்: விருத்தாச்சலம்

வழிபட வேண்டிய தெய்வம்: விருத்தகிரீஸ்வரர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு