Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22: சிம்மம் - சச்சரவுகள் நீங்கி அமைதி பிறக்கும்!

சிம்ம ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

தலைமை குணமும் தணியாக உற்சாகமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீடு மகரம். இதுவரை மகரத்தில் நீசமடைந்து சஞ்சாரம் செய்துவந்த குருபகவான் தற்போது பெயர்ச்சி ஆகி கும்பத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்கள் செயல்களுக்கெல்லாம் முட்டிக்கட்டை போட்டு வந்த குருபகவான் தற்போது ஏழாம் வீட்டுக்கு நகர்வது மிகவும் நல்ல அமைப்பாகும்.

13.11.2021 அன்று ஏழாம் வீட்டுக்குப் பெயர்ச்சி ஆகும் குருபகவான் 13.4.2022 வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து பலன் வழங்க இருக்கிறார். இதனால் குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். குருபகவான் பார்வை உங்கள் ராசியின் மீது படுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனி குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். ஈகோ பிரச்னைகளால் பிரிந்திருந்த கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த சமாதானம் ஏற்பட்டு ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த சிம்ம ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய வீடுவாங்கும் முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். நீண்ட காலத்துக்குப் பின் விரும்பிய ஊர்களுக்குச் சென்று ஆலய தரிசனங்கள் செய்வீர்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும்.

சிம்மம்: குருவித்துறை குருபகவான்
சிம்மம்: குருவித்துறை குருபகவான்

குருபகவான் உங்கள் ராசிக்கு 11 ம் வீட்டைப் பார்ப்பதால் இனி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும். சகோதர உறவுகளால் நன்மைகள் கிடைக்கும். அவர்களோடு இருந்த வருத்தங்கள் நீங்கும். தங்க ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் உறவினர்கள் உதவுவார்கள். பேச்சில் இனிமை பிறக்கும்.

உங்கள் ராசிக்கு 3 - ம் வீடான துலாத்தை குருபகவான் பார்ப்பதால் உயர்பதவிகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். திருவிழாக்களில் மாலை மரியாதைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள், இதுவரை இருந்த நிலைமை மாறித் தலைமைக்கு நெருக்கமாவார்கள். உங்கள் மீது எதிர்கட்சிக்காரர்கள் சுமர்த்திய வீண் பழி விலகும்.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் உங்களின் வசதி வாய்ப்புகள் கூடும். குடியிருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். அதற்கான வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். பழைய சொத்துகளை நல்ல விலைக்கு விற்பீர்கள். கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். உறவுகள் பழைய சண்டைகளை மறந்துவிட்டு நல்லுறவு பாராட்டுவார்கள்.

குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்!
குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்!

சதயம் நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

31.12.2021 முதல் 02.03.2022 வரை குருபகவான் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் பெரிய திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் துணிந்து முடிவெடுத்துத் தீர்ப்பீர்கள். பிறமொழி பேசுபவர்களால் நன்மைகள் ஏற்படும். வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதில் சஞ்சாரம் செய்வதால் பணவரவு அதிகரிக்கும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். இருந்தாலும் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற அலைச்சலை மேற்கொள்ள வேண்டிவரும். அதிகப்படியான செலவுகளும் ஏற்படலாம்.

கர்ப்பிணிகள் இந்தக் காலகட்டத்தில் தங்களின் உடல் நலத்தில் ஆரோக்கியத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. உறவுகளிடையேயும் கொஞ்சம் அனுசரணையோடு நடந்துகொள்வது நல்லது. தேவையற்ற சிக்கல்கள் தோன்றும். திடீர் பயணங்கள், செலவுகள் ஏற்படலாம். பயணத்தின் போது உரிய பாதுகாப்பு அவசியம். வாகனங்களில் செல்லும்போது கவனக் குறைவில்லாமல் பயணிக்க வேண்டியது அவசியம்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி வளமான வாழ்வுக்கு அடித்தளம் இடும் காலகட்டமாகவும் மன அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் தருவதாக அமையும்.

பரிகாரத் தலம்: திருவலிதாயம்

வழிபட வேண்டிய தெய்வம்: குருபகவான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு